Home சூடான செய்திகள் உறிவது, கடிப்பது அல்லது முத்தமிடுவதால் சிராய்ப்புகளைப் போக்க

உறிவது, கடிப்பது அல்லது முத்தமிடுவதால் சிராய்ப்புகளைப் போக்க

52

சருமத்தின் மேற்பரப்புக்கு மிக நெருக்கமாக உள்ள இரத்த நாளங்கள் சேதமடைவதன் காரணமாக, சருமத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது சிராய்ப்பை ஆங்கிலத்தில் லவ் பைட்ஸ் என்கின்றனர். இணையர் உறிவது, கடிப்பது அல்லது முத்தமிடுவதால் இவை ஏற்படுகின்றன. பொதுவாக கழுத்து, தொடைகளின் உட்பகுதி, கைகள் போன்ற மென்மையான சருமம் உள்ள பகுதிகளிலேயே இவை உண்டாகின்றன. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றன. இவை ஆபத்தானவை அல்ல, ஆனால் அனைவரும் பார்க்கக்கூடியபடி, கழுத்திலோ, முகத்திலோ இருந்தால் சங்கடமாக இருக்கலாம்.

எந்த சிகிச்சையுமின்றி தானாக இது சரியாக 5 முதல் 12 நாட்களாகலாம். ஆனால், இரத்த நாளங்களுக்கு எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும், ஒருவரின் ஆரோக்கியத்தையும் பொறுத்து, இன்னும் குறைவான நாட்களிலேயே கூட சரியாகி மறைந்துவிடலாம் அல்லது இன்னும் அதிக நாள் எடுக்கலாம்.

இவற்றைப் போக்க சில எளிய குறிப்புகள் (Here are few easy ways to get rid of those love bites):
இது உண்டான நாளில்:

பாதிக்கப்பட்ட பகுதியில் 10 நிமிடம் கோல்ட் பேக் போடலாம் அல்லது சில்லென இருக்கும் கரண்டியைக் கூட வைக்கலாம். சருமத்தின் மீது ஐஸ் கட்டிகளை நேரடியாக வைக்க வேண்டாம். இது வீக்கத்தையும் வலியையும், அடையாளத்தையும் குறைக்க உதவும்.
கற்றாழையைக் கொண்டுள்ள ஜெல், கிரீம் அல்லது லோஷன் போட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யவும், இதை ஒரு நாளுக்கு இரண்டு மூன்று முறை செய்யலாம். அழற்சியைக் குறைக்கவும், குணமாகும் வேகத்தை அதிகரிக்கவும் கற்றாழை மிகவும் உதவும். பாதிக்கப்பட்ட பகுதியின் அளவுக்கே, பழுத்த வாழைப்பழத் தோலை வெட்டி, அவ்விடங்களில் சுமார் 10-30 நிமிடங்கள் வைக்கலாம். இதைப் போல் நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறை செய்யலாம்.
குணமாவதை துரிதப்படுத்தி உதவ, வைட்டமின் K அதிகமுள்ள கிரீம் அல்லது லோஷன் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

வைட்டமின் C குணமாகும் செயலுக்கு உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் C அதிகமுள்ள பழச்சாறுகளை அருந்தலாம்.

அடுத்த நாள் (The day after the love bite):
பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, தினமும் மூன்று முறை வெதுவெதுப்பான ஒற்றடம் கொடுக்கவும் (வெதுவெதுப்பான நீரில் ஒரு டவலை நனைத்துப் பிழிந்து பிறகு ஒற்றி ஒற்றி எடுப்பது).
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதற்காக வெளியே செல்லாமல் காத்திருக்க முடியாது என்றால், உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற கன்சீலர் பயன்படுத்தலாம் அல்லது பவுடர் போடலாம்.
இவை எதுவும் பலன் கொடுக்காவிட்டால், அவை குணமடையும் வரை கழுத்து சிறியதாக உள்ள டிஷர்ட், போன்ற ஆடைகளை அணியலாம், ஸ்கார்ஃப் அணிந்து கொள்ளலாம் அல்லது துப்பட்டா கொண்டு மறைத்துக்கொள்ளலாம்.
இவை சரியாக சிறிது காலம் எடுக்கும், இந்தக் குறிப்புகள் அதனை இன்னும் விரைவுபடுத்த உதவும்.