Home சமையல் குறிப்புகள் சப்பாத்திக்கு அருமையான பட்டர் மட்டன்

சப்பாத்திக்கு அருமையான பட்டர் மட்டன்

32

தேவையான பொருட்கள்

மட்டன் – அரை கிலோ
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 3
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மல்லி இலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்
சில்லி பவுடர் – அரைஸ்பூன்
கரம் மசாலா – அரைஸ்பூன்
பட்டர் – 3 டீஸ்பூன்
பழுத்த மிளகாய் – 4
ஃப்ரெஷ் கிரீம் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

மட்டனில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, அரைஸ்பூன் சில்லி பவுடர், தயிர், தேவைக்கு உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பாதி பாதியாக பிரித்து வைக்கவும்.

குக்கரில் ஊறிய மட்டனோடு பாதி வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து 5 விசில் போட்டு வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பாதியாக பிரித்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, பழுத்த மிளகாயை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதை வேக வைத்த மட்டனில் சேர்க்கவும்.

மட்டனும் கிரேவியுமாக சேர்ந்து கொதி வரும்.

கடைசியாக 2 ஸ்பூன் பட்டர், ஃப்ரெஷ் கிரீம், கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சுவையான பட்டர் மட்டன் ரெடி.