Home சூடான செய்திகள் நவீன காலத்தில் பொருந்தாக் காமத்தின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறதா?

நவீன காலத்தில் பொருந்தாக் காமத்தின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறதா?

30

அந்த இளைஞனுக்கு 28 வயது.

50ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை. திருமணம் ஆகி சில மாதங்களே ஆகியிருந்தன.

இளம் மனைவியுடன் என்னைப் பார்க்க வந்திருந்தான்.

கை நிறைய சம்பளம். கண்ணுக்கு அழகான மனைவி. மகிழ்ச்சிக்கு தடை ஏதும் இல்லை. ஆனாலும் மகிழ்ச்சியாக இல்லை என்பது வாடிப்போயிருந்த அந்த இளம் ஜோடிகளின் முகத்திலிருந்தே தெரிந்தது.

ஏன்…?

இருவரிடமும் மெல்ல விசாரித்தேன்.

திருமணமாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இருவருக்குள்ளும் ஒருமுறைகூட தாம்பத்திய உறவு நிகழவில்லை என்பது தெரிந்தது.

அவர் மிகவும் நல்லவர்தான். ஆனால் என்னை நெருங்கும் போதெல்லாம் ஏதோ ஒரு பதற்றம் அவரைத் தொற்றிக்கொள்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது. உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தெரிகிறது. ஆனால் ஏன் இப்படி என்றுதான் தெரியவில்லை டாக்டர்…

ஓர் இளம்பெண்ணின் தர்ம சங்கடம் எனக்கு புரிந்தது.

அவளை சற்று வெளியே இருக்கும்படி சொல்லிவிட்டு இளைஞனிடம் விசாரித்தேன்.

அப்போதுதான் தனக்குள்ள பிரச்சனையை என்னிடம் சொன்னான். அவன் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கைநிறைய சம்பளம். வீட்டுக்கு ஒரே மகன். எளிதாகவே பெரிய இடத்திலிருந்து பெண் கிடைத்தது. திருமணமும் நடந்தது. அழகிய இளம் மனைவி. அந்தஸ்தான வாழ்வு. ஆனாலும் எனக்கு புது மனைவி மீது இச்சை எழவில்லை. என்ன பாதிப்பு என்று புரியவில்லை டாக்டர்..

நான் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து என் உறவுக்காரப் பெண் வீட்டில் தங்கிஇருந்தேன். அந்த வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. அந்த பெண்ணுக்கு வயது 40ஐத் தாண்டிவிட்டது. எனக்கோ அப்போது 25 வயதுதான். என்னுடைய இளமை வேகமும் அந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையும் சந்தர்ப்ப சூழ்நிலையும் ஒருங்கே அமைந்ததால் நாங்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம்.

இந்தச் சூழ்நிலையில் இருவரும் இணைந்து ஒன்றாக மூன்று ஆண்டுகள் வாழ்ந்தோம்.

இந்த நிலையில் தான் எனக்கு திருமணம் செய்துவைக்க எனது பெற்றோர் தீர்மானித்தனர்.

திருமணமும் நடந்து முடிந்தது.. அன்றிலிருந்துதான் பிரச்சனை ஆரம்பித்தது.. எனக்கு புது மனைவி மீது இச்சை எழவில்லை.

ஆனால் 40 வயதைக் கடந்த என் உறவுக்காரப் பெண்மணியைப் பார்த்தால் இயல்பாகவே அந்த உணர்வு ஏற்படுகிறது. எனக்கே இது தவறு என்று புரிகிறது டாக்டர்…

ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட தவறான உறவு என்னை சீரழித்துவிட்டது. இப்போது நான் என்ன செய்ய டாக்டர்….

செய்ய வேண்டாததை செய்துவிட்டு இப்போது நான் என்ன செய்ய என்று கேட்கிறான்.

ஓர் ஆண் தன்னைவிட மூத்த வயதுள்ள பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால், இயல்பாகவே அவனும் மூப்பாகிவிடுவான். இதனால்தான் முன்பெல்லாம் திருமணத்தின் போது ஆணைவிட பெண் சில ஆண்டுகள் வயது குறைந்தவளாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.

இதற்கு பழக்கப்பட்ட பிறகு இயல்பான உணர்வுகள் அவனுக்குஇருப்பதில்லை. முதுமையான பெண்ணுடன் உறவு வைத்து பழகிய பிறகு இளம் பெண் அந்த இளைஞனுக்கு எட்டிக்காயாக கசக்கிறாள்.

இத்தகைய முரண்பட்ட உறவுகள் இப்போது சமூகத்தில் பரவலாகிவிட்டதுதான் கவலைக்குரிய செய்தி. சங்க காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருந்திருக்கிறது. வயதில் மூத்த பெண் இளவயது ஆணின் மீது இச்சை கொள்வதை பொருந்தாக் காமம் அல்லது கைக்கிளை என்கிறது சங்க இலக்கியம்.

இந்த நவீன காலத்தில் இந்த பொருந்தாக் காமத்தின் எண்ணிக்கை சற்று அதிகரித்தி ருக்கிறது. பெண்களுக்கு கிடைத்துள்ள சமூக, பொருளாதார சுதந்திரமும் இதற்கு ஓர் அடிப்படையான காரணம் என்று சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வாழ்வில் திருமணத்திற்குப் பின் அல்லது அந்த வயதைக் கடந்த பிறகும், எதிர்பாரா விதமாக தனிமைப்பட்ட பெண்களின் கவனம் பெரும்பாலும் இத்தகைய இளைஞர்கள் பக்கம் திரும்புகிறது.

அந்த பெண்களுக்கும் மனசாட்சி வேண்டும். இளைஞர்களுக்கும் எச்சரிக்கை உணர்வு வேண்டும்.

இத்தகைய முரண்பட்ட உறவுகள் என்பது ஒரு மனிதனின் முரண்பட்ட உடல்ரீதியான அகக் கூறுகளின் மாறுபாட்டால் ஏற்படுவது தான். அவர்களையும் மீறிய செயல்பாடாக இருக்கும் என்பதுதான் உண்மை. இதன் அடிப்படையில், அந்த இளைஞனுக்கு நரம்பு மற்றும் பித்தத்தின் கிலேசத்தை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை வர்ம மற்றும் ஆயுர்வேத முறைகளில் 6 மாதம் அளித்தேன்.
இந்த சிகிச்சையின் மூலம் பித்த கிலேச நீரின் ஓட்டம் சீரடைந்து அவன் மனதில் தெளிவு பிறந்தது. அதுபோல் உள் உணர்வுகளுக்கு ஏற்றபடி மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு காயகல்ப சிகிச்சை அளித்து அந்த இளைஞனை திறம்பட மாற்ற முடிந்தது.

(பித்த கிலேச நீர் சிகிச்சை என்பது நரம்பு மற்றும் மூளை தொடர்புடையது. வர்ம பரிகார நூலில் அகத்தியர் இதனை ஒரு தனி அத்தியாயமாக படைத்துள்ளார்)

அந்த இளம் தம்பதியர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஆண் பெண்ணுக்கிடையேயான பாலுணர்வு இயல்பானதுதான். ஆனால் அது இயற்கை நியதிக்கு முரணாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம்