Home இரகசியகேள்வி-பதில் நான் கல்லுாரி மாணவி. சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன்

நான் கல்லுாரி மாணவி. சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன்

371

என் பெற்றோர்கள், எனது மாமன் மகளைத் திருமணம் செய்யச் சொல்கிறார்கள். ஆனால் உறவின்முறையில் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து என்று பல புத்தகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் டாக்டர்கள் சொல்லக் கேட்டும், படித்தும் இருக்கிறேன். அதனால் இத்திருமணத்துக்கு நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அதேநேரத்தில் அந்தப்பெண்ணை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உறவின் முறையில் நான் திருமணம் செய்யலாமா, கூடாதா?

குழப்பமே வேண்டாம். நீங்கள் கேள்விப்பட்டது முற்றிலும் உண்மை. தினம்தினம் நானும், என்னைப் போன்ற பிற டாக்டர்களும் பார்க்கும் அநேக நோய்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? மரபணுக்கள்! மரபணுக்கள் கலப்புத் திருமணங்கள் செய்வதால் வலுப்பெறும். அதை ஒட்டு வீரியம் என்போம்.

அதுவே உறவுக்குள் திருமணம் செய்யும்போது அடுத்த தலைமுறையின் வீரியம் குறைந்துவிடுகிறது.

நோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே பரவலாக இருக்கும். இப்படி லெட்கால் ஜீன்ஸ் கொண்ட அதே ரத்த வம்சத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் புரியும் போது நோய் இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

அதனால்தான் ஆடு, மாடு, குதிரை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை இனப்பெருக்கம் செய்யும்போது வேறு ரத்தவழியில் வந்த ஆரோக்கியமான துணையுடன் அந்த மிருகங்களைச் சேர்த்து வைப்பார்கள். மிருகங்களுக்கே இவ்வளவு குலம், கோத்திரம் பார்க்கும்போது மனிதர்கள் நாம் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டும்! உறவுக்குள் திருமணம் என்பது, ஓல்டு பேஷன் மட்டுமல்ல, ஓட்டை பேஷனும்கூட!

——————————-

மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ஆணுக்கு வலி அதிகமாக இருக்கும் என்று ஒரு நண்பன் சொல்கிறான். அது உண்மையா?

மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சத்து குறைவாகி விடுவதால் ஜனனக் குழாயின் வழவழப்பு குறைந்து போகும் வாய்ப்பு உண்டு. போதுமான வழவழப்பற்ற குழாயினுள் நுழையும்போது ஆணின் உறுப்பு உராய்வினால் வலி உணரவும் கூடும்.

இதைத் தவிர்க்க மருந்துக் கடைகளில் விற்கும் வழவழப்பான ஜெல்களை வாங்கிப் பயன்படுத்தலாம். சமையல் எண்ணெய், கைமேல் இருக்கும் வெண்ணெய் என்பது உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?

———————————

நான் கல்லுாரி மாணவி. சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன். என்னுடன் இன்னொரு தோழியும் தங்கியிருக்கிறாள். அவள் ரூமில் இல்லாத நேரங்களில் நான் உடையைக் களைந்து விட்டு அக்கடாவென்று படுத்திருப்பதுதான் பிடித்திருக்கிறது. பாத்ரூமில் குளிக்கும்போது, என் உடலை ரசித்துக்கொள்ளவும், சில இடங்களைத் தடவி விடுவதும் மிகவும் பிடித்திருக்கிறது. இது மனநோயா? அல்லது ஒரு சாதாரணமான விஷயமா? விளக்கம் வேண்டும்.

விளக்கம்தானே… அதற்கு முன்னால் ஒன்றைச் சொல்லுங்கள். வாஷ்பேஷின் கண்ணாடி, துணிக்கடை கண்ணாடி, அவ்வளவு ஏன் நின்று கொண்டிருக்கும் வண்டியின் ரியர்வ்யூ கண்ணாடி என்று எங்கு தங்கள் முகங்களைப் பார்த்தாலும், சட்டென தயங்கி நின்று, யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டு, உடனே நம் முகத்தைச் சரிபார்த்து, முடிந்தால் ரசிக்கிறோம், இல்லாவிட்டால் திருத்த முயல்கிறோம். இப்படி நம் அனைவருக்குமே கொஞ்சம் சுயரசனை உண்டுதான்.

அதே சுயரசனை தான் உங்களை, உடை களைந்து ரசிக்கவும் ஸ்பரிசிக்கவும் வைக்கிறது. இந்த அளவோடு நின்றுவிட்டால் இது ரொம்பவே சாதாரண, சுயமதிப்பை மேம்படுத்தித் தன்னம்பிக்கையை வளப்படுத்துகிற ஒரு பாசிடிவ் விஷயம்.

ஆனால், மற்ற வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு, சுயரசனையிலேயே முழுக் கவனமும் செலுத்தி வந்தால், அதுவும் ஒரு வித அடிமைத்தனம்.

யாராவது அடிமைத்தனத்தை விரும்புவார்களா? கீப் யுவர்செல்ஃப் பிஸி. மூளைக்கு உருப்படியான வேலை இருந்தால், இது மாதிரியான வெட்டிவேலைகளுக்கு அவகாசமே இருக்காதே!