Home சூடான செய்திகள் விநோத உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விசித்திர உண் மைகள்!

விநோத உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விசித்திர உண் மைகள்!

157

வாழ்க்கை முழுவதும் ஒரே வேலையை ஒரே ஸ்டைலில் செய் வது சிலருக்கு பிடித்தமான தாக இருக்கலாம். ஆ னால், சிலருக்கு அது “போர்” அடிக்கும் ஒரு விஷயம். ஸ்டைலை மாற்றிக் கொண் டே இருப்பார்கள். அதேபோலத்தான் செக்ஸ் விஷயத்திலும்! ஆண், பெண் பிறப்புறுப்புகளைப் பயன்படுத்தி
செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் பெறுவதில் ஆர்வ முடையவர்கள் ஒரு வகை என்றால்… விதவித மான ஸ்டைலில் உறவு கொண்டு இன்பம் துய்க்கப் பார்ப்பவர்கள் இன்னொரு வகையினர். பிறப்புறுப்புக் களைப் பயன்படுத்தி செக்ஸ் உறவு கொள்வதுதான் இயல் பான அதாவது நார்மல் செக் ஸ் (Normal Sex) என்று உலக மக்களில் கணிசமான பேர் நினை த்துக் கொண் டிருக்கிறார்கள். உண்மையில் அது அப்படித் தானா என்பதைப் ப ற்றி பிறகு பார்க்கலாம். அதற்கு முன்பு, இயல்புக்கு மாறான அதா வது “அப்நார்மல் செக்ஸ்” (Ab normal Sex) பற்றி சில விஷய ங்களைப் புரிந்துகொள்வது மிக அவசியம்!
காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் செக்ஸ் செயல்பாட்டின் போது சிலருக்கு வித்தியாசமான, சமுதாய மும் சட்டமும் ஏற்றுக் கொள்ளாத செக்ஸ் தூண்டுதல் தேவைப்படும். இதுபோன்ற வித் தியாசமான செக்ஸ் செயல்பாடுகள் ஒருகா லத்தில், “அப்நார்மல் செக்ஸ் பிஹேவியர்”, “செக்ஸுவல் பர்வெர்ஷன்”, “டிவியன்ட்”, “வேரியன்ட் பிஹேவியர்” என்று பலவாறு குறிப்பிடப்பட்டு வந்தது. கடைசியாக “பார பீலியா” (Paraphilia) என்பதுதான் மிகச் சரியான பெயர் என்று செக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இறுதி முடிவுக்கு வந்தி ருக்கிறார்கள்.
அதென்ன… பாரபீலியா?!
வியன்னாவில் இருந்த “வில் ஹெல்ம் ஸ்டெக் கெல்” என்ற புகழ்பெற்ற சைக்கோ தெரபிஸ்ட் 1925&ம் ஆண்டு, செக்ஸ் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதினார். இதில், வித்தி யாசமான செக்ஸ் செயல்பாடுகளைப் பற்றிய விளக்கங்களை குறிப்பிட்டிருந்த வில் ஹெல்ம், அதற்கு “பார பீலியா” எனும் வார்த்தை யைப் பயன்படுத்தி இருந் தார். இந்தச் சொல் கிரே க்க மொழியிலிருந்து வந் தது. “பார” என்பதற்கு பக் கத்தில் என்று அர்த்தம். அதேபோல் “பீலாஸ்” எனும் பதத்துக்கு “நேசித் தல்” என்று அர்த்தம். இந்த “பீலாஸ்”தான் பீலியா என்று மாறி விட்டது.
பண்டைய கிரேக்கத்தில் பார பீலியா மாதிரியான வித்தியாச மான செக்ஸ் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. “குடும்பம் என்கிற கட்டுமான ம் சிதையாமல் எந்தவிதமான செக்ஸ் செயலில் ஈடுபட்டாலு ம் தவறே இல்லை” என்ற கோணத்தில்தான் இச்செயல் பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட் டிருந்தது. அதாவது, மனைவியுடன் வித்தியாசமான செக்ஸ் செய ல்பாடுகளில் மனமுவந்து ஈடுபடலாம். ஆனால், மனைவியை தவிர்த்துவிட்டு வேறு பெ ண்களிடம் இதேபோல் இன் பம் பெறச் செல்வது தவறு என்று அப்போது கருதப்ப ட்டது.
பாரபீலியா எனும் பெயர் 1925&ம் ஆண்டிலேயே குறி ப்பிடப்பட்டி ருந்தாலும், ஜா ன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்து வக் கல்லூரியில் செக் ஸா லஜி துறையின் தலைமைப் பேராசிரியர் ஜான்மணி என்பவர் தான் 1950&ம் ஆண்டுக்குப் பிறகு பாரபீலியா என்பதைப் பெரிதும் புழக்கத்தில் கொண்டு வந் தார்.
“அமெரிக்க சைக்யாட்ரிக் அசோஷியேஸன்” ஆண்டு தோறும் மனநோய் தொடர் பாக DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) என்கிற ஒரு பட் டியலை வெளியிடுவார்கள் . அப்படி 1980&ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன் முதலாக “பாரபீலியா” என் கிற பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த சொல் இன்னும் புகழடைந்தது.
பாரபீலியா குறிப்பிடும் வித்தியா சமான செயல்பாடுகள் என்ன?
பெரும்பாலும் ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு ஆண் செக்ஸ் தூண்டுதல் அடை ந்துவிடுவான். அரைகுறை ஆடை யுடனோ அல்லது முழு நிர்வாண மாகவோ அவள் இருந்தால்தான் உணர்ச்சிவசப்பட முடியும் என் கிற கட்டாயம் இருக்காது.
ஆனால், சிலர் இந்தப் பொதுப்பண்புக்கு விதிவிலக்காக இருக்கி றார்கள். “இப்படி இருந்தால் மட்டும்தான்… இப்படிச் செய்தால் மட்டும்தான்” செக்ஸ் மூலம் இன்பத் தை அடைய முடியும் என்கிற கட்டாய ம் அவர்களுக்கு இருக்கும். ஆம்… பாரபீலியா என்பதே ஒரு கட்டாயத்தை அடிப்படையாக கொண்டதுதான். இவ ர்களுக்கு சட்டமும் சமுதாயமும் ஏற் றுக் கொள்ளாத குறிப்பிட்ட ஒரு நடவ டிக்கை மட்டும்தான் செக்ஸ் தூண்டுத லை தரும். அது இல்லாதபட்சத்தில் அவர்கள் செக்ஸ் தூண்டுதல் அடை யவே மாட்டார்கள்.
உடல் உறவுக்கு முன்பு முத்தமிடுதல், செல்லமாக கடித்தல், அணைத்தல், அன்பாக வருடுதல் போன்ற முன் விளையாட்டில் (Foreplay) தம்பதியர் ஈடுபடுவது சகஜம். சிலர் இப்படி முன்விளையாட்டில் ஈடு படாமலேயேகூட உணர்ச்சி வசப் படுவதும் உண்டு.
ஆனால், பாரபீலியா விருப்பமு டையவர்களுக்கு இது போதாது. பெண்ணை வலியால் துடிக்க வைப்பது மாதிரியான செக்ஸ் நட வடிக்கைகளில் ஈடுபட்டால்தான் அவர்களுக்கு உணர்ச்சி ஏற்படும்; திருப்தி ஏற்படும். இது, ஓர் உதாரணம்தான். இதுபோல ஐம்பதுக்கும் மேலான வகைகள் பாரபீலியாவில் உள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
பண்டைய கிரேக்கத்தில் கோயில்களில் கடவுளுக்கு உரிய சிறப்பு பூஜைகளின்போது, ஆண் பூசாரிகள் பெண் உடையையும், பெண் என்றால் ஆண் உடையையும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இதை, “கிராஸ் டிரஸ்ஸிங்” என்று சொல்வதுண்டு. அத்தகைய சிறப்பு பூஜைகளின்போது சிலர் மட்டும் தன்னைத்தானே துன்புறுத்தி ரத்தம் வரவழைத்துக் கொ ண்டு தங்கள் பக்தியை வெளி யிடுவார்கள். இன்னும் சிலர் மற்றவர்களைத் துன்புறுத்தி அவர்களை வலியில் துடிக்க வைத்து ரத்தம் வரவழைத்துத் தங்கள் பக்தியை வெளியிடு வார்கள். இது மட்டுமின்றி, கிரேக்க புராணங்கள், இலக்கி யங்களில் மற்ற உயிரினங்க ளுடன் உறவு வைத்துக் கொள்வதைப் பற்றி அற்புதமாக வருணித் துள்ளார்கள். குழந்தையைத் துன்புறுத்தி இன்பம் காணும் செய்திகள் இன்றைக்கு ஏடுக ளில் நாம் காணும் ஒன்றாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் கேவலமான, மோசமான செயலாக நினைக்கிறோம். அதைத் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதுகிறோம். ஆனால், அன்றைய கிரேக்க சமுதா யத்தில் குழந்தையைத் து ன்புறுத்தி இன்பம் பெறுத ல் சகஜமாக ஏற்றுக் கொ ள்ளப்பட்டிருந்தது.
