Home இரகசியகேள்வி-பதில் பூப்படைதல் முந்துதல் பிந்துதல் விந்து பிரச்னைகள் டாக்டர் பதில்

பூப்படைதல் முந்துதல் பிந்துதல் விந்து பிரச்னைகள் டாக்டர் பதில்

485

கேள்வி பதில்கள்:விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?

இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.

விதைப்பைகளை சுற்றியிருக்கும் குளிரான வெப்பநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் இந்த எளிமையான மாற்றம் ஆண்களின் ஆண்மைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

‘மூளை விந்தணு உற்பத்தியை தூண்டுகிறது’

விந்தணு உற்பத்தி 34 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையில் பாதிக்கப்படுமென அறியப்படுகிறது. அதனால்தான் உடலுக்குள் இல்லாமல் விதைப்பை தனியாக தொங்கி கொண்டிருக்கிறது,

உள்ளாடைகள் (ஜட்டி) சில, விதைப்பையை உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். இதனால் விரைகளை சுற்றிய வெப்பநிலை அதிகரிக்கிறது.

ஆனால், பாக்சர் போன்ற வேறு சில உள்ளாடைகள் விதைப்பையை தளர்வான இருக்க செய்து, குளிரான வெப்பநிலையை பாதுகாக்கின்றன.

—————————————————-
பூப்படைதல்- முந்துவதாலும், தாமதமாவதாலும் என்னென்ன பாதிப்புகள்?

பூப்படைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்வியலில் முக்கிய அங்கம் தான். ஆனால் சரியான காலத்தில் பூப்படைதல் நிகழ்வது முக்கியம். சிலகுழந்தைகள் 8 அல்லது 9 வயதில் பூப்படைவதும், வேறு சில குழந்தைகள் 15 வயது தாண்டியும் பூப்படையாமல் இருப்பதும் ஒருசேர காணமுடிகிறது. இவற்றுக்கான காரணங்கள் என்ன? இந்த விரைவான அல்லது தாமதமான பூப்படைதல் நிகழ்வு எங்ஙனம் குழந்தைகளின் மனோநிலையைப் பாதிக்கின்றன. இவ்வகையான பூப்படைத்தலை தவிர்க்க குழந்தைகளுக்கு பழக்கப்படவேண்டிய உணவுமுறைகள் குறித்து பேசலாம்.

சிறு வயது பூப்பெய்துதலுக்கான காரணங்கள்:

I. சுற்றுச்சூழல் காரணங்கள்

II. மரபியல் காரணங்கள்

I. சுற்றுச்சூழல் காரணங்கள்:

சுற்றுச்சூழல் காரணிகளுள் முக்கிய இடம் பிடிப்பது அவர்களின் உணவுமுறை.
1. பால் பொருட்கள்:

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சிறுவயதில் அதிகம் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாக பூப்பெய்துகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இப்படி அதீதமாய் பாலூட்டி வளர்த்த கிளிகள் தான் பாவம் சிறு வயதிலேயே பூப்படைகின்றனர்.

பால் மட்டுமல்ல, பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். அளவுக்கு அதிகமாய் மில்க் சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தர வர்க்கத்தில் அதிகம்.

ஓவர் வெயிட்டாக இருக்கும் குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றனர் என்கிறது ஆய்வு. இது போன்ற குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் மறுசுழற்சி அடைவதில்லை எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், சீக்கிரம் பூப்பெய்துவதற்கும் அதிகப்படியான இடையே முக்கியக்காரணம்.

மாட்டுப்பாலினால் ஏன் தீமை?

மாடு கூடுதலாகப் பால் பீச்ச RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA எனப்படும் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்கு ஆணையமே அங்கீகரித்திருக்கிறது.இந்த ரசபக்ஹ் (recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.

2. பிராய்லர் கோழி :

தற்போது பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8 வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்.காரணமாகின்றன . பகட்டாக இருக்கும் கோழிக்கடைகளில் வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவது நாகரீகமென்று ஆகிவிட்டது. அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நாட்டுக் கோழியை கொடுக்கலாம் அதுவும் அளவோடு. வளரும் பிள்ளை தானே என்று அளவுக்கு அதிகமாய் கொடுக்கும் எதுவும் ஆபத்தே.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட விலங்கு இறைச்சிகளில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது வாடிக்கையானதாகிவிட்டது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. melnaattu உணவுகள் இறக்குமதி செய்வதில் இப்போது தான் இந்தியம் paduvekam காட்டுகிறதே. எனவே நம் குழந்தைகளின் நோயும் அதே வேகத்தில் தான் வருகிறது.

