Home சமையல் குறிப்புகள் சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்

22

தேவை:
சைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்
சிக்கன் ஸ்டாக் – 1 கப்
கோழிக்கறி – 1/4 கிலோ
நூடுல்ஸ் – 100 கிராம்
ஸ்வீட் கார்ன் – 50 கிராம்
செய்முறை:

கோழிக்கறியைக் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரம் ஒன்றில் சைனீஸ் மஸ்ரூம், அதில் 1 கப் சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

பின்னர் காளான்களை வடித்து, அந்த தண்ணீரை பெரிய சாஸ்பேன் ஒன்றில் ஊற்றவும். பின்னர் அதனுடன் கோழிக்கறியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

வடித்த காளான்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேஷனில் நூடு
ல்ஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதனுடன் காளான், சிக்கன் ஸ்டாக், கோழிக்கறி, ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க விடவும். நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.