Home இரகசியகேள்வி-பதில் அந்தரங்க கேள்விபதிகள் பகுதி -3

அந்தரங்க கேள்விபதிகள் பகுதி -3

48

என் வயது 30. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை
குழந்தையில்லை. என் கணவருக்கு 35 வயது. அவர் இளம் வயதில் `பொன்னுக்கு
வீங்கி’யால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் உயிரணு உற்பத்தி
பாதிக்கப்பட்டு, உயிரணு மிகக்குறைவாக இருப்பதாக டாக்டர்கள்
கூறுகிறார்கள். அவர் நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பலனில்லை.
நாங்கள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க என்ன சிகிச்சை இருக்கிறது? (லேகா…
புதுச்சேரியிலிருந்து)

முதலில் பொன்னுக்கு வீங்கி என்ற நோயைப் பற்றியும், அதன் தாக்குதல்
தன்மையைப் பற்றியும் கூறி விடுகிறேன். இந்த நோய் ஏற்பட்டால் காதுகளுக்கு
அடியில் இரண்டு கன்னங்களும் வீங்கும். பழைய காலத்தில் இந்த பாதிப்பு
ஏற்பட்டதும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளமால் விளையாட்டுத்தனமாக தங்கச்
சங்கிலியை பாதிக்கப்பட்டவருக்கு அணிவிப்பார்கள். அதனால் பொன்னுக்காக
வீங்குவதாக கருதி இப்படி ஒரு பெயரை வைத்துவிட்டார்கள். புட்டாலம்மை என்ற
பெயரிலும் அறியப்படும் இந்த நோய்க்கு ஆங்கிலத்தில் `மம்ஸ்’ என்று பெயர்.

வைரஸ் தாக்குதலால் உமிழ்நீர் சுரப்பியில் தொற்று ஏற்படுவதால் இந்த நோய்
தோன்றுகிறது. உமிழ்நீர் மூலம் பரவும் நிலை உண்டு. அதனால் இந்த பாதிப்பு
ஏற்பட்டவர்களை தனியாக அமர்த்துவார்கள். எல்லா வயதிலும் இது ஏற்படும்
என்றாலும் (ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியும், பெண்களுக்கு வயதுக்கு
வருவதும் நிகழும்) 12 முதல் 15 வயதிற்கு உள்பட்ட காலத்தில் இதன்
தாக்குதல் தன்மை அதிகம். கன்னங்கள் வீங்கி, உமிழ்நீர் சுரப்பி மட்டும்
பாதித்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நோய் ஆண்களில் 60 சதவீதம்
பேரின் விரைப்பையை தாக்கிவிடுகிறது. (பெண்களைத் தாக்கும் போது அவர்களுடைய
சினைப்பையை பாதிக்கிறது.) விரைப்பையை பாதிக்கும் போது உயிரணுவை உற்பத்தி
செய்யும் செல்களை அழிக்கும். அதனால் மிகக்குறைந்த அளவிலே அவர்களுக்கு
உயிரணு உற்பத்தியாகும். (பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி பாதிக்கும்)
இந்தியாவில் குழந்தையின்மை அதிகமாகிக் கொண்டிருக்க இந்த நோயும் ஒரு
முக்கிய காரணமாக இருக்கிறது.

இதன் பாதிப்பை உணரும் போது, `இந்த நோய் வராமலே தடுக்க வழி இருக்கிறதா?’
என்று கேட்பீர்கள். இருக்கிறது. ஒன்றரை முதல் இரண்டு வயதிலும், ஐந்து
வயதிலும் `எம்.எம்.ஆர்’ என்ற தடுப்பூசியை போட வேண்டும். வருவதை தடுக்க
முடியாதவர்கள் நோய் வந்த உடனே உஷாராகிவிட வேண்டும். முதல்வேலையாக,
மற்றவர்களுக்கு அது பரவாமல் இருக்க அவர்கள் தனியாக இருந்துகொள்ள
வேண்டும். நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஆண் என்றால் விரைப்பை
தாக்கப்டும் தன்மையை குறைக்கவும், பெண் என்றால் சினைப்பை தாக்கப்படுவதன்
தன்மையை குறைக்கவும் அதற்கான மருந்துகளை சாப்பிட டாக்டரிடம் ஆலோசனை பெற
வேண்டும்.

ஆண்களுக்கு உயிரணு குறைபாடு ஏற்படும் போது அதை,

* சரி செய்யக்கூடியது.

* ஓரளவுக்கே சரி செய்யக்கூடியது.