4. ஓட்ஸ் உணவுகள்:

வணிக உத்திகள் காரணமாக எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வேலைக்கு செல்லும் பல தாய்மார்களின் தேசிய உணவு இது தான். ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் மெலியும் என்ற அர்த்தமற்ற செய்தியும் விரைவாகப் பரவுகிறது . இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் ஓட்ஸ் உள்ளது.

II. மரபியல் காரணங்கள்:

மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது விரைவான பூப்படைதலுக்கு ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும்).

விரைவான பூப்பால் நேரிடும் பெரும் அபாயம்:

மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது மார்பகப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

மருத்துவ ரீதியில் வகைப்படுத்தப்பட்ட காரணிகள்:

பெண்கள் அதிவிரைவில் பூப்படைவதை மருத்துவரீதியாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். பிட்யூட்டரி சுரப்பி சார்ந்து வருவதை, `சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Central precocious puberty) என்றும், பிட்யூட்டரி சுரப்பி தொடர்பு இல்லாமல், நேரடியாக ஹார்மோன் தொந்தரவுகளால் வருவதை `பெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Peripheral precocious puberty) என்றும் வகைப்படுத்தலாம்.

இவ்வகையான பிட்யூட்டரி சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஒழுங்கற்ற உணவுமுறையும் வாழ்வியலுமே காரமென்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தாமதித்த பூப்படைதல்:

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், இயக்கங்கள், தூண்டுதல்கள் அனைத்திற்கும் ஹார்மோன்களே மூல காரணங்களாக இருக்கின்றன. ஹார்மோன்களுக்கே தலைபோல் விளங்குவது, பிட்யூட்டரி என்ற சுரப்பி. இதை மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதி கட்டுப்படுத்துகிறது.

இது நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச் செய்கிறது. பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம் பிக்கும். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச்செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும். சினைமுட்டைகளைத் தூண்டி முதிர் வடையச் செய்யும். இன்னொரு ஹார்மோன் முதிர்ந்த முட்டையைவெளியிடச் செய்யும். பூப்படையும் பருவத்தில் பெண் ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பில் ஏற்படும் அளவு வேறுபாடும் பூப்படைதலை பாதிக்கிறது.

உடல் பலகீனம், ரத்த சோகை, காலையில் பாதம் வீங்குதல்- மாலையில் கணுக்காலில் வீங்குதல் போன்ற கோளாறு கொண்ட பெண்களும் பூப்படைவது தாமதமாகும்.

தன்னுடன் படித்த எல்லா பெண்களும் பூப்படைத்தவர்களாக இருக்கும் போது, தாமதமாய் பூப்படையும் குழந்தையிடம், “தனக்கு எதுவும் நோய் வந்துவிட்டதோ” என்ற பயம் வருவது இயல்பு. எந்த குழந்தைக்கும் அதே நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, சரியான சிகிச்சை பெறுவதன்மூலம் பூப்படைதல் சாத்தியமாகும்.

மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதானால், முறையான பூப்படைதலுக்கு உணவுமுறையும், வாழ்வுமுறையுமே முக்கியம். `அதிகமாகப் பழங்களையும் காய்களையும் சாப்பிடுவதால், பூப்பெய்தல் முறைப்படுத்தப்படும்’ என்கிறது `தி நியூ பியூபெர்ட்டி’ (The New Puberty) எனும் ஆய்வுப் புத்தகம். இளம் வயது முதலே நொறுக்குத்தீனிகளுக்குத் தடைவிதித்து, இயற்கையான பழங்களையும் காய்களையும் சாப்பிடச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை அதிக நாள்களுக்கு அருந்திய குழந்தைகளுக்கும், பூப்படைதல் சரியான வயதில் நடைபெறும்’ என்கிறது அதே ஆராய்ச்சி. குறைந்தது ஒரு வருடமாவது பள்ளிகளிலும், வீடு திரும்பிய பின்னர் மாலை வேளைகளிலும் ஓடியாடி விளையாடும்படி குழந்தைகளை ஊக்கப்படுத்துவது முக்கியம் . இளம் வயதில் உடல் பருமன் ஏற்பட்டு, ஹார்மோன் சீர்கேடுகள் உண்டாவது பெருமளவில் தடுக்கப்படும். மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகள் வளர்வதும் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும் குழந்தைகளின் பருவமடைதல் காலத்தை முறையற்றதாக்கும்.