Home இரகசியகேள்வி-பதில் பெண்ணுடன் உறவு வைத்த கயவன், என்னை கட்டாயப்படுத்தி நாசமாக்கி விட்டான்

பெண்ணுடன் உறவு வைத்த கயவன், என்னை கட்டாயப்படுத்தி நாசமாக்கி விட்டான்

310

Real-House-wife-Aunty-Bhabhi-Nude-Photosநான், 39 வயது பெண். என் அக்கா, பிரசவத்தின் போது இறந்து விட்டதால், குழந்தையை வளர்ப்பதற்காக, என் அக்கா கணவருக்கே, விவரம் அறியாத 15 வயதில், 22 வயது வித்தியாசமுள்ளவரை எனக்கு மணமுடித்து வைத்தனர். எனக்கு, ஒரு தம்பியும் உண்டு. சாதாரண குடும்பம்தான்; வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். என்னையும், என் கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே வீடு பார்த்து குடித்தனம் வைத்தனர். என் கணவருக்கு, சொந்தம் என்று யாரும் இல்லை. ஆரம்பத்தில் அன்புடன் தான் இருந்தார். ஆனால், தாம்பத்யத்தில் எந்த ஈடுபாடும் கிடையாது; அந்த ஆசை எனக்கும் வரவில்லை.
என் கணவர் நகராட்சியில் பணிபுரிந்தார். அதிகபட்ச வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்தான். இப்படிப்பட்ட சூழலில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன் – மனைவி இருவரும் நன்றாக பழகினர். அந்த வீட்டு பெண், வேறு ஒருவருடன் ரகசிய உறவு வைத்திருக்கும் போது, நான் பார்க்கும்படி ஆகிவிட்டது. இதுநாள் வரை அதை யாரிடமும் சொன்னதில்லை.

ஆனால், அந்த பெண்ணுடன் உறவு வைத்த கயவன், என்னை கட்டாயப்படுத்தி நாசமாக்கி விட்டான். ஏனென்றால், அந்த கயவனின் உறவை நான் வெளியில் சொல்லாமல் இருக்க, அந்த பெண்ணின் உதவியோடு இப்படி செய்து விட்டான். இதை, அப்பெண்ணின் கணவன் பார்த்த காரணத்தால், அவனும், “எனக்கு நீ இணங்காவிட்டால், உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்…’ என மிரட்டி, பயன்படுத்திக் கொண்டான்.
அந்த அசிங்கத்தை என் குழந்தை பார்த்து விட்டது. எனக்கு எப்படிப்பட்ட நிலை, எத்தனை அவமானம் பாருங்கள். என் கணவர், எதையுமே கண்டுகொள்ள மாட்டார். ஏதோ வீட்டுக்கு வந்தோம், குழந்தையை கொஞ்சினோம், தூங்கினோம் என்று பட்டும் படாமல் இருப்பார். இந்த சமயத்தில், நாம் வேறு எங்காவது சென்று, மகனை நன்றாக படிக்க வைக்கலாம் என்று புதுச்சேரிக்கு வந்து விட்டோம். அந்த மிருகங்களிடமிருந்து தப்பித்து வந்து, வாழ்க்கை நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது. என் கணவர் தினம் தினம் குடித்ததால், கை, கால் செயலிழந்து படுக்கையில் இருக்கிறார். அவருக்கு பணிவிடை செய்து வருகிறேன். வளர்ந்துவிட்ட என் மகன், என்னையும், கணவரையும் துளி கூட மதிப்பதே இல்லை. பிளஸ் 2 மூன்று வருடமாக எழுதி வருகிறான். குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், சினிமாவுக்கு போவதும், சிகரெட் குடிப்பதும், நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதுமாக இருக்கிறான். என்ன செய்வதென்றே எனக்கு புரியவில்லை. பணம் கேட்டு நச்சரிக்கிறான். கொடுக்கவில்லை என்றால், சிறு வயதில் பார்த்த அந்த அசிங்கத்தை சொல்லி சொல்லி, வார்த்தைகளால் குத்திக் கொல்கிறான். “நீ அவனோட படுத்திருந்தே…’ என்று கேவலமாய் திட்டுகிறான். அவன் என்ன தவறு செய்தாலும், தாய் என்ற முறையில் எந்த நல்லது சொன்னாலும், உடனே, “வாயை மூடுடீ…’ என்று, எத்தனை அசிங்கமான வார்த்தைகள் உள்ளதோ, அத்தனையும் பேசுகிறான். யாரிடமும் பேசவும் கூடாது; பேசினால் அவ்வளவுதான். கேவலமான விஷ அம்புகள் தாக்கும். தினம் தினம் இப்படித்தான்.

