Home இரகசியகேள்வி-பதில் வாசகர் அந்தரங்க கேள்வி பதில்

வாசகர் அந்தரங்க கேள்வி பதில்

183

கேள்வி :
வணக்கம் பெயர் கவிதா (மாற்றப்பட்டுள்ளது) எனக்கு வயது இருப்பத்து மூன்று..எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க போகிறது..நான் திருமணத்துக்கு முதல் ஒருவரை காதலித்தேன்.அறியாமல் அளவுக்கு மீறி பழகியதால் அவரிடம் எனது கர்ப்பை இழந்து விட்டேன்.இதை எனது வருங்கால புருஷன் தெரிந்து கொள்ளாமல் இருக்க எதாவது வழி இருக்கிறதா? தயவுசெய்து பதில் தரவும்..

பதில் :
நண்பியே உமது பிரச்சினை புரிகிறது. உமது கணவருக்கு எச்சந்தர்பத்திலும் தாங்கள் முதலில் கர்ப்பை இழந்த விடயம் தெரியது. கடலில் ஒரு கப்பல் சென்றால் அந்த பாதையை யாரும் அறிய முடிவதில்லை. அது போலவே பெண்ணுறுப்பும். முதல் உறவில் இரத்தம் வெளியேறுவது என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியமன்று காரணம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று பணிபுரிகின்றார்கள். கன்னிதிரை சைக்கில் ஓட்டுதல் ஜிம்மாஸ்ரிக் மற்றும் அன்றாட இதர வேலைகளின் போது கிழிய வாய்ப்புக்கள் உண்டு. உடல்உறவின் போது தான் கன்னித்திரை கிழியும் என்று இல்லை. ஆகவே தங்கள் கணவர் எச்சந்தர்பத்திலும் தாங்கள் முதல் உறவில் ஈடுபட்டது அறிய மாட்டார். தங்கள் வாழ்கை நலனுக்காக தாங்கள் இதை மறைப்பதே நன்று. தேவையற்ற கவலையை விடுத்து. திருமணத்தின் பின் விதம்விதமாக உறவுவைத்து மகிழுங்கள். வாழ்கை அனுபவிப்பதற்கு அது நிச்சயம் நல்ல வழியாக இருக்கவேண்டும் என்பது தான்.
நன்றி

நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில் இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடி தண்ணீர் எடுக்கச் சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானையை தூக்கி வைக்க, பக்கத்தில் யாரும் இல்லாததால், அந்த நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானையை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்தமிட்டேன். அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை.

எனக்கு திருமணம் நடந்தது. என் உறவினரின் மகள் (18 வயது) திருமணத்திற்கு வந்திருந்தாள். நல்ல அழகான குடும்ப பாங்கான பெண். அவளுக்கும் திருமணமாகி, தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. முதன் முதலாக, அவளை திருமண மண்டபத்தில் பார்த்தபோது, என் மனம் அவளை விரும்பியது. நானும் அவளும் எங்கள் காதலை மனதிற்குள் வைத்து சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். நான் பெங்களூரு சுற்றுலா சென்று இருந்தேன். ஒரு நாள் நள்ளிரவு அவளுடன் போனில் பேசும் போது, ஏதோ விஷயத்தை சொல்ல முடியாமல் தவித்தாள்; நானும் தவித்தேன். இறுதியில், ஒரு மணிநேர பேச்சுக்குப் பின், நான் மறைத்து வைத்திருந்த காதலை தெரிவித்தேன். அவளும் காதலை வெளிப்படுத்தினாள்.

நான் பெங்களூரில் இருந்து வந்ததும், நானும், அவளும் பல முறை “உறவு’ வைத்துக் கொண்டோம். என் மனைவிக்கும், அவளை நன்றாக தெரியும். அவள் கணவர், என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நானும், அவளும் கிட்டதட்ட, 13 ஆண்டுகள் பழகி வந்த விஷயம், அவளது கணவனுக்கு நன்றாக தெரியும். நான் அவளோடு கணவன் – மனைவியாக, “இருட்டு வாழ்க்கை’ வாழ்ந்து வருகிறேன். அவளது கணவன், இதுவரை சந்தேகப்பட்டு எதுவும் கேட்டதில்லை. சந்தேகப்படும் அளவிற்கு, நானும் இதுவரை நடந்து கொண்டதுமில்லை.

