Home பெண்கள் உடல் கட்டுப்பாடு படுகையில் சிறப்பாக செயல்பட இந்த உடற்பயிற்சிகளை உடனே நிறுத்துங்கள்

படுகையில் சிறப்பாக செயல்பட இந்த உடற்பயிற்சிகளை உடனே நிறுத்துங்கள்

192

உடல் கட்டுபாடு:படுக்கையறையில் சிறப்பாய் செயல்பட வேண்டுமென்று எந்த ஆணுக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அது பல ஆண்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் ஆண்களின் பல தீய பழக்கங்களும், தவறான உணவுப்பழக்கங்களும். இது மட்டுமின்றி ஆண்களிடையே நிலவி வரும் ஒரு கருத்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆண்மை பாதிக்கப்படும் என்பதுதான்.

இந்த சந்தேகம் பல ஆண்களுக்கு இருக்கலாம். இது ஒருவகையில் உண்மைதான் ஆனால் பல வகையில் பொய். பொதுவாகவே உடற்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்காக செய்யப்படுவதுதான். குறிப்பாக படுக்கையில் சிறப்பாக செய்லபட உடற்பயிற்சிகள் பல வழிகளில் உதவும். ஆனால் இதில் சில பக்க விளைவுகள் இல்லமால் இல்லை. இந்த பதிவில் உடற்பயிற்சி ஆண்மையை எப்படி அதிகரிக்கிறது என்பதையும், அதுவே எப்படி பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது உங்கள் பாலியல் திறனை அதிகரிப்பதில் இரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முழுமையான இன்பத்தை பெற இருவருக்குமே இரத்த ஓட்டம் சசீராக இருக்க வேண்டியது அவசியம். தொடர்ச்சியான உடற்பயிற்சியானது உங்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

இது பிறப்புறுப்பை தூண்டக்கூடியது உடற்பயிற்சிகள் சிம்பதடிக் நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது. இது மிகவும் கவர்ச்சியானதாக இருக்காது ஆனால் ஆய்வுக்கலன் படி பிறப்புறுப்பு தூண்டப்படுவதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதென நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் மற்ற பெண்களை விட எளிதில் பாலியல் தூண்டலுக்கு ஆளாகிறார்கள் என மற்றொரு ஆய்வு கூறுகிறது. மருத்துவர்கள் குறைவான பாலியல் உணர்வு உள்ள ஆண்களுக்கு முதலில் பரிந்துரைப்பது உடற்பயிற்சியைதான்.

மனஅழுத்தம் மனஅழுத்தம் உங்கள் பாலியல் செயல்திறனை பாதிக்க கூடியது. உடற்பயிற்சியானது இதய துடிப்பை அதிகரித்தல், பலமாக மூச்சு விடுதல், வேர்வை போன்றவற்றின் மூலம் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனஅழுத்தம் குறையும்போது உங்களின் மனநிலையும் மாறும், தாம்பத்யத்தில் நாட்டமும் அதிகரிக்கும்.

உடல் தோற்றத்தை மாற்றுவதன் மூலம் பாலியல் நாட்டத்தை அதிகரிக்கலாம். தங்கள் உடல் தோற்றத்தின் மீது தாழ்வு மனபான்மை உள்ளவர்கள் பெரும்பாலும் இருட்டிலியே தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவார்கள். இது அவர்களுக்கு திருப்தியில்லாத உறவையே தரும். இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் கட்டுமஸ்தான உடலமைப்பு உள்ள ஆண்கள் அதிக தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், அதே சமயம் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டது. மகிழ்ச்சியான தாம்பத்தியம் என்பது உடல் மற்றும் மனது இரண்டையுமே சார்ந்தது. எனவே உடற்பயிற்சி செய்து உங்கள்உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது தாமபத்யம் மீதான உங்கள் ஆர்வத்தை அதிகரிக்கும்.

உற்சாகம் உடற்பயிற்சி செய்வது எண்டோர்பின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. எண்டோர்பின் என்பது வலியை குறைத்து மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோனாகும். இது தாம்பத்யம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களுடன் தொடர்புடையது. இந்த கவர்ச்சியான ஹார்மோன்கள் சுரக்க நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனுக்கும் பாலியல் திறனுக்கும் உள்ள தொடர்பு இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் இரண்டும் இணைந்தே உங்கள் பாலியல் ஆசையை தூண்டுகிறது. உடற்பயிற்சி செய்வது இந்த இரண்டு ஹார்மோன்களின் சுரப்பையும் அதிகரித்து பாலியல் திறனை அதிகரிக்கும்.

குறிப்பிட்ட பயிற்சிகள் உங்கள் இடுப்பை சுற்றியுள்ள தசைகள் வலுவாக இருக்கும்போது உங்களுடைய உச்சக்கட்டம் இன்பம் என்பது நீண்ட நேரம் நீடித்திருக்கும். எனவே அந்த பகுத்து தசைகளை வலுவாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சியின் தீமைகள் சமீபத்தில் நார்த் கரோலினா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிக உடற்பயிற்சி செய்பவர்க்ளின் பாலியல் திறன் வெகுவாக குறைவதாக கூறப்பட்டு உள்ளது. இது உங்கள் பாலியல் செயல் திறனை குறைப்பது மட்டுமின்றி நீங்கள் அப்பாவாகும் தகுதியை இழக்கவும் காரணமாகிறது.

டெஸ்டோஸ்டிரோன் தாக்கம் மிதமான உடற்பயிற்சிகள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஆனால் விளையாட்டு அல்லது போட்டிக்காக அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களிடையே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் உற்பத்தி குறைவாக உள்ளது. இது உண்மையில் ஆண்களுக்கான நல்ல செய்தி அல்ல.

ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,110 ஆண்களின் உடற்பயிற்சி செய்யும் நேரம், பாலியல் ஆசை மற்றும் திறன் போன்றவற்றை அறிந்து அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். இதில் மூர்க்கத்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆண்களுக்கு பாலியல் ஆசை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடலை கட்டுமஸ்தாக பாமரிக்க உபயோகிக்கும் சில புரோட்டின் மருந்துகளும் ஆண்மைக்குறைவை ஏற்படத்தக்கூடும்.