Home ஆண்கள் எதிர் காலத்தில் ஆண்களால் குழந்தை பெறும் திறன் இருக்காதாம்

எதிர் காலத்தில் ஆண்களால் குழந்தை பெறும் திறன் இருக்காதாம்

137

ஆண்மை தகவல்:இந்த மனித இனம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை என அதற்கான காரணங்களை வெளியிட்டுள்ளனர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்.

நம் வாழ்வியல் முறை வேறுபாடு, பழக்க வழக்கங்கள் காரணமாக கருவுறும் திறன் மிக அளவில் பாதிக்கபட்டுள்ளது. இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவில் பங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எதிரான சூழலில் வாழ முற்படுவதால் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளை சார்ந்த ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் வெகுவாக குறைந்துள்ளதாம்.

இஸ்ரேலை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 50 நாடுகளை சேர்ந்த 43,000 ஆண்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 1973 முதல் கடந்த ஆண்டு வரை இவர்களின் விந்தணுக்களை சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்களின் வயது, வாழ்க்கை முறை, நாடு ஆகியவற்றையும் அடிப்படையாக ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சி முடிவில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களின் விந்தணுக்களின் திறன் முன்பை விட 50% குறைந்துளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த ஆண்களின் விந்தணுக்களின் திறனிலும் சரிவு காணப்பட்டது.

பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளின் பயன்பாடு, வாழ்க்கை முறை, ஆகியவை இதற்கு காரணமாம். தாய் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடிப்பது தனது மகனின் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என அதில் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பெண் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை. தாய்மார்கள் கர்ப காலத்தில் புகைப்பிடிக்காமல் இருத்தலும், குழந்தை பிறந்த பின் சரியான அளவு மற்றும் காலத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது இந்த பிரச்னையை தீர்க்குமாம். அதோடு கர்பகாலத்தில் சத்தான காய்கறிகள், உடற்பயிற்சி அவருக்குக்கு மட்டுமில்லாமல், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் வழிவகும்.

அதிக உடல் எடை, மன அழுத்தம் போன்ற காரணங்களும் விந்தணு உற்பட்த்தியை பாதிக்குமாம்.