பிறகு என் பணி சார்ந்த வேலைகளில், பெண்களை, நான் அதிகம் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது, அப்போது ஒரு பெண், என் மென்மையான பேச்சுகளில் மனதை பறிகொடுத்து, என் மீது, “ஆசை’ உள்ளதாக கூறினாள். எனக்கும் அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளோடும் “உறவு’ வைத்துக் கொண்டேன்.

திண்டுக்கல் அருகே, ஒரு கிராமத்தில் தங்கி பணி புரிந்த போது, ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நான் அவளோடு, “உறவு’ மட்டும் கொள்ளவில்லை. ஆனால், மற்ற விஷயங்கள் எல்லாம் முடிந்து விட்டது.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு, 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி பார்ப்பதற்கு, சினிமா நடிகை போல் இருந்தாள். உள்ளூரில் தான் குடியிருந்து வருகிறாள். அவ்வப்போது பார்த்தாலும், பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. லேசாக புன்னகைத்து செல்வாள். சமீபத்தில், ஒரு நாள் அவளை நேரில் சந்தித்தேன். ஒரு கோவிலில் இறக்கி விடுமாறு என்னிடம் கூறினாள். நானும், என் பைக்கில் ஏற்றிச் சென்றேன். ஒரு மணிநேர பயணத்திற்குப் பின், அவளும் என்னை ரொம்ப நாள் விரும்புவதாக கூறினாள். நானும் சம்மதித்தேன். அவளோடும், “உறவு’ கொண்டேன்.

அக்கா… நான் என் மனைவியையும், குழந்தைகளையும் சந்தோஷமாக வைத்து இருக்கிறேன். என் மனைவியிடம் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள் ஏற்பட்டிருக்கிற செக்ஸ் நோய்க்கு என்ன மருந்து? இதை என்னால் நிறுத்த முடியவில்லை! என் மனதில் குற்ற உணர்ச்சி கடுகளவும் உருவாகவில்லை.

என் மனைவியோடும், வாரம் ஒரு முறை “உறவு’ வைத்துக் கொள்கிறேன். மலருக்கு மலர் தாவும் வண்டாக இருக்கும் எனக்கு, ஒரு நல்ல வழியை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

— இப்படிக்கு.

அன்புள்ள சகோதரருக்கு,

உங்களின் வீரதீர சாகசக் கடிதம் கிடைத்தது; வாசித்தேன். பெண்களுடன், “செக்ஸ்’ வைத்துக் கொள்வதை, வேட்டையாடுவது போல, ஒலிம்பிக்கில் கலந்து, மெடல் பெறுவது போல, எக்கச்சக்க வெரைட்டிகளுடன், அசைவ விருந்து உண்பதைப் போல, பாவிக்கிறீர்கள் சகோதரரே…

உங்களது செய்கைகளில், ஒரு, “எக்சிபிசனிஷம்’ வழிகிறது. ஒரு பெண்ணிற்கு கணவனாய் வாழ்வதை, ஒரு சினிமா ஹீரோ ஷூட்டிங்கில் நடிப்பதைப் போல பாவிக்கிறீர்கள். உங்கள் கடிதத்தில், உங்களின் மனைவி, அவரின் கல்வித் தகுதி, தாம்பத்தியத்தில் அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு பற்றியெல்லாம், குறிப்புகள் இல்லை.

பெண்களிடம் நகைச்சுவையாய் பேசி, அவர்களின் மனங்களை கவருவீர்கள் போல. மிகமிக யோக்கியனாய் நடித்து, அவர்கள் அயர்ந்த நேரத்தில், அவர்களின் உடலை திருடுவீர்கள் போல.