ஜுலியஸ் சீஸருக்கு ஆ ண்களுடனும், பெண்க ளுடனும், பிற உயிரினங் களுடனும் உறவு கொள் ளும் பழக்கம் இருந்ததை வரலாற்றின் பக்கங்கள் சொல்கின்றன.
இவை எல்லாமே “பாரபீலியா” என்கிற வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகளின் வெளிப்பாடு களே. “பாரபீலியா” செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண் டியது “சேடிஸம்” (Sadism) பற்றித்தான்.
“சேடிஸம்” எனும் பெயருக்கு ஒரு பின்னணி உண்டு. “மா ர்க்கிஸ்-டி-சேடு” (1740&1814) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் மதங்களை எதிர்த்துத் தீவிரமான கட்டுரைகளை எழுதி வந்தவர். அதேசமயம் இவர், குழந்தைக ளைத் துன்புறுத்தி இன்பம் காண்பது, ஆசன வாய் வழி யாக செ க்ஸில் ஈடுபட்டு இன்பம் அடைவது, குழந் தைகளையும் பெண்களை யும் சாட்டையால் அடித்து இன்பம் காண்பது போன்ற வற்றை வரவேற்றதுடன் அதுபற்றி பாராட்டியும் எழுதி வந்தார்.
“மார்க்கிஸ்-டி-சேடு”வின் இந்த நடவடிக்கைளை எல்லாம் பார்த்து, இந்த கொடூரமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு “சேடிஸ ம்” என்ற பெயரைச் சூட்டினார், கிராஃப்ட் எபிங் என்ற ஆஸ்திரிய நாட்டு உளவியல் நிபுணர்.
சேடிஸ மனப்பான்மை கொண்டவர் களுக்கு பிற செயல்பாடுகள் எதுவும் செக்ஸ் உணர்வை தூண்டவோ, இன்பம் தரவோ செய்யாது. துன்புறுத்திக் கதறக்கதற துடிக்க வைத்தால்தான் இவர்கள் இன்பம் பெறுவார்கள்.
மன்னர் குடும்பத்தைச் சே ர்ந்த மார்க்கிஸ்-டி-சேடு& வும் இப்படிப்பட்டவராகத் தான் இருந்தார். மனைவி முதல் வேலைக்காரர்கள், சேவகர்கள் வரை எல் லோரிடமும் கொடூரமான முறையில் செக்ஸில் ஈடு பட்டு இன்பம் அடைந்தார். ஒருகட்டத்தில் இவரது கொடூரத்தைத் தாங்க முடியாமல் மனம் வெறுத்துப்போன இவருடைய மனை வி, மார்க்கிஸை விவாகரத்து செய்து விட்டா ள்.
ஆனால், மார்க்கிஸ் அடங்கவில்லை. வி லைமகளிரிடம் சென்று சேடிஸ முறையில் இன்பம் அடைந்தார். ஒருமுறை இவர் இப்படி காட்டுத்தனமாக நடந்துகொண்டதால் ஒரு விலைமாது இறந்தே போனார். இதற்காக சிறையில் அடை க்கப்பட்ட மார்க்கிஸ், அங்கிருந்து தப்பித்து வேறு நாட்டுக்கு ஓடினார். அங்கும் அவரது செக்ஸ் கொடூரங்கள் தொடரவே, தஞ்சம் புகுந்த நாடும் அவரை விரட்டியடித்தது. மறுபடியும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய மார்க் கிஸ் இரண்டு புத்தகங்கள் எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும் அந்நாளில் பெரும் பரபரப்பை

king napoleon
ஏற்படுத்தின.
1801-ல் மாவீரன் நெப்போலியன் மார்க்கிஸ்-டி-சேடுவை கைது செய்ய ஆணையிட்டார். இதனைத் தொடர்ந் து சிறைத் தண்டனை பெற்று தனிமை, விரக்தி போன்றவற்றால் உருக்குலை ந்து நாதியற்று கடைசியில் மரணத் தைத் தழுவினார் மார்க்கிஸ்-டி-சேடு.
அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற் படுத்திய அந்த இரண்டு புத்தகங்களு மே அச்சு வாகனம் ஏறாத கையெழுத் துப் பிரதிகள் என்றால் நம்ப முடிகிற தா? 1904&ம் ஆண்டில்தான் அந்த இர ண்டு கையெழுத்துப் பிரதிகளும் அச் சடித்த புத்தகங்களாயின!
இவருடைய வாழ்க்கை மற்றும் எழுத்துகளைத் தழுவி ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
இயல்புக்கு மாறான செக்ஸ் ஆர்வ முடைய “பாரபீலியா” என்ற குணா திசயத்தில் “சேடிஸம்” என்ற ஒன்று இருப்பது போலவே, அதன் ஒன்று விட்ட தம்பியாக இருக்கிறது “ம ஸோசிஸம்” (Masochism). இதைப் பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டு ம். மஸோசிஸம் என்ற பெயரை முதன்முதலில் பயன் படுத் தியவரும் கிராப்ட் எபிங்தான். மஸோசிஸம் என்ற பெயர் எப்படி வந்தது?
பத்தொன்பதாம் நூற்றாண் டின் மத்திய காலகட்டத்தில் ஆஸ்திரியா நாட்டின் மன்னர் குடும்பத்தில் பிறந்த ஒருவ ரின் பெயர்& “கவுன்ட் லெப் போல்டுவான் சாஸர் மே ஸோ” என்பதாகும். மேஸோ, பிறந்த போதே தாயை இழந்து விட் டதால் “ஹன்ஸ்கா” என்ற ஆயாவிடம்தான் வளர்ந்தார். தினமும் அவரை கதை சொல்லித் தூங்க வைப்பாள் இந்த ஆயா. இந்தக் கதைகள் அத்தனையும் திகில் கதைகள்!
மேஸோவின் தந்தை, கறாரான ஒரு போலீஸ் அதிகாரி. இவரும் தன் பங்குக்கு போலீஸ் உத்தி யோகத்தில் சந்தித்த பல கொடூர மான, கதைகளை மகனிடம் வந் து சொல்வார். வளரும் பருவத் தில் பீதியூட்டுகிற இதுபோன்ற கதைகளைக் கேட்டு கேட்டு… நா ளடைவில் பாரபீலியா குணாதிசயம் கொண்டவராக மாறிப்போ னார் மேஸோ. பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், சட்டத் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகும்கூட இவருக்கு செக்ஸில் வித் தியாசமான முறையில் இன்பம் காண் பதில்தான் அதிக நாட் டம் இருந்தது. தன்னைத் துன்புறுத்தச் சொல்லி தன் மனைவியை வற்புறுத்தி, அதன் மூலம் இன்பம் அடைந்தார். இது பிடிக்காமல் இவர் மனைவி ஓடிப் போய்விட்டாள். மீண்டும் அடுத்தடுத்து, மூன்று பெண்க ளைத் திருமணம் செய்து கொண்டார் மேஸோ. அவர்களும் மேஸோவின் செக்ஸ் கொடூரம் தாங்க முடியாமல் அ வரை விட்டு விலகி ஓட… திருமணம் செய்து கொள்ளாமல் ஆசை நாயகி களை வைத்துக் கொள்ள ஆரம்பித்தா ர். 1886-ம் ஆண்டு “வீனஸ் இன்ஃபர்” என்றொரு புத்தகத்தை எழுதினார் மேஸோ. இந்தப் புத்தக த்தின் நாயகன் ஷவரின், நாயகி வாண்டா.