* சரி செய்ய வாய்ப்பில்லாதது

-என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். வெரிக்கோசில், கிருமிகளின் தொற்றால்
விந்துப் பையில் ஏற்படும் அடைப்பு, செக்ஸ் பிரச்சினைகள், ஹார்மோன்
குறைபாடு ஆகியவைகளால் உயிரணு உற்பத்தி குறைவாக இருந்தால் அது முழுமையாக
சரி செய்யக்கூடியது. குறிப்பிட்ட நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும்போது
ஏற்படும் பின்விளைவுகள், கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்றவைகளால் ஏற்படும்
பாதிப்புகளால் ஏற்படும் உயிரணு உற்பத்தி குறைபாட்டை ஓரளவு சரி செய்யலாம்.

விந்துப்பை வயிற்றுக்குள்ளே இருப்பது, விந்து குழாய் வளராமல் இருப்பது,
ஒரு சில நோய்கள், குரோமோசோம் குறைபாடு போன்றவைகளால் உயிரணு உற்பத்தி
குறைந்திருந்தால் அதனை சரி செய்வது சிரமம். `மம்ஸ்’ மூலம் உங்கள்
கணவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அவரது உயிரணு உற்பத்தியை
அதிகரிப்பது சிரமம். மிகக் குறைந்த அளவிலே உயிரணு இருந்தாலும் கவலைப்பட
வேண்டியதில்லை. `இக்சி’ போன்ற நவீன சிகிச்சை முறைகளால் நீங்கள் பெற்றோராக
வாய்ப்பிருக் கிறது.

-டாக்டர்

***

திவ்யாவுக்கு 32 வயது. கணவர் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.
இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. திருமணமாகி ஆறு வருடங்கள்
ஆகியுள்ளன. இருவரும் எரிச்சல் கலந்த முகத்தோடு வந்தமர்ந்தார்கள்.

“இவள் காலையில் சீக்கிரம் விழிப்பதில்லை. வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டு
வதில்லை. மதியமும் தூங்குகிறாள். இவள் சமைக்கும் சாப்பாட்டை என்
பெற்றோர், தங்கைகள் எல்லாம் குறை சொல்கிறார்கள்….”-என்று கணவர்
ஆரம்பித்தார். திவ்யா அமைதியாக இருந்தாள்.

அவள் தனது தாய் வீட்டில் வளர்ந்த விதத்தைப் பற்றி விசாரித்தேன்.

பெற்றோருக்கு ஒரே மகளாக வளர்ந்திருக்கிறாள். வசதியுள்ள குடும்பம். அதிக
செல் லத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறாள். வீட்டு வேலைகளில் அவள்
பழக்கப்படுத் தப்படவேயில்லை.

“என் பெற்றோர் ஆசிரியர்கள். நான் ஒரே மகள். தனிக்குடித்தனமாக பெற்றோர்
வாழ்ந்ததால் அன்புக்கு ஏங்கினேன். கூட்டுக்குடும்பத்தில்
வாழ்க்கைப்பட்டால் அதிக அன்பு கிடைக்கும். தனிமை தெரியாது என்று
நினைத்தேன். நான் விரும்பியபடி கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டேன்.
ஆனால் இவருடைய குடும்பத்தில் நான் எதிர்பார்த்த அன்போ, அனுசரணையோ
கிடைக்கவில்லை. மாறாக வேலைக் காரியாக்கப்பட்டிருக்கிறேன்”-என்றாள்.

“குடும்பத்துக்கு வாழ வந்த மருமகள் என்றால் காலையில் எழுந்து, குளித்து,
பூஜைகள் செய்ய வேண்டும். பின்பு சமையல் செய்ய வேண்டும். இதை எல்லாம்கூட
இவள் செய்ய மறுக்கிறாளே…”-என்றார் கணவர்.

பதிலுக்கு அவள் பேசுவதற்கு தயங்கிக் கொண்டிருந்தாள். வேறு காரணங்களைச்
சொல்லி கணவரை வெளியே அமரவைத்தேன்.