பதிமூன்று ஆண்டுகளாக, குடும்ப நண்பராய் இருக்கும் ஒருவரின் மனைவியோடு, தகாத உறவு வைத்து, குடும்ப நண்பருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளீர்கள். மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கைத் துரோகம் செய்வதை, பெருமையாய் விவரித்துள்ளீர்கள்.

உங்களின் தவறான தொடர்புகளுக்கு, மிகவும் முன்னெச்சரிக்கையாய் இருக்கிறீர்கள். தேவையற்ற கர்ப்பங்களையும், உயிர்க் கொல்லி நோய்களையும் தவிர்க்க, இந்த உபாயத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.

உங்களின் கள்ளத்தனம், உங்களது மனைவிக்கு தெரியாது என, நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; இது தவறு. 15 ஆண்டு தாம்பத்தியத்தில், நீங்கள் செய்த அனைத்து நம்பிக்கைத் துரோகங்களையும் பட்டியலிட்டு வைத்திருப்பார். உங்களை ஏதாவது ஒரு விதத்தில் பழிவாங்க, கொக்குபோல் ஒற்றைக் காலில் காத்துக் கொண்டிருப்பார்.

உங்களுடன் தவறான உறவு வைத்துக் கொண்ட பெண்கள் எல்லாம், உங்களை போன்ற சாகச விரும்பிகள்தான். அவர்களின் குணாதிசயத்தை வைத்து, மற்ற குடும்பத்துப் பெண்களின் குணாதிசயங்களை எடை போடாதீர்கள்.

இனி, உங்களுக்கான தீர்வை கவனிப்போம்.

நீங்கள், “செக்ஸ் டி அடிக்ஷன் தெரபி’ சிகிச்சை செய்யலாம். காரம், எண்ணெய் கூடிய அசைவ உணவை தவிர்க்கலாம். மனைவியுடன் ஒரு முறைக்கு பதில், மும்முறை தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம். மனைவி, மக்கள், உறவு, நட்பு வட்டத்துக்கு, நம்பிக்கைத் துரோகம் ஒரு நாளும் செய்யக் கூடாதென்று, சங்கல்பம் செய்து கொள்ளலாம்.

தகாத உறவுகளை ஊக்குவிக்கும் நட்பு வட்டம் இருந்தால், அதை கத்தரித்து விடலாம். சினிமா பார்ப்பதை, வெறும் பொழுது போக்காய் கருதுதல் நலம். அதை வாழ்க்கையுடன், பொருத்திப் பார்க்கக் கூடாது.

மது எத்தனை கோப்பையில் இட்டாலும், அத்தனையும் சுவை ஒன்றே என்றும்; கடலளவு நீர் இருந்தாலும், கையளவே அள்ளி குடிக்க முடியும் என்று, நினைத்துப் பார்க்க வேண்டும் நீங்கள். ஆண்கள் சேவல்கள் அல்ல; நினைத்த போதெல்லாம் கோழிகளை துரத்த.

எல்லா வேட்கைகளிலிருந்தும், ஒரு தருணத்தில் இளைப்பாறுதல் சிலாக்கியம் சகோதரரே. பருவ வயதில் பெண்களை துரத்திப் போனீர்கள். இப்போது உங்களுக்கு வயது, 43 ஆகி விட்டது. இனிமேலும், பிறன்மனை கவரும், அற்ப செயல்களில் ஈடுபடாதீர்கள். மகனுக்கும், மகளுக்கும் புண்ணியங்களை சேர்த்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துங்கள். சொந்த வீடு என்றால், தோட்டம் வளர்த்து பராமரியுங்கள். பக்தி மார்க்கம் சென்று, மனதை ஒருமுகப்படுத்துங்கள். பக்தி இலக்கியம் வாசியுங்கள்.

உங்களின், “செக்ஸ்’ நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது. தீயவைகளை பேசும்போது, நாடும் போது, செய்யும் போது, குற்ற உணர்ச்சி படுதல், திருந்துவதற்கான அடிப்படை. குற்ற உணர்ச்சி மனசாட்சியின் குரல்!