Home குழந்தை நலம் குழந்தைகள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்

குழந்தைகள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்

60

குழந்தை நலம்:குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிப்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.

கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க “பாஸ்வேர்ட்” உதவும்.

வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் “சைபர் கஃபே”களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.

Previous articleதினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்தால் ஆயுள் அதிகரிக்கும்
Next articleதம்பதிய உறவின் போது இப்படி பட்ட காயம் ஏற்படுமா..?!