Home சூடான செய்திகள் உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா? பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை முகம் சுளிக்க வைக்கிறதாம்…

உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா? பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை முகம் சுளிக்க வைக்கிறதாம்…

23

பெண்களைப் பிடிக்காத ஆண்களே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருக்க முடியும். பெண்கள் சில விஷயங்களைச் செய்யும் போது, அவர்களைப் பொறுத்துப்போகும் ஆண்களையே முகம் சுளிக்க வைக்கும் சில விஷயங்களைப் பெண்கள் தொடர்ந்து செய்கின்றனர். அவை என்னென்ன?…

பெண்கள் கீழ்கண்ட விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் செய்யும் சில அளவுக்கு அதிகமான விஷயங்கள் ஆண்களை எரிச்சலடையச் செய்கின்றன.

பெர்ஃபியூம்களை பெண்கள் விரும்பி பயன்படுத்துவார்கள். அதிலும் அடுத்தவர்களை ஈர்க்க வேண்டுமென என நினைத்து, அளவுக்கு அதிகமாக ஸ்பிரே பயன்படுத்துவது ஆண்களை மிகவும் எரிச்சலடையச் செய்கிறதாம்.

ஏதாவது முக்கியமான பொருட்களை எங்காவது வைத்துவிட்டு, தானே தேடாமல் ஆண்களைப் பிடித்து நசநசவென தேடுங்கள் என்று கூறி, நச்சரிப்பது ஆண்களை எரிச்சலின் உச்சத்துக்குக் கூட்டிப் போய்விடும்.

அளவுக்கு அதிகமாக மேக்கப் போடுவது தங்களை எரிச்சலடையச் செய்கிறது என்கின்றனர் ஆண்கள்.

பெண்கள் சாதாரணமாகவே பொறாமை குணமுடன் தான் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவது கொஞ்சம் எரிச்சலைத் தான் உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் பெண்கள், அதை உடனே செய்து முடிக்க வேண்டுமென அடம்பிடிப்பது ஆண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம்