Home பெண்கள் பெண்களே வெள்ளை தோலாக்க முயற்சிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

பெண்களே வெள்ளை தோலாக்க முயற்சிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

97

பொது மருத்துவம்:உடல் கருப்பாக இருக்கின்றது என வெள்ளை நிற தோல் வேண்டும் என ஏங்கும் பலருக்கு கருப்பு தான் அழகு, அதனால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

உடல் கருமையாக இருப்பது, இயற்கையாக உடலுக்கு பொருத்தப்பட்ட குடை போன்றது, உடலுக்கு பல்வேறு தீங்குகளிலிருந்து காப்பாற்றும் என அறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.

தோல் பாதிப்புக்கள் :
கேரட் போன்ற சிகப்பாகவோ அல்லது தக்காளி போன்ற சிகப்புடனோ, வெள்ளை தோல் உள்ளவர்களுக்கு ஏற்படும் பல்வேறு சருமப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கருப்பு தோல் உள்ளவர்கள் இதுபோன்ற பிரச்னைகளில் பெரும்பாலும் ஏற்படுவதில்லை.

அதிக சூடான சூரிய ஒளி வெள்ளை நிற தோல் உள்ளவர்களுக்கு தோல் பிரச்னையோடு, தோல் புற்றுநோய் வரை கொண்டு செல்கின்றது.

வெள்ளை தோல் உள்ளவர்களுக்கு தோலில் ஆழமான சுருக்கங்கள், மூக்கில் மற்றும் கன்னங்களில் இரத்த நாளங்கள் பாதிப்பு ஏற்பட்டு சுருக்கங்கள் உண்டாகும். வயதான தோற்றம் உண்டாகும்.

இந்தியர்களின் தோல் நிறம் இயற்கையாக அமைந்த வரப்பிரசாதம். இந்தியர்களின் உடல் நிறம் சூரிய ஒளியை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கருமையான தோல் உள்ளவர்களின் உடல் சூரிய ஒளியிலிருந்து தானாக வைட்டமின் டி தயாரிக்கும்.

வெள்ளையாக நினைப்பதால் ஏற்படும் பிரச்னைகள்:
நம் கருமையாக தோலை வெள்ளையாக்க நினைத்து நாம் பூசிக்கொள்ளும் செயற்கையான கிரீமால் நம் தோல் பாதிக்கப்படும். தொடர்ந்து பூசப்படும் கிரீம், பவுடர்களால் தோல் மட்டுமல்லாமல் உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக நமக்கு அமைந்த நிறமே சிறந்தது என்ற மனநிலை தான் இதற்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.