Home பெண்கள் தாய்மை நலம் ஒரு பெண் தாய்மை அடைந்தபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஒரு பெண் தாய்மை அடைந்தபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

64

தாய் நலம்:ஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து பரு­வ­ம­டைந்து தனது கல்வி மற்றும் தொழில் நிலையில் முன்­னேறி திரு­ம­ணத்தை நிறைவு செய்த பின்னர் ஒரு குழந்­தைக்குத் தாயாகும் போதே தனது பிறப்பின் பூர­ணத்­து­வத்தை உணர்­கிறாள். இதன் போது பெண்­ணா­னவள் கரு­வுற்று மிகவும் அவ­தா­னத்­துடன் கர்ப்ப காலத்தை கடந்து குறித்த நாளில் பிர­ச­வமும் நடை­பெறும். இதன்­போது அழ­கிய ஒரு குழந்­தை­யையும் பெற்­றெ­டுக்­கிறாள். ஆனால் அத்­துடன் அவ­ளது பணி முடிந்து விட­வில்லை. அக்­கு­ழந்­தையை பேணி பரா­ம­ரித்து தனது உடல் நலத்­தையும் குழந்­தையின் உடல் நலத்­தையும் கவ­னித்துக் கொள்ள வேண்­டி­யது ஒரு தாயான பெண்ணின் கட­மை­யாகும்.

பிர­ச­வத்­திற்­குப்­ பின்­னான பரா­ம­ரிப்­பானது குழந்தை பிறந்த பின்­ன­ருள்ள முதல் 6 கிழ­மை­களில் ஏற்­ப­டக்­கூ­டிய மாற்­றங்கள் மற்றும் அவற்­றுக்­கான தீர்­வுகள் என்­ப­வற்றைத் தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.

இக்­கா­லப்­ப­கு­தியில் கருத்­த­ரிப்பின் போது பெண்ணின் உடலில் ஏற்­பட்ட மாற்­றங்கள் பழை­ய­படி முந்­திய நிலைக்கு மாறு­கின்­றன.

இவ்­வாறு 6 கிழ­மை­களில் ஏற்­படும் மாற்­றங்­களை 3 வகை­யாகப் பிரிக்­கலாம்.

1. இனப்­பெ­ருக்க உறுப்­பு­களின் உள் ­திருப்பம்

2. பால் சுரத்­த­லைத்­தூண்­டுதல், பாலூட்டல்

3. புதிய குழந்­தையால் ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்­கேற்ப மனோ­பா­வத்தை சரி­ப­டுத்­தலும் அதனால் குழந்­தை­யுடன் ஏற்­படும் பிணைப்பும்.

உட­லியல் உடற்­றொ­ழி­லியல் என்­ப­வற்றில் ஏற்­படும் மாற்­றங்கள்

*பிர­ச­வத்­தின்­போது குழந்­தை­யுடன் தொப்­புள்­கொடி மற்றும் பிள­சென்ரா என்­ப­னவும் வெளி­யேற்­றப்­ப­டு­வ­தனால் கருத்­த­ரிப்­பின்­போது அதி­க­ளவு சுரக்­கப்­பட்ட ஹோர்­மோன்­களும் குறை­கின்­றன.

முதற் கிழ­மைக்குள் ஹோர்­மோன்­களின் அளவு சடு­தி­யாக கீழி­றங்கி கருத்­த­ரிப்­பிற்கு முந்­திய அளவை அடை­கின்­றன.

தாய் குழந்­தை­க­ளுக்குத் தாய்ப்­பா­லூட்டும் காலப்­ப­கு­தியில் இந்த ஹோர்­மோன்­களின் அளவு சற்­றுக்­கு­றைந்த நிலையில் தொடர்ந்­தி­ருக்கும். இத­னா­லேயே பாலூட்டும் காலத்தில் பெண்­ணா­னவள் மீண்டும் கருத்­த­ரிக்கும் வீதம் குறை­வாகக் காணப்­ப­டு­கி­றது.

பிர­ச­வத்தின் பின் கிட்­டத்­தட்ட 10 நாட்­க­ளுக்குள் கருப்­பை­யா­னது அளவில் குறைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடு­கி­றது. நான்கு கிழ­மை­களுள் முற்­றாகப் பழைய நிலைக்­குத்­தி­ரும்பி கர்ப்­பந்­த­ரிப்­ப­தற்கு முன்­பி­ருந்த நிலையை அடை­கின்­றது. இந்­நி­லை­யின்­போது கர்ப்­பப்பை வாய்ப்­ப­குதி 100% பழைய நிலைக்கு மாறு­வ­தில்லை.

அது சற்று அகன்று இருக்கும். இதேபோல் ஒரு குழந்­தையைத் தாங்கும் அள­விற்கு விரி­வ­டைந்­தி­ருந்த யோனிக்­கு­ழலும் பழைய நிலையை 100% அடை­வ­தில்லை. குழந்தை பெற்­ற­வர்­களில் இவை சற்று மாற்­ற­முற்­ற­ன­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.

கர்ப்ப காலத்தில் விரி­வ­டைந்­தி­ருந்த வயிற்­றுத்­த­சைகள் அள­வுக்கு அதி­க­மாக நீட்­டப்­ப­டு­வதால் குழந்தை பிறந்து சில நாட்­களின் பின் உங்கள் வயிறு மெது­மெ­துப்­பா­கவும் தொள­தொ­ளப்­பா­கவும் இருக்கும். இவை பழைய நிலைக்கு வர நீண்ட நாட்கள் ஆகும். இவற்­றுக்கு தகுந்த உடற்­ப­யிற்­சி­களை செய்­வதன் மூலம் வயிறும் தசை­களும் இறுக்­க­ம­டையும்.

தசைகள் நீள்­வதால் வயிற்­றுப்­ப­கு­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் அடை­யா­ளங்கள் இல­குவில் மறை­வ­தில்லை. ஆனால் அவற்­றுக்கும் தற்­கா­லத்தில் பல்­வே­று­பட்ட மருந்­துகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. தேவை ஏற்­படின் அவற்­றினை உப­யோ­கிக்­கலாம்.

*குழந்­தைக்குத் தாய்ப்­பா­லூட்டும் பெண்­களில் முட்டை வெளி­யேற்றம் தடைப்­ப­டு­வதால் மாத­விடாய் பல மாதங்­க­ளுக்கு வெளிப்­ப­டாது.

தாய்ப்­பா­லூட்­டாத பெண்­களில் ஹோர்­மோன்கள் பழைய நிலைக்கு வரு­வதால் குழந்தை பிறந்த ஆறு கிழ­மை­களின் பின்னர் முதல் மாத­வி­டாயை எதிர்­பார்க்­கலாம்.

*பெண்­களின் சிறு­நீ­ர­கங்­களும் அதன் பகு­தி­களும் கருத்­த­ரிப்­பின்­போதும் பிர­ச­வத்தின் போதும் பல மாறு­தல்­க­ளுக்கும் அழுத்­தங்­க­ளுக்கும் உள்­ளா­கின்­றன.

இவை முன்­மா­திரி பழைய நிலையில் வேலை செய்­வ­தற்கு பல கிழ­மைகள் ஆகலாம்.

சிறு­நீ­ரக செயற்­பா­டுகள் பழைய நிலைக்குத் திரும்­பு­வ­தற்கு மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

*இரு­தயம் இரத்­தக்­கு­ழாய்கள் என்­ப­வற்றில் ஏற்­பட்ட மாற்­றங்கள், இரத்த உறைதல் கார­ணி­களில் ஏற்­பட்ட மாற்­றங்கள் என்­பன கருத்­த­ரிப்­பிற்கு முந்­திய நிலையை அடைய ஆறு கிழ­மைகள் எடுக்கும்.

எனவே பிர­ச­வத்­திற்குப் பின்­னரான ஆறு கிழமை காலப்­ப­கு­தியில் பூரண ஓய்வு பெண்­ணிற்கு ஆபத்தை விளை­விக்­கலாம். நீங்கள் சுறு­சு­றுப்­பில்­லாமல் இருந்தால் இரத்த உறைவு அடை­வ­தற்கும் அதன் பின் இரத்தம் உறைந்து கட்­டி­ப­டு­வ­தற்கும் வாய்ப்­புகள் அதிகம் உண்டு.

எனவே இக்­கா­லப்­ப­கு­தியில் கை கால் களுக்கான பயிற்சி, நடைப்பயிற்சி என்­பன அவ­சியம்.

மேலும் பிர­ச­வத்­திற்குப் பின்­னான காலப்­ப­கு­தியில் ஏற்­படும் மூல வியாதி நாரி­வலி, இடுப்­பு­வலி போன்­ற­வற்­றுக்கு தகுந்த வைத்­திய ஆலோ­ச­னையின் படி வலி நிவா­ர­ணிகள் மற்றும் மருந்­து­களை பாவிக்­கலாம்.

தாய்ப்­பா­லூட்டல்

பிர­ச­வத்­திற்கு பின்னர் பால் சுரத்­தலை தூண்­டுதல் அதற்­கேற்ப உண­வுப்­ப­ழக்­கங்­களை கடைப்­பி­டித்தல் போன்­ற­வற்றின் மூலம் குழந்­தைக்குப் பாலூட்­டு­வதே சிறந்­தது.

* இதனால் ஏற்­படும் நன்­மைகள்

தாய்ப்­பால்தான் ஒரு குழந்­தைக்கு சிறந்த உணவு. பசுப்­பா­லுடன் ஒப்­பி­டும்­போது தாய்ப்­பாலில் குறைந்­த­ளவு புர­தமும் அதி­க­ளவு கொழுப்பு மற்றும் சீனிச்­சத்து (Lactose) காணப்­ப­டு­கின்­றன.

* நோய்­களை எதிர்க்கும் சக்தி

போத்தல் பால் ஊட்­டப்­பட்ட குழந்­தை­க­ளுடன் ஒப்­பி­டும்­போது தாய்ப்­பா­லூட்­டப்­படும் குழந்­தை­களுக்கு குறைந்­த­ளவே வாந்தி வயிற்­றோட்டம் என்­பன காணப்­ப­டு­கின்­றன. தாய்ப்­பா­லூட்­டப்­படும் குழந்­தைகள் சில சுவாச நோய்­க­ளுக்கும் சில நோய்த்­தொற்­றுக்­க­ளுக்கும் எதி­ரா­கப் ­பா­து­காப்­புப் ­பெ­று­கின்­றன.

மற்றும் தாய்ப்­பா­லூட்­டப்­படும் குழந்­தை­களின் நரம்பு மண்­டல செயற்­பா­டுகள் சிறப்­பா­ன­தாகக் காணப்­ப­டு­கின்­றன.

இக்­கு­ழந்­தை­களில் இள­மையில் ஏற்­படும் நீரி­ழிவு நோய், குடலில் ஏற்­படும் அழற்சி, நோய் மற்றும் சில புற்று நோய்கள் குறைந்­த­ளவில் ஏற்­ப­டு­வ­தாக அறி­யப்­பட்­டுள்­ளது.

தாய்ப்­பா­லூட்­டுதல் ஒரு இயற்­கை­யான கருத்­தடை முறை­யாகும். இக்­கா­லப்­ப­கு­தியில் பெண் கர்ப்­பந்­த­ரிப்­ப­தில்லை.

*தாய்ப்­பா­லூட்டும் பெண்­களில் மெனோபோஸ் பரு­வத்தின் பின்னர் ஏற்­படும் மார்­பகப் புற்­று­நோய்க்­கான வாய்ப்­புக்கள் குறை­வாக உள்­ளன.

