Home இரகசியகேள்வி-பதில் எனக்கு உறவின்போது உச்சம் வருவதில்லை கூச்சமாக இருக்கிறது

எனக்கு உறவின்போது உச்சம் வருவதில்லை கூச்சமாக இருக்கிறது

408

doctor answer for teen:கேள்வி:
நான் திருமணமான பெண். வயது 24. திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. எனக்கு உறவின்போது உணர்ச்சி வருவதில்லை. பதிலாகக் கூச்சம்தான் வருகிறது. உறவில் ஈடுபடும்போது ஒரு வித சுகம் கிடைக்கும் என்பார்கள். அது எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. உறவில் எனக்கு விருப்பமும் ஈடுபாடும் உண்டு என்றபோதும் அந்தச் சுகத்தை நான் அனுபவிக்க முடியவில்லை. நான் பூப்பெய்திய சில காலங்களின் பின் எனக்கு வெள்ளைப்படுதல் இருந்து வந்தது. கடந்த மூன்று வருடங்களாக அது சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனால் துர்நாற்றமும் அரிப்பும் இருக்கிறது. இடுப்பைச் சுற்றிலும் ஒரு வலியும் இருக்கிறது. இதுதான் எனது சுகமின்மைக்குக் காரணமா? இதைத் தவிர்த்து, சுகத்தை உணரும் வகையில் உறவில் இணைவதற்கு ஏதேனும் மருந்து மாத்திரைகள் இருக்கின்றனவா? இருந்தால் அவை பற்றிக் குறிப்பிடவும்.

பதில்:
அவசரம் வேண்டாம்!
வெள்ளைப்படுதலை உறவின்­பாலான ஈடுபாட்டுக்கு ஒரு அடையாள­மாகச் சொல்வார்கள். உங்கள் விடயத்தில் அது உண்மை­யாகவே இருக்கிறது. உறவின்போது கூச்சம் இருக்கும் வரை அந்த உச்ச­பட்ச இன்பத்தை எப்படி உங்களால் நுகர முடியும்? நிச்சயமாக முடியாது!

பெண்ணின் கூச்சத்தைக் களைய வேண்டியது ஆணின் பொறுப்பு. அதைச் சரிவரச் செய்துவிட்டாலே நீங்கள் விரும்பும் சுகம் உங்களுக்குக் கிட்டலாம். எனவே, உங்களது கண­வரின் பாலியல் நடத்தையில், உங்கள் தேவைகளை எடுத்துக் கூறியோ அல்லது உடல் மொழியின் மூலம் உணர்த்தியோ நீங்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

உங்களது இன்ப ஊக்கிப் புள்ளிகள் உடலில் எங்கெங்கு இருக்கின்றன என்பதை அவருக்கு உணர்த்துங்கள். அதன் மூலம் அவர் உங்களது கூச்சத்தைக் களைய வழி கிடைக்கும். இது, உங்களது சுக அனுபவத்துக்குப் பாதை அமைக்கும்.
மேலும், இடுப்பைச் சுற்றிலும் வலி என்று கூறியிருந்தீர்கள். அது என்ன என்பதை வைத்திய பரி­சோதனையின் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், இப்போதுதான் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறீர்கள். குழந்தை குட்டி என்று இல்லறத்தில் நீங்கள் செல்லவேண்டிய பாதை மிக நீளமானது.
———————————————————-
துணை பீரியட்ஸ் நாட்களில் இருந்தால் ஒருபோதும் இந்த தவறுகளை செய்துவிட வேண்டாம்.

அறியாதிருப்பது

பெரும்பாலும் ஆண்கள் துணை பீரியட்ஸ் நாட்களில் இருக்கும் போது செய்யும் முதல் தவறே இது தான்… “நீ பீரியட்ஸ்ல இருக்கியா?” என்று கேட்பார்கள். குறைந்தபட்சம் பெண் தனது துணையிடம் எதிர்பார்க்கும் விசயம் இது தான். பிறந்தநாள் மறந்தால் கூட பரவாயில்லை, எனக்கு எப்போது பீரியட்ஸ் வரும் என்பதை கூடவா அறிந்துக் கொள்ள முடியாது என்ற நிலை பெரும் கோபத்தை உண்டாக்கும். முக்கியமாக அந்த நாட்களில். திட்டமிடல்… மாதம் முழுக்க எந்த திட்டமிடலும் இன்றி… சரியாக துணைக்கு பீரியட்ஸ் ஸ்டார்ட் ஆன போது அல்லது, இடைப்பட்ட பீரியட்ஸ் நாட்களில் எங்கேனும் வெளியே போகலாம் என்று திட்டமிடுவார்கள். இது மனைவிக்கு எத்தகைய கோபத்தை உண்டாகும் என்பதை ஏனோ கணவன்மார்கள் அறிந்துக் கொள்வதே இல்லை.

