Home இரகசியகேள்வி-பதில் தொடர்ந்து உறவு கொள்வதை விட ஒய்வு எடுத்து உறவு கொள்ளுதல் பற்றி தகவல்

தொடர்ந்து உறவு கொள்வதை விட ஒய்வு எடுத்து உறவு கொள்ளுதல் பற்றி தகவல்

505

அந்தரங்க கேள்வி பதில்கள்:உடலுறவு நல்ல உணர்வை தருவது ஏன்?
அதிக செறிவுள்ள நரம்புகள் ஆணுறுப்பு / பெண்ணுறுப்பு இடத்தில் தான் முடிவடைகிறது. இதனால் தான் அதிக உச்சம் காணப்படுகிறது. டோபமைன் தூண்டிவிடப்படுவதால் மூளையில் இருந்து ஓர் இனிமையான உணர்வு பிறக்கிறது.

மேக வெட்டை மற்றும் கிளமீடியா எப்படி ஏற்படுகிறது?
மேக வெட்டை மற்றும் கிளமீடியா (gonorrhea and chlamydia) ஆகிய இரண்டுமே உடலுறவு மூலமாக ஏற்படும் நோய் தான். நேரடியாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதால் தான் இந்த இரண்டு நோய்களும் அதிகம் ஏற்படுகிறது.

ஆன்டி-பயாடிக்ஸ் மூலமாக பிறப்புறுப்பு பகுதியில் தொற்றும் இந்த நோயை குணப்படுத்த முடியும். மருத்துவம் செய்ய தவறினால் இது இனப்பெருக்க குறைபாட்டை ஆண், பெண் இருவர் மத்தியிலும் ஏற்பட காரணமாக அமையும்.

உடலுறவின் போது வலி ஏற்படுவது ஏன்?
பெண்ணுறுப்பின் ஆழத்தை விட ஆணுறுப்பு தடிமனும், நீளமும் அதிகமாக இருப்பதும் தான் முக்கிய காரணம். இதன் அளவு வேறுபாடு பெரியளவில் அதிகரிக்கும் போது ஆரம்ப நாட்களில் உடலுறவின் போது வலி ஏற்படலாம்.

சில சமயங்களில் பெண்ணுறுப்பில் தொற்று / புண் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கூட உடலுறவின் போது வலி ஏற்படலாம். தொடர்ந்து வலி இருந்து வந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
இது மகரந்தச் சேர்க்கை அல்ல!

டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன.
ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்… தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை?

கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டிருக்கிறார் மனைவி. மழுப்பலான பதிலைச் சொல்லி சமாளித்திருக்கிறார் கணவர்.

உண்மை ஒருவழியாக மனைவிக்குத் தெரிந்தபோது நிலை குலைந்து போனார். கணவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர். அந்த அதிர்ச்சியும் மண வாழ்க்கை வீணாகிப் போன மன உளைச்சலுமே தன் தற்கொலைக்குக் காரணம் என கடிதத்தில் எழுதியிருந்தார்.

அவர் தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்கட்டும். பொதுவெளியிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும்கூட இது தொடர்பான விவாதங்களே நடந்து வருகின்றன
———————————————-
பிரகாஷ், நந்தினி… தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு பிடித்துப் போனது. காதலைச் சொன்னான்.

சம்மதித்தாள்.

திருமணம் ஆனது. 5 வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்குள் சிறு சச்சரவு கூட வந்ததில்லை. திடீரென நந்தினிக்கு கணவன் மீது சந்தேகம். காரணம்..? வீட்டுக்கு வந்தால் அவள் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல சுற்றுபவன், இப்போது கண்டுகொள்வதே இல்லையே.

முன்பு படுக்கையறைக்கு வந்தாலே பிரகாஷின் தொந்தரவு தாங்க முடியாது. தினமும் உறவு கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பான்.

இப்போது சில மாதங்களாக தொடுவது கூட இல்லை. நந்தினிக்கே மூடு வந்து கூப்பிட்டாலும் கூட, அவன் ஆர்வம் காட்டுவதில்லை.

ஒருவேளை கணவனுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என எண்ணி வருந்தினாள். உண்மையில், பிரகாஷுக்கு நந்தினி நினைத்தது போல எந்தப் பெண் தொடர்பும் இருக்கவில்லை.

அவனுக்கு செக்ஸ் மீது உள்ள ஆர்வம் முழுமையாக வற்றிவிட்டிருந்தது.

எதனால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது?

மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும்.

இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று பெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இதை `Emotional fatique’ என்று சொல்வோம்.

தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும்.

மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது?

முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.

சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும். அதனால் கவலைப்பட தேவையில்லை.

மனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது!