Home அந்தரங்கம் இந்த மாதிரியான முத்தங்கள் உங்கள் கட்டில் உறவை பாதிக்கும்

இந்த மாதிரியான முத்தங்கள் உங்கள் கட்டில் உறவை பாதிக்கும்

202

அந்தரங்க முத்தம்:முத்தம் அற்புதமானது என்று எல்லோரும் அறிந்தது தான். வலியை குறைக்கும், கலோரியை எரிக்கும், முகத்திற்கு பொலிவு தரும், இரத்த அழுத்தத்தை குறைக்கும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்க செய்யும்! ஆனால் முத்தங்களில் குறிப்பிட்ட சிலவற்றை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தர்மசங்கடமான சூழல் உண்டாகும். அப்படி எந்த வகையான முத்தங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்!

உங்கள் செல்லப்பிராணிகள் உங்கள் முகத்தை நக்கி விளையாடுகிறது என்றால் அது கியூட்டாக இருக்கும். ஆனால் உங்கள் துணைக்கு அப்படி முத்தம் கொடுப்பது சரியாக இருக்காது. முத்தம் கேட்டும் ஒருவர் முகம் முழுவதையும் நக்கினால் எப்படி இருக்கும்? அதனால் அப்படி முத்தம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது!

முத்தம் கொடுக்கும் போது நாக்குகள் உராய்வது இயல்பு தான். ஆனால் அளவுக்கு அதிகமாக நாக்கினால் உராய்ந்து முத்தம் கொடுக்கக்கூடாது.

வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்றால் முத்தம் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். அல்லது மின்ட் சாப்பிட்டுவிட்டு முத்தம் கொடுங்கள்!

முத்தம் கொடுக்கும் போது உதடுகளை கடிப்பதை தவிர்க்கவும். இதமாக முத்தம் கொடுப்பது தான் சரி! கீழ் உதடுகளை கடித்து காயம் உண்டாக்கி முத்தம் கொடுக்கக்கூடாது.

வாய்களை மூடிக்கொண்டு முத்தம் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுக்கிறீர்கள் என்றால் கோபமாக, வெறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திவிடும்!