Home உறவு-காதல் காதல் பிரேக்-அப்பிற்கு பிறகு, நீங்கள் புதிய உறவுக்கு தயாரா ?

காதல் பிரேக்-அப்பிற்கு பிறகு, நீங்கள் புதிய உறவுக்கு தயாரா ?

167

காதல் உறவுகள்:உறவில் இருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ, பிரேக் அப் ஆன உடனே அடுத்த உறவுக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் அந்த நேரத்தில் புதிய உறவை ஏற்கக்கூடிய மனநிலையில் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் பழைய காதலன்/காதலியை ரீப்ளேஸ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய உறவில் இணைகிறோம். ஆனால் இத்தனை அவசரம் தேவையில்லை. நீங்கள் புதிய உறவுக்கு தயாராகவிட்டீர்களா, இல்லையா என்பதை எளிதில் உணரமுடியும்!

பிரேக் அப் ஆன பிறகு பழைய கதாலன்/காதலியை மறக்க சில காலம் எடுக்கும். அதனால் அதிலிருந்து மீண்டு வெளியே வரும் வரை காத்திருப்பது நல்லது. உடனடியாக மற்றொரு உறவில் இணைகிறீர்கள் என்றால், அதன் பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உறவில் இருப்பது அத்தனை எளிதல்ல. உண்மையாக காதலிக்கிறீர்கள் என்றால், காதலன் அல்லது காதலிக்கா பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக காதலி பார்டிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால், போய் வரும் மனநிலை வேண்டும். அத்தகைய மனநிலை எல்லாம் வரப்பெற்ற பிறகு புதிய உறவை தேர்ந்தெடுங்கள்!

பிரேக் அப் ஆன பிறகு பெரும்பாலானவர்கள் ஏன் பிரேக் அப் ஆனது என்று தான் யோசிக்கின்றனர். ஆனால் தவறில் இருந்து கற்றுக்கொண்டதாக நினையுங்கள். கடந்த காலத்தை புறந்தள்ளி நிகழ்காலம் குறித்தும், உங்களைப்பற்றியும் யோசித்து எதிர்காலம் நோக்கி செல்ல வேண்டும். அத்தகைய நிலைக்கு வந்துவிட்டால் புதிய உறவை ஏற்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்!