Home இரகசியகேள்வி-பதில் இளம் ஆண் பெண் பாலியல் ஆரம்பம் தொடர்பான டாக்டர் சொல்லும் பதில்

இளம் ஆண் பெண் பாலியல் ஆரம்பம் தொடர்பான டாக்டர் சொல்லும் பதில்

484

டாக்டர் கேள்வி பதில்கள்:பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது தன்னை வெளிபடுத்துவதாகும். இது சிந்தனைகள், உணர்வுகள், பாலியல் என்பவற்றை உள்ளடக்கியது.

பாலியல் சுகாதரம் என்றால் என்ன?

ஒருவரின் பாலியல் உணர்வுகளை, இலிங்க நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற பிரசவங்கள் இன்றி வெளிப்படுத்துவதாகும்.

பால் என்றால் என்ன?

ஒருவரின் உயிரியல் சம்பந்தமானவை

கட்டமைப்பு: மார்பகம்,யோனி(பெண்), ஆண்குறி,விதை(ஆண்).
தொழிற்பாடு: மாதவிடாய் சச்சரம்(பெண்), விந்துற்பத்தி(ஆண்).
பிறப்புரிமை: XX (பெண்), XY (ஆண்).

பாலியல் விருப்பு என்றால் என்ன?

அடுத்த பாலுடனான, அதே பாலூடான (தன்னின சேர்க்கை), இருபாலாருடனான ஈர்ப்பு.

பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன?

ஒருவரின் பாலியலை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை.
உ+ம் தொடுதல, முத்தமிடல்…

பாலியல் சக்கரம் என்றால் என்ன?
பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் தொழிற்பாட்டு மற்று உளரீதியான மாற்றங்கள்.

இது 4 நிலைகளை கொண்டது…

தூண்டப்படுதல்..
இது சில நிமிடங்கள் முதல் பல மணித்தியாலங்கள் வரை காணப்படலாம். இதன் போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். தசை இழுவையிலும் இலிங்க அங்கங்களுக்கான் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
பெண்களில் முலை காம்புகள் நேராகும், மற்றும் பார்பகங்கள் பெருக்கும். ஆண்களில் விதைகள் வீங்கும்
சமனிலை
முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..
உச்ச கட்டம்(Orgasm)
பாலியல் உணர்வுகளின் தீடிர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் யோனி இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.
முதன்மை நிலை..
உடல் படிப்படியான அதன்ஆரம்ப நிலைக்கு செல்லும்.
ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தின் பின் நேர அவகாசம் தேவை.
பெண்களுக்கு பல உச்சக்கட்டங்கள் அடைய்லாம்.
பாலியல் பிரச்சினைகள்

ஆண்

முன்கூட்டிய வெளியேற்றம்.
நேராகல் பிரச்சினை.
பெண்

யோனி இறுக்கம்.
இருபாலாரும்
இன்பம் குறைவு.
உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை.

முன்கூட்டிய வெளியேற்றம். (Premature Ejaculation)

முன்கூட்டிய வெளியேற்றம் என்றால் என்ன?

ஆண் மற்றும் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் சுக்கில பாய்பொருள் வெளியேறுதல். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களில் பொதுவான ஒரு பிரச்சினை ஆகும்.

எதானால் எற்படுகிறது?

மன உளைச்சல்.
பதற்றம்
தொடர்புகளில் பிரச்சினை.
அனுபவமின்மை.
பலம்.
எப்போது வைத்தியரை நாட வேண்டும்?

இது ஒரு பொதுவான விடயம் ; நீங்கள் தணித்து விடவில்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை தொடந்து இருப்பின் வைத்தியரை நாடவும்.

சிகிச்சை முறைகள
1. தியான முறை..
2. பாலியல் சிகிச்சை.
இரண்டுவகை

ஆரம்பம்-முடிவு முறை.
உஙகள ஆண்குறியை தூண்டி உச்ச கட்டம் அடையும் நிலையில், நிறுத்தி30-60 விநாடிகளில் பின் மீண்டும் தூண்டுக. இவ்வாறு 5-6 முறை செய்யலாம்.
அமுக்கும் முறை.
ஆண்குறியை தூண்டி உச்ச கட்டம் அடையும் முன் நீங்களும், உஙகள் துணையும் ஆண்குறியை அழுத்தி பிடிக்க. இதன்போது ஆண்குறியின் தலையின் கீழாக பெருவிரல் மூலம் அமுக்கி சுக்கில பாய்பொருள் வெளியேறுவதை தடுக்கலாம்.

மருந்துகள்.
மன அழுத்தத்திற்கான மருந்துகளை வைத்தியர்கள் தரலாம். இது வைத்தியரின் முடிவாகும். ஆணுறை அணிதல், பூச்சுக்களை பாவித்தல் வேறு சில முறைகளாகும்.

நேராகல் பிரச்சினை(impotence)

நேராகாமை என்றால் என்ன ?

தகுந்த் பாலியல் உறவை கொள்ள ஆண்குறி சரியாக நேராகவில்லை எனின் அது நேராகாமை ஆகும். வயதானோரில் இது பொதுவாகும்.

இதற்கான காரணங்க்ள் என்னென்ன?

இது பொளதீக காரனிகளாலும், உள ரீதியான காரணிகளாலும் ஏற்படலாம்.

பொளதீக காரணிகள்.
நீரிழிவு நோய்
ஆண்குறிக்கு செல்லும் குருதியோட்டத்தில் குறைவு. உ+ம் புகைத்தல்..
தொடர்ச்சியான மது பாவனை.
சில மருந்துகளின் பக்கவிளைவு.
நரம்பு தொகுதி பிரச்சினைக்ள்.
அடிவயிற்று சத்திர சிகிச்சை.