பிர­ச­வத்தின் பின் உட­ன­டி­யாக பாலூட்­டு­வதை ஆரம்­பிப்­பதன் மூலமும் அடிக்­கடி குழந்தை மார்­ப­கங்­களை உறிஞ்சும் போதும் பால் சுரப்பு அதி­க­ரிக்கும்.

பிர­ச­வத்தின் பின் வைத்­தி­ய­சா­லையில் இருக்­கும்­போதே பாலூட்­டு­வ­தற்­கான முறைகள் மற்றும் ஆலோ­ச­னை­களை அதற்­கென சிறப்­புப்­ப­யிற்சி பெற்ற தாதி­ய­ரிடம் கேட்­ட­றிந்து செல்ல வேண்டும்.

*தாய்ப்­பா­லூட்டும் காலப்­ப­கு­தியில் பாவிக்கும் மருந்­து­களை மருத்­துவ ஆலோ­ச­னை­யின்­படி எடுக்க வேண்டும். ஏனெனில் சில மருந்­துகள் பால் சுரத்­தலை குறைக்­கலாம் அல்­லது குழந்­தைக்கு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தலாம்.

தாய்ப்­பா­லூட்டும் காலத்தில் முலைக்­காம்பில் ஏற்­ப­டக்­கூ­டிய வெடிப்பு, மார்­ப­கங்­களில் ஏற்­படும் கிரு­மித்­தொற்று பால் கட்­டி­பட்டு ஏற்­படும் கொதிப்பு போன்­ற­வற்­றுக்கு வைத்­திய ஆலோ­சனை பெறு­வது சிறந்­தது.

பெண்ணில் ஏற்­படும் உளச்­சோர்வு

இது அநே­க­மாக சில பெண்­களுக்கு பிர­சவம் நடை­பெற்று 3-5ஆவது நாட்­களில் ஏற்­ப­டலாம். இது பல்­வேறு நிலை­களில் தோன்­றலாம். பெண்ணை கூட இருப்­ப­வர்கள் அவ­தா­னத்­துடன் பார்ப்­பதன் மூலமும் கணவன் மற்றும் உற­வி­னர்­களின் அக்­கறை உதவி மற்றும் பரிவு என்­ப­வற்றின் மூலம் இந்­நோயை அறிந்து தேவை­யான வைத்­திய ஆலோ­ச­னையை பெற்­றுக்­கொள்­வதன் மூலம் இந்­நோ­யி­லி­ருந்து விடு­ப­டலாம்.

உட­லு­றவு

பிர­ச­வத்தின் பின் மீண்டும் உட­லு­றவை ஆரம்­பிப்­ப­தற்கு ஒரு குறித்த காலப்­ப­குதி இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் இதனை ஆரம்பிக்கலாம்.

உங்கள் புதிய குழந்தை உங்களின் காலத்தில் பெரும்பாலானதை எடுத்துக் கொள்ளும். அத்துடன் பிரசவத்தில் ஏற்பட்ட வலி, அசௌகரியம் மற்றும் பாலூட்டல் போன்ற காரணங்களால் நீங்கள் இதற்கு தயாராகாமல் இருக்கலாம். இதற்கு சில கிழமைகள் எடுக்கலாம்.

கருத்தடை

பிரசவத்தின் பின் உங்களுக்கு பொருத்தமான கருத்தடை முறையினை பொருத்தமான காலப்பகுதியில் உங்களின் வைத்தியரின் ஆலோசனையின் படி ஆரம்பிக்க வேண்டும்.

இதனால் தேவையற்ற கருத்தங்கல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

பிரசவத்தின் பின்னரான பரிசோதனை

பிரசவத்தின் பின் குறித்த தினத்தில் (வைத்தியர் குறித்திருந்த நாளில்) குழந்தைக்குரிய பரிசோதனைகள் மற்றும் தாய்க்குரிய பரிசோதனைகளை ஒழுங்காக வைத்தியசாலை சென்று மேற்கொள்ள வேண்டும்.