“நான் படித்திருந்தாலும் வேலைக்குச் செல்ல ஆசைப்படவில்லை. அவருடைய தாயார்
ஒரு சில மகளிர் அமைப்புகளோடு தொடர்பு வைத்திருக்கிறார். அந்த பணிகளுக்காக
அவர் சென்றுவிடுவார். அவருடைய அப்பா துணிக்கடை நடத்துகிறார். தங்கைகள்
இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே
வெளியே சென்று விடுகிறார்கள். நான் மட்டும் வேலை வெட்டி எதுவும் இல்லாமல்
இவர்களுக்கு சமைத்துப் போட்டு, இவர்களை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்
பட்டிருக்கிறேன். திருமணமாவதற்கு முன்புவரை என் தாய்க்குகூட சமையல்
செய்து கொடுத்ததில்லை. இங்கு இவருடைய தங்கைகள் இருவரும் அந்த உணவு
வேண்டும், இந்த உணவு வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் அதை செய்து
கொடுத்தால் ஆயிரம் குறை சொல்கிறார்கள். நான் என்ன சமையல்காரியா?…”-
என்றாள் ஆவேசமாய்.

“நீ காலையிலும், மதியமும் அளவுக்கு அதிகமான நேரம் தூங்குவதாக உன் கணவர்
சொல்கிறாரே?”

“எனக்கு அதிகாலை வரை தூக்கமே வருவதில்லை. விடியும் போதுதான் தூக்கம்
வருகிறது. அதனால் காலையில் விழிக்க சிரமமாகிவிடுகிறது…”

“அதிகாலை வரை உனக்கு தூக்கம் வராததற்கு என்ன காரணம்?”

“அவர்தான் காரணம். எனக்கு இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. எனக்கு
தேவைப்படும் எந்த பொருளை என் பெற்றோரிடம் கேட்டாலும் உடனடியாக வாங்கித்
தந்துவிடுவார்கள். ஆனால் இவரிடம் ஒரு பொருளைக் கேட்டால் அம்மாவை சமாளிக்க
வேண்டும். தங்கைகளை சமாளிக்க வேண்டும் என்று ஆயிரம் காரணங்கள்
சொல்கிறார். அது சரியில்லை.. இது சரியில்லை என்று கூறி இவரும் என்னை
அடிக்கடி திட்டுகிறார். இவைகளை எல்லாம் நினைத்து நினைத்து நான் தூக்கம்
இல்லாமல் புரள்கிறேன். முன்பெல்லாம் அவர் வாரத்திற்கு இரண்டு முறை `உறவு’
வைத்துக் கொள்வார். இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறைகூட நானாக
விரும்பினால்தான் உண்டு. அவருக்கு நிறைய பெண் தோழிகள் இருக்கிறார்கள்.
என்னிடம் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை எல்லாம் அந்த பெண்களிடம் தீர்த்துக்
கொள்கிறார்”- என்று அவர் மீது தான் சந்தேகப்படுவதையும்
வெளிப்படுத்தினாள்.

“உனக்கு தூக்கம் குறைந்து போகக் காரணம் உன் மனக்குழப்பம். மனது
மகிழ்ச்சியாக இருந்தால் தூக்கமும் நன்றாக வரும். அது போல் உன் கணவருக்கு
தாம்பத்ய ஆர்வம் குறைந்து போகவும் அவர் மனதே காரணம். அவர் வேறு பெண்களோடு
தொடர்பு வைத்திருப்பார் என்று நீ நினைப்பது பெரும்பாலும் கற்பனையாகத்தான்
இருக்கும். `செக்ஸ் ஆசையை 90 சதவீதத்திற்கு மேல் ஊக்குவிப்பது
கழுத்துக்கு மேலுள்ள பகுதிதான்’ என்று ஒரு வாக்கியமே உண்டு. உன்மனது
நிம்மதியாக இருந்தால், உனக்கு தூக்கம் வந்துவிடும். அவர் மனது நிம்மதியாக
இருந்தால் அவருக்கு தாம்பத்ய ஈடுபாடும் அதிகரித்துவிடும். அதனால் நீங்கள்
இருவரும் பேசி, உங்கள் மனக்குழப்பங்களை தீர்க்கும் வழியைப் பாருங்கள்”-
என்றேன். அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க பேமிலி கவுன்சலிங்
கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைய பெண்கள் சுதந்திரமாகவும், மன மகிழ்ச்சியாகவும் வாழ
விரும்புகிறார்கள். திருமணத்திற்கு முன்பு அவர்கள் அப்படி வாழ பெற்றோர்
அனுமதிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பும் அவர்களது மகிழ்ச்சிக்கு
குறைபாடு வராத அளவிற்கு அவர்கள் மண வாழ்க்கை அமையவேண்டும்.
சிரிப்பிற்கும், அன்பிற்கும் மனைவி யானவள் ஏங்கும் நிலை ஏற்பட்டால்
அவளின் நிம்மதி பறிபோய்விடுகிறது. அப்போது மனைவிக்கு கணவரைப் பார்க்கவே
எரிச்சல் ஏற்படுகிறது. அந்த எரிச்சல் தீர்க்கப்படவில்லை என்றால்
வெறுப்பாக மாறும். வெறுப்பு கணவரிடம் குறை காண ஊக்குவிக்கும்.
அப்போதுதான் தாம்பத்ய ஆர்வமின்மை, சந்தேகம் போன்றவை தலை தூக்குகிறது.