உளரீதியான காரணங்கள்.
தொடர்புகளில் பிரச்சினை.
மன உளைச்சல்/ பதற்றம்.
மன அழுத்தம்..
பாலியல் உணர்வு குறைவு.

இதை எவ்வாறு தடுப்பது?

ஒரு சுகாதாரமான வாழ்க்கை முறை வாழவேண்டும். புகைத்தல், மது அருந்துதல் தவிர்க்கப்படவேண்டும். நிரந்தர உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த உணவுகள் கொழுப்பு படிவினை குறைக்கும்.

வைத்திய்ரை நாடுவது எப்போது?

பிரச்சினையை கண்டவுடன் வைத்தியரை நாடுவது நல்லது. ஏனெனில் சிகிச்சைமுறைகள் மூலம் இப்பிரச்சினையை குணப்படுத்தலாம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன ?
சுகாதாரமான வாழ்க்கை முறை.
புகைத்தலை நிறுத்தவும்.
மது பாவனையை குறைக்கவும்
தொடர் உடற்பயிற்சி.
சமனிலையான உணவு.

உள்ரீதியான பக்கபலம்.
என்ன காரணமாயிருந்தாலும், உளரீதியான பாதிப்புகளை குறைக்க ஆலோசனை நேரங்கள் உறுதுணையாக இருக்கும்.

வில்லைகள்
ஆண்குறிக்கான குருதியோட்டத்தை அதிகரிக்க பல மருந்து வகைகள் உள்ளன. உ+ம் Sildenafil, Taldenafil.
இதன் முக்கியமான பக்கவிளைவு தலைவலி, மற்றும் முகம் சிவந்து போதல் ஆகும்.இந்த வில்லை Nitrrs எனும் வில்லைகளுடன் எடுக்ககூடாது.

மூலம் சிகிச்சை
இது ஒரு நம்பகரமான முறையாகும். இதன் ஒரே ஒரு கேடு- உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஊசியை போட வேண்டும். இதுவும் ஆண்குறிக்கு குருதியோட்டத்தை அதிகரித்து நேராக்கலுக்கு உதவும்.
USE(மருந்தூட்டப்பட்ட நேராக்கல்)
ஆண்குறி துளையினுள் சிறிய வில்லை ஒன்று உட்செலுத்தப்பட்டு, அதன் மூலம் ஆண்குறிக்கான குருதியோட்டம் அதிகரிக்கும்.

வெற்றிடப்பம்பிகள்.
பிளாஸ்டிக் உருளைகளுள் ஆண்குறி இடப்பட்டு, வளி வெளியே பம்பப்பட்டு வெற்றிடம் உருவாக்கப்படும். இதனால் ஆண்குறி இரத்ததால் நிரம்பும்.
ஆண்குறி போன்றவை
இது சத்திர சிகிச்சை மூலம் ஆண்குறியினுள் பொருத்தப்படும்
வேறு நோய்கள் இருப்பின் அவற்றை திருத்தவும்.
உ+ம் நீரிழிவு நோய்.

யோனி இறுக்கம் Vaginismus

யோனி இறுக்கம் என்றால் என்ன?

உடலுறவின் போது பெணகளின் தன்னிச்சையான தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின் போது வலி எற்படும். சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே செலுத்தமுடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.

இது இளம் பெண்களுக்கு பொதுவாக காணப்படும்.

எதானால் எற்படுகிறது?

இது ஒரு தனிக்காரணியால் ஏற்படுவது அல்ல. பல காரணிகளின் சேர்க்கையே.

உள ரீதிலான காரணங்கள்.
பதற்றம்/ மனஉளைச்சல்
குழந்தை பருவ அனுபவங்கள்.
வலி மீதான பயம்.
கர்ப்பமடைந்திருத்தல்.
பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள்.
கற்பழிப்பு, போன்ற பழைய அனுபவங்கள்.

பொளதீக ரீதியான காரணிகள்..
குழந்தை பிறப்பு.
ஓமோன் மாற்றங்கள்.
மாதவிடாய் நிறுத்தம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

இது உடல்/உள ரீதியாக குணப்படுத்தலாம். ஆலோசனை நேரங்களை ஒதுக்கி பிரச்சினைகளை கதைப்பதன் மூலம, அனேகமான நேரங்களில் பிரச்சினையை தீர்க்கலாம்.
மன அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க் வேண்டும்.
விரல்களால் அல்லது வேறு உபகரணங்களால் சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம்.

பாலியல் ஆசை குறைவு.
இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.

எதனால் எற்படுகிறது?

பல காரணங்கள்.
தொடர்பில் பிரச்சினை
மன் அழுத்தம்.
ஒரு துணையுடன் வெறுத்துப்போதல்
களைப்பு
மன உளைச்சல்
தொடர்பாடல் பிரச்சினைகள்.
இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு.
பழையகஷ்டமான அனுபவங்கள்

நோய்கள்
நித்திரை குறைவு.
ஒமோன் குறைபாடு.
தெஸ்தெஸ்திரோன் குறைவு.

தடுப்பது எவ்வாறு?
தூக்கத்தை கூட்டலாம்.
மன உளைச்சலை குறைக்கவும்
தொடர்பில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு.
பாலியல் வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள்.

எப்போது வைத்தியரை நாட வேண்டும்?
உங்கள் ஆசை குறைவு மூலம் கணவன் – மனைவி தொடர்பில் பிரச்சினை எற்படின்
வேறு நோய் அறிகுறிகள்- களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல்.

சிகிச்சை முறைகள் என்ன?
உங்கள் துணைவியிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும் நல்ல முடிவுக்கு வரவும்.
இருவருக்கும் பாலியல் ரீதியான ஆலோசனை வழங்கலாம்.