இந்தப் புத்தகம் அப்போது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. காரணம், ஷவரின் ஒரு பலாச்சுளை என்று வாண்டா நினைத்துக் கொண்டிருக் க, “நான் பலாச்சுளையல்ல, பலாமு ள்” என்று தனது உண்மை முகத்தைக் காட்டிவிடுவான் ஷவரின்.
தன்னைத் துன்புறுத்தச் சொல்லி வா ண்டாவை நிர்ப்பந்திப்பான். அவளும் அவன் விருப்பத்தை நிறைவேற்றினாள். ஆம்… அடி பின்னி எடுத்தாள்! இதுபோன்ற செயல்பாடுகளின்போது வாண்டாவை தோலாடை போன்ற ஒரு வகை உடை யை அணிந்து கொள்ளச் சொல்லி, உரோமங்களால் ஆன (Fur) துணியா ல் தன்னை அடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவான் ஷவரின். அப் போதுதான் அவனுக்கு செக்ஸ் தூண் டுதல் அடைய முடியும். இது மேஸோ வின் கதையில் வரும் சம்பவம்தான் என்றாலும்… அந்நாட்களில் தனது சொந்த அனுபவத்தைதான் உருமாற் றி, மேஸோ எழுதியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஏனெனில், மேஸோ வின் இம்சைகளுக்குப் பயந்து ஓடிய மனைவிகளின் குற்றச்சாட்டுகளும், இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்க ளும் ஒன்றாகவே இருந்ததுதான் காரணம்.
எனவேதான் இதுபோன்ற செக்ஸ் செயல்பாடுகளுக்கு மேஸோ வின் பெயரையட்டி “மஸோசிஸம்” என்ற பெயர் வந்தது. மேலே குறிப்பிட்ட “வீனஸ் இன் ஃபர்” என்கிற நாவல் மூன்றுவிதமான திரைப்படங்களாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக 1994&ல் எடுத்தார்கள். அதே ஆண்டு ரஷ்யா வில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற உலகத் திரைப்பட வி ழாவில் “வீனஸ் இன் ஃபர்” திரைப் படம் விருது வாங்கியது.
இனி “ஃபிராட்டரிஸம்” (Frotteurism) என்றொரு பாரபீலியா குணாதிசயத் தைப் பார்க்கலாம். மக்க ள் கூட்டம் கூட்டமாகப் பிதுங்கி வழியும் ஜன நெ ருக்கடியான இடங்களில், முன்பின் தெரியாத பெண் களை நெருங்கி அவர்க ளின் மேனியை நுகர்ந்து பார்த்தல், அவர்கள் மீது உரசி இன்பம் பெறுவது போன்றவைதான் பிராட்டரிஸம் எனப்படுகிறது. இந்தக் குணாம்சத்தை விளக்க மாக சொல்லத் தேவையில்லை. நம் மாநகர பேருந்துகளில் தின மும் நடக்கிற திருக்கூத்துதான் இ து. நம்ம ஊர் இடிராஜாக்கள் எல் லாம் இப்படிப்பட்ட பிராட்டரிஸ்ட் கள்தான்!
பிராட்டரிஸம் என்பது பிராட்டர் என்கிற ஃபிரெஞ்சு வார்த்தையிலி ருந்து வந்தது. “பிராட்டர்” என் றால், உரசல் என்று அர்த்தம்.
இந்த உரசல் இன்பம் பற்றி உலகம் முழுக்க பல்வேறு சம்பவங்க ளை உதாரணமாக காட்டமுடியும். ஜப்பா னில் ஒரு காலத்தில் போக்குவரத்து வாகனமான பஸ், ரயில் களில் இந்தத் தொந்தரவு அதிகமாக இருந்த து. எனவே இதுபோன்ற இடிராஜாக்க ளிடமிரு ந்து எப்படி தப்பிப்பது? என்று பல்கலைக்கழக, கல்லூரி மாணவி களுக்கு, அலுவலக பெண்களுக்கு… பிரத்தியேக வகுப்புகள் கூட எடுக்கப் பட்டன என்றால் பார்த்துக்கொள்ளு ங்கள்.
