Home காமசூத்ரா அதிக உறவுகொண்டால் பெண்ணின் அந்தரங்க உறுப்பு பெரிதகுமா?

அதிக உறவுகொண்டால் பெண்ணின் அந்தரங்க உறுப்பு பெரிதகுமா?

79

அந்தரங்க தகவல்:அதிகமாக உடலுறவு கொண்டால் பெண்ணின் அந்தரங்க உறுப்பு பெரிதாகிவிடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. அதனைப்பற்றி ஒரு தகவலை இங்கு காண்போம்.

பெரும்பாலானோர் தங்களது பிறப்புறுப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதனை சரியாக பராமரிக்க பலர் தவறிவிடுகின்றனர். இதற்கு காரணம் அதனை யாருக்கும் தெரியாமல் அந்தரங்கமாக மறைத்து வைத்திருப்பது தான்.

வெளியில் தெரியும் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நம்முடன் பழகுபவர்கள் நமக்கு தெரிவிப்பார். அதன் மூலம் நாம் அந்த உறுப்புகளை பராமரிக்க துவங்குகிறோம். ஆனால் அந்தரங்க உறுப்புகளை பற்றி நமக்கு யாரும் அறிவுரை கூறுவதில்லை.

ஒரு பெண் எத்தனை பேருடன் உறவு கொண்டிருக்கிறாள் என்பதனை பிறப்புறுப்பின் அளவு காட்டிக்கொடுக்குமா என்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆனால் இது மகப்பேறு மருத்துவரால் கூட கண்டுபிடிக்க முடியாத, கண்டுபிடிக்க இயலாத என்ற மாபெரும் இரகசியம். ஒரு மகப்பேறு மருத்துவரால் ஒரு பெண் அல்லது ஆண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்று கண்டறிய முடியும்; ஆனால், ஒருமுறை கன்னித்தன்மை பறிபோன பின் எத்தனை பேருடன் உடலுறவு கொள்ளப்பட்டது என்று சாதாரண நபர்களில் கண்டறிய முடியாது. அது நீங்கள் மட்டுமே அறிந்த இரகசியமாக இருக்கும்.

ஆனால், ஒரு பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தும் பொழுது, அவளின் சுய இச்சையை மீறி கற்பழிக்கப்படுகிறாள்; அந்த சமயத்தில் அவள் மீது நடக்கும் தாக்குதல்கள், அவளை எத்தனை பேர் துன்புறுத்தி கற்பழித்து இருப்பார்கள் என்று பெண்ணின் பிறப்புறுப்பில் மற்றும் உள்ளுறுப்புகளில் நிகழ்ந்த சேதத்தை வைத்து கண்டறிய முடியும்.

அதிக முறை உடலுறவு கொண்டால் பிறப்புறுப்பின் அளவில் மாறுபாடு ஏற்படுமா என்ற கேள்வி பலரது மனதில் நிலவலாம். இது முக்கியமாக பெண்கள் அனைவரின் மனதில் நிலவும் கேள்வி. ஏனெனில் ஆண்களில் எத்தனை முறை உறவு கொண்டாலும், ஆண்களின் பிறப்புறுப்பின் அளவு மாறாது.

ஆனால், பெண்களின் பிறப்புறுப்பின் அளவு சற்று மாறுபடலாம். பிறப்புறுப்பு மாறுபாடு என்பது எத்தனை முறை எத்தனை பேருடன் தாம்பத்யம் கொண்டீர்கள் என்ற விஷயங்களை பொறுத்து அமையாது. பெண்ணின் பிறப்புறுப்பு குழந்தையை பெற்ற பின் சற்று விரிவடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இந்த மாற்றம் புலப்படும்.

தாய்மையால் அகண்ட பிறப்புறுப்பு மீண்டும் பழைய நிலையை கூடிய விரைவில் அடைந்துவிடும். பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாறுபாடு மிகக் கூர்மையாக நோக்கினால் மட்டுமே புலப்படும்; இந்த பிறப்புறுப்பு அளவு மாற்றம் சில பெண்களில் மட்டும் நிகழ்கிறது.