Home பாலியல் பாலியல் இன்பத்தின்போது ஏற்படும் காயங்களுக்கான மருந்து இது

பாலியல் இன்பத்தின்போது ஏற்படும் காயங்களுக்கான மருந்து இது

105

Bedroom romance injuries:செக்ஸின் போது ஏற்படும் காயங்கள், அதற்கான தீர்வுகளும்!

வஜைனல் டியர்ஸ்:
இது செக்ஸின் போது பெண்ணுறுப்பில் சரியான அளவு நீர் சுரக்காததால் ஏற்படுவதாகும். இதனால் ஏற்படும் வலி இரண்டு நாட்களில் போகவில்லை என்றால், மருத்துவரை சந்திப்பது சிறந்தது.

ஆனல் டியர்ஸ்:
ஆனல் எனும் ஆசனவாயில் இயற்கையான நீர் சுரக்கும் சுரப்பி இல்லை. இதனால் உராய்வை தவிர்க்க செயற்கையான பொருட்கள் அவசியம். தவிர, இது பெண்ணுறுப்பில் ஏற்படும் வலியைவிட அதிக வலியை ஏற்படுத்தும்.

ஆண்குறி முறிவு….
ஆணுறுப்பு விரைப்புதன்மையுடன் இருக்கும் போது முரட்டுதனமாக மடிப்பது இப்பிரச்சனைக்கு காரணம். உடனடியாக ஐஸ் பாக்கெட்டை வைத்துவிட்டு மருத்துவரிடன் செல்ல வேண்டும்.

தசைப்பிடிப்பு…
செக்ஸில் ஈடுபடும் போது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு நடைப்பயிற்சி, யோகா போன்றவை நல்ல தீர்வு. ஆனால் தாங்க முடியாத வலி இருந்தால், மருந்து எடுத்துக்கொள்வது சிறந்தது.

ஹார்ட் அட்டாக்:
செக்ஸ் ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்தது. ஆனால், ஹார்ட் அட்டாக் இருப்பவர்கள் செக்ஸின் சில முறைகளை சோதிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது உகந்தது.

கவனமான குளியல்….
பாத்ரூமில் செக்ஸில் ஈடுபடும் போது குறைந்தளவு சோப்பை பயன்படுத்த வேண்டும். இப்படி செக்ஸில் ஈடுபடும் போது கீழே தவறி விழுவது மிகுந்த ஆபத்து.

தரையில் செக்ஸ்…..
மேட் அல்லது மெத்தையில் செக்ஸில் ஈடுபடுவது உடலில் எவ்வித காயத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் தரையில் செக்ஸில் ஈடுபடும் போது, உடலில் காயம் ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு காயத்தை சோப்பால் சுத்தம் செய்து பின் பேண்டேஜ் அல்லது கிரீம் தடவுவது சிறந்தது.

Previous articleவாழ்க்கை துணையுடன் வாழ்வு சலிப்படை காரணம் என்ன தெரியுமா?
Next articleநிறைவான கட்டில் உறவை பெற இதை கவனத்தில் கொள்ளவேண்டும்