ஆண்களில் பெரும்பாலானவர்கள் தனது கீழ் வேலை பார்ப்பவர்களிடம் விட்டுக்
கொடுத்து வேலை வாங்கும் கலையை கற்றுவைத்திருக்கிறார்கள். பல நேரங்களில்
கீழிறங்கி வந்து அவர்களை திருப்திபடுத்தி வேலை வாங்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களே தன் மனைவி சின்னச்சின்ன தவறு செய்யும்போது
விட்டுக்கொடுக்கும் மனநிலை இல்லாமல் அதை குறையாகக் கருதி, பெரிய
விஷயமாக்கிவிடுகிறார்கள். அதனால்தான் பெரும்பாலான குடும்பங்களில்
பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

-டாக்டர்
***

என்னதான் உலகம் மாறிக் கொண்டிருந்தாலும், மனித உணர்வுகளிலும்-
எண்ணங்களிலும் எவ்வளவுதான் புதுமைகள் புகுந்து கொண்டிருந்தாலும் திருமணம்
என்று வரும்போது அந்தப் பொறுப்பை இன்றைய ஆண்களும், பெண்களும் பெற்றோரிடமே
விட்டுவிட விரும்புகிறார்கள். சினிமாக்களில் ஓகோவென்று புகழப்படும் காதலை
ஒரு ரவுண்டு மக்கள் ரசித்து அதை தங்கள் வாழ்க்கையில் இணைத்து
பார்த்தார்கள். அதன் ரிசல்ட் அந்த அளவிற்கு தெளிவில்லை என்பதால், `கல்யாண
விஷயத்தை அப்பா- அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும்’ என்று
விட்டுவிட்டார்கள்.

பெற்றோர்கள் பார்த்து, பேசி, முடிவு செய்து வாழ்க்கையில் இணைத்து
வைக்கும் பெரும்பாலான தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பின்புதான் நல்ல
அறிமுகம் கிடைக்கிறது. அவர்கள் திருமணமான தொடக்க காலத்தில்
ஒருவருக்கொருவர் புதியவரே. அவர்கள் ஒருவரை இன்னொருவர் புரிந்துகொள்ளவும்-
உணர்வுகளைத் தெரிந்து கொள்ளவும்- விருப்பு, வெறுப்புகளை
உணர்ந்துகொள்ளவும் அவர்கள் திருமணமான தொடக்க காலத்தை
பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்றைய திருமணங்கள் தொடக்க காலத்திலே
விரிசல் ஏற்பட்டு, ஒரு வருடத்திற்கு முன்பே விவாகரத்து வரை
சென்றுவிடுகின்றன. இதற்கு காரணம், ஒருவரை ஒருவர் தொடக்க காலத்திலே
முரண்பாடாக புரிந்து கொள்வதுதான்.

புரிந்து கொள்ளும் விஷயத்தில் கணவர்-மனைவி இருவருமே `கண்டுபிடி..
கண்டுபிடிடா கண்ணாளா..’ என்று கண்ணாமூச்சி ஆடாமல்… பேசி, சிரித்து,
விளையாடி, சாப்பிட்டு தங்கள் உணர்வுகளை எல்லாம் வெளிப்படையாக உணர்த்த
வேண்டும். அதன்பின்பு அவர்கள் செக்சில் ஈடுபட்டால் இன்ப நிலை
அதிகரிக்கும். அப்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும், ஒருவரை
ஒருவர் அங்கீகரிக்கவும் முன்வருவார்கள். அதுதான் இல்லற வாழ்க்கைக்கே
அடிப்படை.

`தாம்பத்யத்திற்கு’ அணுகும்போது பயம், பதட்டம் தேவையில்லை. எல்லா
மனிதர்களுக்கும் செக்ஸ் விருப்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.
எப்படியாக இருந்தாலும் பயமில்லாமல், திறந்த மனதோடு, ஈடுபாட்டோடு நடந்து
கொண்டாலே செக்ஸ் இனிக்கும். கணவன்- மனைவி உறவும் வலுக்கும்.