Home ஆண்கள் உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

300

நிச்சயமாக இல்லை. விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.

விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்தட்ட அடையும்.
அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும். ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பெண்களின் பிறப்புறுப்பின் அளவினை (ஆழம்) எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும். ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின் போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.

அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும்.

இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது. ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடு படும் போது இன்பம் கிடைக்கிறது.

Previous articleசுகப்பிரசவத்திற்கு பின் ஏற்படும் பொதுவான சிக்கல்கள்!
Next articleவிந்துவை அதிகரிக்க – ஆண்மை பலம் பெற எளிய வழி