Home இரகசியகேள்வி-பதில் அந்தரங்க கேள்விகள் பதில்கள் தொடர்

அந்தரங்க கேள்விகள் பதில்கள் தொடர்

122

என் வயது32. ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். கணவர் என் மீது அதிக பாசம்

கொண்டவர். ஒன்பது வயதில் மகன் இருக்கிறான். நாங்கள் இருவரும் வேலை

பார்ப்பதால், அடுத்த குழந்தை பிறந்தால் கவனிக்க முடியாது என்ற எண்ணத்தில்
மூன்று முறை அபார்ஷன் செய்தேன் . எப்படியாவது ஒரு பெண் குழந்தையை பெற்
றெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு , மீண்டும் தாய்மையடைந்தேன். பிரசவத்
திற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன் . என்ன நடந்ததோ தெரியவில்லை. நான் ஆசைப்
பட்டது போலவே பெண்ணாக உருவெடுத்திருந்த அந்த குழந்தை, வயிற்றிலே இறந்து
விட்டது. குழந்தையை வயிற்றிலிருந்து வெளியேற்ற ஆபரேஷன் செய்தபோது ,
கர்ப்பப் பையும் கிழிந்திருப்பதாகக்கூறி, அதையும் சேர்த்து
அகற்றிவிட்டார்கள். அதன் பிறகு என் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது .
அன்பான என் கணவரின் தாம்பத்ய ஆசையை என்னால் தீர்த்துவைக்க முடியவில்லை .
உறவின் போது பயங்கர வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது . இதனால் எனக்கு
தாம்பத்யம் என்றாலே பயம் ஏற்படுகிறது. தாம்பத்யத்தில் திருப்தி
கிடைக்காததால் என் கணவர் என்னை விட்டு அகன்று விடுவாரோ என்று
கவலைப்படுகிறேன். ஆபரேஷனுக்குப் பிறகு என் உடல் எடை பத்து கிலோ
அதிகரித்து 63 கிலோவாகி விட்டது . என் மகன் தனக்கு மட்டும் ஒரு தம்பியோ,
தங்கையோ இல்லையே என்று ஏங்குகிறான் . இந்த விஞ்ஞான யுகத்தில் என் குடும்
பத்தின் இன்னொரு குழந்தை ஆசையைத் தீர்க்க எந்த வழியும் இல்லையா ? நான் என்
கணவருக்கு உடல் ரீதியாகவும் நல்ல மனைவியாக இருக்க ஆலோசனை கூறுங்கள்.
இது மாதிரி சம்பவங்கள் வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது

. ஒன்றுக்கு மேல் குழந்தை வேண்டாம் என்ற பட்சத்தில் பாதுகாப்பான (தற்காலிக தடையில்) உடலுறவு கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, முதலில் குழந்தை தரித்து, பிறகு அதை களைத்து , இதனால் அடுத்து பிறக்க இருக்கும் குழந்தைக்கும் பேராபத்தாகிவிடும். இன்னும் தாயாக இருக்கும் அந்த பெண்ணின் உயிருக்கும் கேடாகவும் அமைந்துவிடும் .
இதனால்தான் நாங்கள் சொல்லுவோம் குடும்ப கட்டுபாடு என்பது செய்ய கூடாது

, குடும்ப கட்டுபாடு என்பது குழந்தை பிறக்க நிரந்தர தடையாக அமைந்துவிடும். ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைபடும் பொழுது பெற்று கொள்ள முடியாத சூழ்நிலையும் அமைந்துவிடும் , குடும்ப கட்டுபாடு செய்து கொண்டால்.
ஏற்கனவே

இருக்கும் ஓரிரு பிள்ளைகளும் இயற்கை சீற்றம் அல்லது விபத்துகளினால் இறந்துவிட நேரிட்டால்கூட (இறைவன் உதவியால் அப்படி ஏதும் ஏற்பட கூடாது )
பெற்றோர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறது

. ஆகவே குடும்ப கட்டுபாடு போன்றவற்றை செய்யாமல் வாழ்க்கை வாழ்வதே சிறந்தது என்று , எங்கள் வழியில் நான் சொல்ல ஆசைபடுகிறேன்.
பத்து குழந்தை பெற்றால் அதை பராமரிக்க முடியாது

, நமக்கு போதியம் ஊதியம் இல்லை என்பதுகூட ஒரு மன பலவீனம்தான் . ஒவ்வொரு குழந்தை அடுத்து அடுத்து பிறக்கும்போதும் அதற்கான செல்வம் கூடிகொண்டேதான் இருக்கும் . இதை நான் சொன்னால் நம்ப மாட்டீங்க. உணர்ந்தால் மட்டுமே நம்புவீர்கள் 🙂
நட்புடன்