டோக்கியோவில் உள்ள ஒரு ஹோட்டல் அதிபரின் பெயர் சாமுயம மோட்டோ. இவரை “இடிராஜாக்களின் தலைவ ன்” என்றே சொல்லலாம். பெ ண்களின் பின்புறங் களைக் கையால் தட்டுவதிலும், நெ ரிசலான பஜார், சந்தை, பொ துக்கூட்டங்களில் பெண்க ளை உரசி இன்பம் அனுபவிப் பதும்தான் இவரின் பொழுது போக்கு.
1994&ம் ஆண்டு “டயரி ஆஃப் ஏ கிராப்பர்” (Diary of a Gropper) எனும் தன் சுயசரிதை புத்தகத்தில் தான் எப்படியெல்லாம் பிராட்டரிஸம் மூலம் இன்பம் அடைந்தார் என்று யம மோட்டோ வர்ணித்திருந்தார். ஜப்பானில் இந்தப் புத்தகம் ரொம்பவும் பாப்புலர்.
இதனைப் படித்த வாசகர்களில் பலர் யம மோ ட்டோவை சந்தித்து, “எங்களுக்கும் உங்கள் திருவிளையாடலைக் கற்றுத் தாருங்கள்” என் று கேட்டனர். தன்னுடைய அனுபவத்துக்கும், புத்தகத்துக்கும் கிடைத்த மாபெரும் ரத்தின கம் பள வரவேற்பால் உற்சாகமடைந்த யம மோட்டோ… இதற் கென் று ஒரு சிறப்பு மாலை வகுப்புகளை எடுக்க ஆரம்பித்து விட்டார். இவரது வகுப்பில் சேர கூட்டம் முண்டியடித்த து. இந்த செய்தி அரசாங்கத்தின் காதுகளுக்குப் போக… உடனடியாக யாம மோட்டோவின் வகுப்புகள் தடை செய்யப்பட்டன.
பாரபீலியாவில் இன்னொரு வகை “எக்ஸிபிஷனிஸம்”. (Exhibitionis m) இந்த வகையினர் தன்னை அறி ந்திராத, பெண்களிடம் தனது ஆடை யை விலக்கித் தனது பிறப்புறுப்பு களைக் காட்டுவார்கள். அவ்வாறு உறுப்புகளைக் காட்டும்போது அவர் கள் அடையும் அதிர்ச்சியைப் பார்த் து இவர்கள் இன்பம் அடைவார்கள். இதன் மூலம் செக்ஸ் தூண்டுதலை இவர்கள் அடைவார்கள். இப்படிப்ப ட்ட மனிதர்களுமா இருக்கிறார்கள் என்று உங்களுக்கு திகைப்பும், சந் தேகமும் ஏற்படலாம். நெருக்கமான வீடுகளில் இருக்கும் ஆண் களில் சிலரிடம் இதுபோன்ற குணம் இருக்கத்தான் செய்கிறது.
“வாயரிஸம்” (Voyeurism) என்பது பாரபீலியாவில் இன்னொரு முக்கி யமான குணாதிசயம். இவர்கள், மற்றவர்கள் உடல் உறவு கொள்வ தை, நிர்வாணமாகக் குளிக்கும் பெண்களை அவர்களுக்குத் தெரி யாமல் ஒளிந்திருந்து பார்ப்பார்க ள். “வாயர்” என்ற பிரெஞ்சு வார்த் தைக்கு, பார்த்தல் என்று பொருள். எல்லா மனிதர்களிடத்திலும் இந்த வாயரிஸம் சிற்சில சதவிகிதங்கள் இருக்கவே செய்கிறது. நீலப்படம் பார்ப்பது, காபரே டான்ஸ் ரசிப்பது, போன்றவைகூட வாய ரிஸ குணாம்சத்தின் சாயல்களே!
தெருக்களில் நாய்கள் புணர்ந்து கொண்டு இருப்பதை சிலர் எந்த விதமான லஜ்ஜையுமின்றி வெறி த்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்து இருப்போம். இதுவு ம் வாயரிஸத்தின் சாயலே. பிறர் குளிப்பதை, பிறர் ஆடை மாற்றுவதை, பிறர் புணர்வதைப் பார்ப்ப தன் மூலம் கிடைக்கிற தூண்டுதலைப் போல வேறெந்த நடவடிக் கையும் இந்த வாயரிஸ குணாதிசயக்காரர்களைத் திருப்தி அடைய செய்யா து.
தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண் டு உள்ளே போனால்… இ ருள் சூழ்ந்திருக்கும் ஒரு ஹாலில் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அப்பட்டமாக உடல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை ரசிக்க லாம். இந்தக் காட்சிகளுக்கு “லைவ் ஷோ” அல்லது “பீப் ஷோ” (Peep show) என்று பெயர். பாங்காக் நாட்டில் அ ரசாங்கம் சுற்றுலா விருந்தி னர்களை சுண்டியிழுப்பதற் கென்று பிரத்தியேக மாக இது போன்ற கேளிக்கை வி டுதிகளை அனுமதித்துள்ள து. இப்படி பல நாடுகளில் பல வகைகளில் வாயரிஸ பேர்வழிக ளைக் குறிவைத்து பார்கள், கிளப்கள் இருக்கின்றன. ஒளிந்தி ருந்து ரசிப்பவர்களை “Peeping Tom” என்று தமாஷாக அழை ப்பது உண்டு. இந்த பீப்பிங் டாம் க்கு சுவராஸ்யம் ததும்பும் ஒரு கதை உண்டு. அது… அடுத்த இதழில்! வாயரிஸ பேர்வழிக ளை, அதாவது மற்றவர்கள் குளிப்பதை, புணர்வதை, உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்து இன்பம் அடையும் பேர்வழிகளை “பீப்பிங் டாம்” (Peeping Tom) என்று செல்லமாக அழைப் பதற்கு தமாஷான ஒரு கதை உண்டு!
கி.பி. 980-1067ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கி லாந்தில் சிற்றரசன் அந்தஸ்தில் ஒருவன் இருந்தான். அவன் பெயர் லியோப்ரிக். “கோவன்ட்ரி” பகுதி மக்களிடம் வரிவசூலிக்கும் அதி காரம் அவனிடமிருந்தது. மக்களி ன் தலையில் டன் கணக்கில் வரி ச்சுமையை ஏற்றுவதில் அந்த சிற் றரசன்… பேரரசனாகவே இருந்தான்! லியோப்ரிக் விதித்த அதிகப் படியான வரிச்சுமையால் மக்கள் நொந்து கிடந்தனர். லியோப்ரி க்கின் மனைவியான கொடிவா, இதைக்கண்டு பெரும் மனவேத னை அடைந்தாள். தன் கணவரிடம் மக்க ளின் கவலையை எடுத்துரை த்து, வரிகளைக் குறைக்கச் சொல்லி நச்சரித்தாள். மனைவியின் நச்சரிப் பைத் தாங்கிக் கொள்ளமுடியாத லியோப்ரிக், ஒருகட்டத்தில் மனை வியுடன் ஒரு சமாதானத்துக்கு வந் தான். “நான் வரிச்சுமையைக் குறை க்கத்தயார். ஆனால், ஒரு நிபந்தனை . மக்களுக்காக வேதனைப்படும் நீ முழு நிர்வாணமாக ஒரு குதிரை யில் அமர்ந்து பட்டப்பகலில் கோவ ன்ட்ரி நகர தெருக்க ளைச் சுற்றிவர வேண்டும்… செய்வாயா?”” என்று கேட்டான். மனைவி யின் வாயை அடைக்க சும்மா ஒரு பேச்சுக்குத்தான் லியோப்ரிக் அ ப்படி சொன்னான். ஆனால், மக் களின் மீது மாறாத அன்புகொ ண்ட கொடிவா, அப்படியே செய் வதாக உடனே ஒப்புக் கொண் டாள். தான் சொன்னதிலிருந்து பின்வாங்க முடியாத நிலையில் தானும் சம்மதித்தான் லியோப்ரிக்.
