Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு பாலுட்டும்போது தாய்மார்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை

குழந்தைகளுக்கு பாலுட்டும்போது தாய்மார்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை

79

குழந்தை நலம்:பெண்ணாய் மண்ணில் தோன்றிய ஒவ்வொருவரின் வாழ்க்கை கனவும் தனக்கென தன் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து அதை இந்த மண்ணிற்கு கொண்டு வந்து அதை மிகுந்த அன்புடன் வளர்த்து, அக்குழந்தையின் வாழ்க்கையை வளமாக்குவது தான். அப்படிப்பட்ட தன் வாழ்நாள் கனவான குழந்தையை பெற்றெடுத்த பின், அதற்கு சரியான உணவு மற்றும் நல்ல பழக்கங்களை கற்பித்து வளர்த்தல் அவசியம். இதில் உணவு எனும் விஷயம் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் நாம் உண்ணும் உணவே நம் எண்ணங்களுக்கு, நம் ஆற்றலுக்கு காரணமாகிறது. நமது எண்ணங்கள் மற்றும் ஆற்றலின் அடிப்படையில் தான் நாம் செயல்படுகிறோம். எனவே குழந்தைக்கு அளிக்கும் உணவில் தாய்மார்கள் அதிக கவனம் காட்ட வேண்டும்.

இப்பொழுது மண்ணில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் முதன் முதலாக கொடுக்கப்படும் உணவு தாய்ப்பால். அந்த தாய்ப்பாலை அளிக்கும் தாய்மார்கள் நினைக்கும் விஷயங்களும், அவர்களின் மனநிலையும் அவர்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

தாய்ப்பால் அழுது கொண்டே பிறக்கும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தி, அவர்களின் பசியை போக்கி, ஆரோக்கியமாக வளர வைக்க உதவும் முதல் உணவு தாய்ப்பால் தான். குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாத காலம் வரை அவர்களுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியது தாய்மார்களின் கடமையாகும். தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பாலை அளிக்க வேண்டியதும் தாய்மார்களின் கடமையாகும்; எனவே, தாய்ப்பால் அளிக்கும் காலகட்டத்தில் தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைக்கும் உணவுகளை தாய்மார்கள் அதிகம் உட்கொண்டு குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட வேண்டும்.

எப்பொழுதெல்லாம் கொடுக்க வேண்டும்? பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை என தாய்ப்பால் அளிக்க வேண்டும். குழந்தைகள் 6 மாத வயதை எட்டும் போது, அவர்கள் திட உணவை உட்கொண்டு செரிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக மாறுவார்கள். எனவே ஆறு மாதத்திலிருந்து திட உணவுகளையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்; அந்த சமயத்திலும் ஒரு நாளைக்கு 4-5 முறையாவது தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்பு தானாக நிற்கும் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளித்து வருதல் சிறந்தது.

எப்படி கொடுக்க வேண்டும்? குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும் போது, தாயானவளின் முழு கவனமும் குழந்தையின் மீது இருக்க வேண்டும். மேலும் குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது ஒரு ஷால் போன்ற போர்வை அல்லது துண்டினை கொண்டு மார்பகத்தை லேசாக மூடுதல் வேண்டும். குழந்தை துணியால் மூடப்பட்டு பாலூட்டப்படும் பொழுது, அதன் முழுக்கவனமும் பால் குடிப்பதன் மீது பதியும்; அப்பொழுது தான் போதுமான அளவு பாளை எவ்வித தொந்தரவும் இன்றி, திசை திரும்பாது, ஒருமுகத்தன்மையோடு பருகும். தாயும் குழந்தை பால் சரியாக குடிக்கிறதா? ஆடை விலகுகிறதா? என்று குழந்தையை பற்றியே சிந்திப்பாள். தாய்ப்பால் அளிக்கும் பொது உட்கார்ந்து அளித்தல் வேண்டும்; நின்று கொண்டோ நடந்து கொண்டோ அளிப்பது கூடாது.

அன்னையின் மனநிலை: புதிதாக தாயான பெண்கள் முதல் முறையாக பாலூட்டும் போதோ அல்லது குழந்தையை கவனிக்கும் ஒவ்வொரு செயலை செய்யும் போதும் ஒருவித பயத்துடனேயே செயல்படுவர். அவர்கள் மனதில் கொள்ளும் பயம் மறைமுகமாக தங்கள் குழந்தையையும் பாதிப்பதை தாய்மார்கள் அறிந்திருப்பதில்லை. தாயின் வயிற்றில் உருவாகி, அவள்தம் கைகளில் நான்கைந்து ஆண்டுகள் வளர்ந்து பின்னர்தான், தானாய் தன் வேலைகளை செய்யும் பருவத்தினை குழந்தைகள் அடைகின்றனர். தாயின் அரவணைப்பில் அதிக காலம் வளர்வதால் தாய் கொண்டுள்ள குணாதியங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் எண்ணங்கள் குழந்தையின் பிறவி குணமாக வடிவம் பெறுகின்றன. எனவே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீரோ, அதற்கேற்றவாறு உங்கள் எண்ணங்களை, முடிந்தால் உங்கள் செயல்களையும் கூட மாற்றிக் கொள்வது நல்லது. உதாரணத்திற்கு நீங்கள் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தால், உங்கள் சுபாவம் உங்கள் குழந்தையின் குணமாக மாறிவிடும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்ற மொழியை நெஞ்சில் நிறுத்தி செயல்படுங்கள் தாய்மார்களே!

எப்படி மாற்றுவது? புதிய தாய்மார்கள் பால் கொடுக்கும் பொழுது குழந்தை கடித்து காயங்கள் மற்றும் மார்பகக் காம்புகளில் இருந்து இரத்தம் வழிதல் போன்றவை ஏற்படலாம். இந்த மாதிரியான நேரங்களில் ‘ஹையோ என் அழகு கெட்டுவிட்டதே! வலிக்கிறது’ போன்ற எண்ணங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு குழந்தையின் மீது கவனம் செலுத்த முயலுங்கள். மேலும் பால் கொடுக்கும் போது அமைதியான மனநிலையை மேற்கொள்ளுங்கள். குழந்தை எப்படி படிக்க வேண்டும், எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும், அது எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அமைதியான மற்றும் சந்தோஷமான மனநிலையுடன் நினைத்து பாருங்கள். மேலும் அனுபவம் வாய்ந்த தாய்மார்களும், எவராயினும் வீட்டில் நாடாகும் பிரச்சனைகள், உங்கள் மனதில் நிலைத்து நிற்கும் குழப்பங்கள், சந்தேகங்கள் போன்ற எண்ணங்களை மற்றும் உணர்வுகளை தூக்கி எறிந்துவிட்டு குழந்தைக்கு பாலூட்டுங்கள்.