ஏன்? எதுக்கு?

வேறு எப்போது மனைவி கோபப்பட்டாலும் சொரணையே இல்லாமல் அசால்ட்டாக ஏற்றுக் கொள்ளும் ஆண்கள், துணை பீரியட்ஸ் நாட்களில் இருக்கும் போது கோபப்பட்டால் மட்டும் திடீரென ரியாக்ட் செய்து திருப்பி திட்டுவார்கள், கோபித்துக் கொள்வார்கள். உண்மையில் ஆண்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய
நாட்களே பெண்களின் பீரியட் நாட்களில் தான்

மூட் ஸ்விங்!

பீரியட் நாட்களில் பெண்களுக்கு மூட் ஸ்விங்ஸ் என்ற ஒன்று அதிகமாக ஏற்படும். ஏன், எதற்காக? அவர்கள் அப்படி கோபப்படுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அநாவசியமாக, தேவையே இல்லாமல் கூட கோபித்துக் கொள்வார்கள், திட்டுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் அல்ல… அந்த மூட் ஸ்விங்ஸ் தான். எனவே, இதை புரிந்துக் கொண்டு பீரியட் நாட்களில் துணை கோபப்பட்டால்… அமைதி காக்க பழகிக் கொள்ளுங்கள்.

நல்லாதான இருக்க?!

மற்ற நாட்களில் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கேட்டால்… வேண்டுமென்றே அது நொட்டை, இது நொட்டை என்று குற்றம் குறை கூறும் ஆண்கள். சரியாக மனைவி பீரியட்ஸ் தினங்களில் இருக்கும் போது நீ நல்லா தானா இருக்க, என்ன ஆச்சு என்று வம்படியாக வந்து நலம் விசாரிப்பார்கள். ஆனால், பார்க்க எவ்வளவு பிரஷாக இருந்தாலுமே கூட, பீரியட்ஸ்ன் அந்த முதல் இரண்டு நாட்கள் பெண்கள் மிகுந்த வலியுடன் தான் இருப்பார்கள். எனவே, அந்த வேளையில் போய், நல்லா தான இருக்க என்று நலம் விசாரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக எப்படி இருக்க, ஏதாவது பண்ணட்டுமா என்று நலம் விசாரியுங்கள்.

என்ன டின்னர்?

இந்த தவறை முதல் இரண்டு நாட்களாவது குறைத்துக் கொள்ளலாம்… மனைவி உடல்நலம் குன்றி இருந்தாலும், நாம் அவரிடம் தான் நாளைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட், இன்னைக்கு டின்னர் என்ன என்று கேள்வி கேட்போம். பீரியட் நாட்களில் அவர்களிடம் ஏன் வீடு சுத்தமாக இல்லை, அடுத்த வேளை உணவு என்ன என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். முடிந்தால் நீங்களே சமைத்து கொடுங்கள். இல்லையா ஹோட்டலில் வங்கி வந்து கொடுங்கள். பெரும்பாலும் பெண்கள் சமைத்து வைத்து விடுவார்கள். ஆனால்., மிகுந்த இடுப்பு வலி ஏற்படும் போது அவர்களால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க இயலாது. எனவே, அந்த சமயத்தில் இப்படியான கேள்விகள் நிச்சயம் தவிர்கப்பட வேண்டும்.