“கோவன்ட்ரி நகரம் முழு வதும் முழுநிர்வாணத்து டன் நகரத் தெருக்களை குதிரையில் கொடிவா வ லம் வரப்போவதாக” தண் டோரா போடப்பட்டது! தங்கள் துயர் குறைவதற் காக கொடிவா நிர்வாண மாக நகர்வலம் வரப்போ வதை அறிந்த மக்கள், யாரும் அவளை அந்த நிலையில் பார் க்கக்கூடாது என்று சபதம்பூண்டு ஜன்னல், கதவு களை எல்லாம் சாத்திக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தனர். கொடிவாவின் நிர்வாணக் கோலத்தைக் காண வெளிச்சமும் வெட்டவெளியுமே காத்திருந்தன.
ஆனால், கொடிவாவுக்கு ஆடைகள் தைத்துத் தரும் “டாம்” என்ற தையற்காரனால் மட்டும் மனதை அடக்க முடியவில்லை. “ஆடை அணிந்திருக்கும் போதே கொடிவா அவ்வளவு அழகென்றால்… ஆ டைகளற்று அவள் எவ்வளவு அபாரமாக ஜொலிப் பாள்…” என மனதில் ஜொள்வடிக்க ஆரம்பித்தான். கடைசியில், தன் வீட்டுக் கதவில் சிறு துவாரம் போட்டு, அதன்வழியே கொடிவாவின் நிர்வாணத்தைப் பார்த்து ரசித்தான். டாம் இப்படி ஒளிந்திருந்து பார்த்ததனால்தான்… ஒளிந் திருந்து பார்த்து மனக்கிளர்ச்சி அடையும் வாயரிஸப் பேர்வழிக ளுக்கு “பீப்பிங் டாம்” என்ற பெயர் வந்தது.
வாயரிஸம் போதும். பாரபீலியா வில் வரும் இன்னொரு வகை யினரைப் பார்க்கலாம். இதற்குப் பெயர் “ஃபெடிஷிஸம்” (Fetishis m). இந்த வகையினர் யாரையும் உடல்ரீதியாகத் துன்புறுத்த மாட் டார்கள். பெண்களின் நிர்வாண மோ, அரைகுறையான கவர்ச்சி ஆடைகளோ இவர்கள் மனதில் செக்ஸ் தூண்டலை நிகழ்த்தாது. அப்படியானால் எதுதான் இவ ர்களைத் தூண்டும்? ஃபெடிஷி ஸக் காரர்கள் பெண் உடம்பி ன் குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பார்க்கும் போதோ, தொடும் போதோ மட்டுமே செக்ஸ் தூ ண்டுதல் அடை வார்கள். பெ ண்கள் குறிப்பிட்ட நிறத்தில் ஆடை உடுத்தியிருப்ப தைப் பார்த் தால் மட்டும் சிலருக்கு ஆசை பிறக்கும். “கம் பூட்ஸ்” எனும் காலணியை அணிந்த பெண்களின் கால்களைப் பா ர்க்கும்போது சிலருக்கு உணர்ச்சி உந்தும். பெண்களின் தலை முடி அல்லது கால்களில் கொசகொசவென்று இருக் கும் முடி யைப் பார்த்தால் மனதில் படபடப்பு எகிறும். இப்படிப்பட்ட கிளர்ச் சியும் தூண்டுதலும் ஏற்பட்டால் மட்டுமே இவர்களால் செ க்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதுபோல் காலின் கட்டை விரல், மார்பகம், இடுப்பின் பின்புறங்கள் போன்றவற்றின் மீது மட்டும் சிலருக்கு நாட்டம் இருக்கும். இதுவும் ஃபெடிஷிஸத்தின் ஓர் அங்கம்தான்.
1981ம் வருடம், அமெரிக் க போலீஸார், ஒருவ னை கைது செய்தனர். பொது நூலகத்தில் புத் தகம் படித்துக் கொண்டி ருக்கும் பெண்களின் கா ல்களுக்கு இடையே ஊ ர்ந்து சென்று, அவர்களு க்குத் தெரியாமல் அவர்க ளின் கால் நகங்களில் நெயில் பாலீஷை போடு வது, பிறகு அதைப்பார்த்து ரசித்துக்கொண்டே சுய இன்பம் அடை வது… இதுதான் அவன் செய்த குற்றம்! இதுவும் ஃபெடிஷிஸ த்தின் வெளிப்பாடே ஆகும்