Home சமையல் குறிப்புகள் இறால் பக்கோடா

இறால் பக்கோடா

22

தேவையானவை

இறால் – 200 கிராம்.

எண்ணெய் – 200 மி.லி

பாசிப்பருப்பு மாவு – 50 கிராம்.

உப்பு – சிறிது.

ப. மிளகாய், பூண்டு – சிறிது.

சோம்பு – சிறிது.

கடலைமாவு – 100 கிராம்.

பொரி கடலை – 50 கிராம்.

அரிசிமாவு – 50 கிராம்.

வெங்காயம் – 100 கிராம்.

கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

இறால் துண்டு, வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி,பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

கலந்தவுடன் கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து தண்ணீ ர் சேர்த்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசையவும்.

எண்ணெய் காயவைத்து பக்கோடா கலவையை போடும் போது உதிர்த்து போடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப்பரிமாறவும்.