அரவணைப்பு

சிலர், சில வீடுகளில் பீரியட்ஸ் நாட்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கு என்று தனி பாய், படுக்கை, போர்வை, தலையணை என்று பயன்படுத்துவார்கள். அவை அனைத்துமே பழையதாக தான் இருக்கும். இதை சில பெண்கள் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், சில சமயம் தங்களை ஏன் இப்படி ஒதுக்குகிறார்கள் என்ற எண்ணம் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். முடிந்த வரை எப்போதும் போல அந்த நாட்களிலும் துணையை அரவணைப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் கொஞ்சம் கூடுதல் அரவணைப்புடன்.

கலவுதல்

பீரியட்ஸ் ஒரு வலி என்றால், தன் வலியை கூட புரிந்துக் கொள்ளாமல், அந்த நாட்களிலும் துணை தாம்பத்தியத்தில் இணைய வேண்டும் பொழுது பெண்கள் மனதில் ஏற்படும் வலியானது மிகவும் கொடியது. பீரியட்ஸ் நாட்களில் மட்டுமல்ல, துணை விருப்பமின்றி, அவரது மனநிலை, உடல்நிலை அதற்கு உகந்த சூழலில் இல்லாத தருணங்களில் கலவியில் ஈடுபடுதல் என்பது முற்றிலும் தவறானது.

——————————————–
கேள்வி
நான் ஒரு ஆண். எனக்கு வயது 24. நான் வேற்று இனப் பெண்ணைக் காத­லிக்­கிறேன். எனது வீட்டில் பல கார­ணங்­களை முன்வைத்து எமது திரு­ம­ணத்­துக்கு விருப்பம் தெரி­விக்க மறுக்­கி­றார்கள். அவர்கள் கூறும் கார­ணங்கள் உண்­மை­யா­ன­வையா என்று தெரிந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

பதில்
இல்லை!
உங்கள் வீட்டார் குறிப்­பிட்­டி­ருக்கும் கார­ணங்­களை இங்கே பட்­டி­ய­லிட்டால் தேவை­யற்ற சர்ச்­சைகள் ஏற்­படும். கேள்வி உங்­க­ளது ஆகையால், பதில் உங்­க­ளுக்கு மட்டும் புரிந்­தால்­கூடப் போது­மா­னது.
எல்லா இனத்­திலும் எல்லா சம­யங்­க­ளிலும் எல்லா மொழி­க­ளிலும் உங்கள் பெற்றோர் கூறு­வதைப் போன்ற பண்­பற்ற பழக்­க­வ­ழக்­கங்கள் கொண்­ட­வர்கள் -ஆண்­களோ, பெண்­களோ – இருக்­கத்தான் செய்­கி­றார்கள். அந்த இனத்­தவர் அப்­ப­டித்தான் என்று பொது­வாக முத்­திரை குத்­தி­விட முடி­யாது, குத்­தி­விடக் கூடாது.

அன்பும் பாசமும் அன்­னி­யோன்­யமும் இனத்தால் அன்றி மனத்தால் வரு­வது. உங்கள் மனை­விக்கு நீங்கள் எவ்­வ­ளவு நேர்­மை­யா­கவும் விசு­வா­ச­மா­கவும் மிக முக்­கி­ய­மாக, அன்­பா­கவும் இருக்­கி­றீர்­களோ, அதே­ய­ளவு அன்பும் விசு­வா­சமும் நேர்­மையும் உங்கள் மனை­வி­யிடம் இருந்து உங்­க­ளுக்குக் கிடைக்கும். அவர் எந்த இனத்தவராக இருந்தாலும்!

பற்பல ஆண்டுகளுக்கு முன், உங்கள் பெற்றோர் கூறியதன்படி நடந்ததுண்டு. எனினும், கால மாற்றத்தில் பிரிவுகள் மறைந்து, உலகமயமாக்கலின் விளைவாக ‘அனைவரும் ஒன்றே’ என்ற நிலை ஏற்பட்டிருப்பதால், பொதுவாக ஒரு சமூகத்தினரை நல்லவர்கள் என்றோ, தவறானவர்கள் என்றோ அடையாளப்படுத்திவிட முடியாது.
ஆனால், உங்களது கேள்வி வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. உங்கள் காதல் உண்மையாக இருந்திருந்தால் இதுபோன்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்காது.

எனவே, உங்களைத் திருமணம் செய்துகொண்டால் தனது வாழ்க்கை இனிக்குமா என்று உங்களது காதலிதான் எண்ணிப் பார்க்க வேண்டும்.