இத்தனைக்கும் நானாக எந்த தவறும் செய்தது இல்லை. அப்படிப்பட்ட எந்த தீய எண்ணமும், ஆசையும் வந்ததே இல்லை. என் கணவரும் என்னைத் தவறாக நினைத்தது இல்லை. மகனின் படிப்பு பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. கணவர் உடல்நிலை சரியில்லாத நிலையும், அவருக்கு மருத்துவ செலவுகளையும் செய்து, அவனை நல்ல கல்லூரியில் படிக்க வைக்கணும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவனை நல்ல நிலைமைக்கு எப்பாடுபட்டாவது கொண்டு வரணும் என்று தெய்வத்தை வேண்டுகிறேன். ஆனால், அவனோ, ஊதாரியாக, சோம்பேறியாக மூன்று நாளுக்கு ஒருமுறை குளிப்பதும், உடுத்தும் துணிகளை அதை விட இரண்டு நாள் அதிகமாக ஈரத்துடன் போட்டு நாற்றம் எடுக்க வைப்பதுமாய் இருக்கிறான். “உன் அப்பாவை கவனிக்கவே எனக்கு சரியாக இருக்கிறது. உன் துணிகளை நீயே துவைத்து, சுத்தமாக வைத்து கொள்…’ என்று சொல்லி விட்டால் போதும், அன்று வீடு ரணகளம் தான். “நீ விபசாரி தானே…’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி, அன்று முழுவதும் என்னை கேவலப்படுத்துவான். இதை விட எனக்கு என்ன தண்டனை வேண்டும் அம்மா.

நான் பெண்ணாக பிறந்து, படும் வேதனை யாருக்கும் வரக் கூடாது. அதுவும், மகனே இந்த மாதிரி வசைபாடும்போது, நான் என்ன செய்வது. என் மகன், என்னையும், என் கணவரையும், “செத்து தொலையுங்கள்…’ என்றுதான் கூறுகிறான்; இல்லையென்றால், “உன்னை கொன்று விடுவேன்…’ என்று கூறுகிறான். என்னைக் கொல்லட்டும்… நான் சாகப் பயப்படவில்லை. அய்யோ… அவனல்லவா தண்டனை பெறுவான். மாற்றான் தாய் வளர்த்த பிள்ளை எல்லாரும் பாராட்டும்படி, படிப்பும், பண்புமாய் இருந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவனது தந்தையின் நல்ல குணத்திற்காகவாவது அவன் தாயை இழிவாய் பேசுவதை நிறுத்தி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், அவன் மனம் இதைப் படித்து விபரீத எண்ணங்கள் வராத அளவுக்கு உங்கள் நல்ல அறிவுரை வேண்டும் அம்மா.
அம்மா… தினம், தினம் என்னை அவன் சித்ரவதை செய்வதிலிருந்து மீள்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள். அவனுடைய தந்தையை காட்டி, “இந்த கிழவனை எப்படி நீ கல்யாணம் செய்து கொண்டாய்… என்ன காரணம்?’ என்று கேட்டு, அதற்கு பதில், அவனே அசிங்கமான வார்த்தைகளால் கடுமையாய் சாடுகிறான். இதற்கிடையில், என் தம்பி சிறிது காலமாக எனக்கு பண உதவி செய்து வருகிறான். அதையும் இவனுக்காகத்தான் செலவு செய்கிறேன். என் தம்பியின் மனைவி மிகவும் நல்லவள். என் குடும்பத்திற்காக தேவையான மளிகை பொருட்களை, எனக்கும் சேர்த்து வாங்கி கொடுத்து விடுவாள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ!
அக்காவின் மகன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும், அவன் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று, என் தம்பி உதவி செய்து வருகிறான். அவர்களுக்காகவாவது என்னை அசிங்கமாக பேசுவதை விட்டுவிட்டு, அவனுடைய படிப்பில் கவனம் செலுத்த வழி சொல்லுங்கள் அம்மா. அவன் மனம் புண்படாமல், தீர்க்கமான அறிவுரை தரவும்.
— இப்படிக்கு, நிம்மதி இன்றி தவிக்கும், உண்மையான தாய்.

அன்புள்ள சகோதரிக்கு —
உன் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் சில பொய்களை கூறியிருக்கிறாய். இளமையின் வேகத்தில் நீ செய்த தவறுகளுக்கு மழுப்பலாய் வியாக்கியானம் பண்ணுகிறாய். சிறுவன்தானே பார்க்கிறான் என்ற அலட்சியத்துடன் வெளி நபருடன் உறவு வைத்திருக்கிறாய். பழகிய யானையை வைத்து புதுயானை பிடிப்பர். அதே போல்தான் பக்கத்து வீட்டு பெண்ணும் உன்னுடன் பழகி, உன்னை கவிழ்த்திருக்கிறாள். ஒரு தடவை உன்னுடன் உறவு கொண்டவர்கள், உன்னை தொடர்ந்து நச்சரித்திருக்கின்றனர். அவர்களை தவிர்க்க, காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு புலம் பெயர்ந்திருக்கிறாய்.

உனக்கு 15 வயதில் திருமணமாகியிருக்கிறது. அக்காவின் மூன்று மாத கைக்குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு உன்னிடம் தள்ளப்பட்டிருக்கிறது. 16 வயதிலிருந்து 25 வயது வரை நீ பலமுறை வழி தவறியிருக்கிறாய் என நம்புகிறேன். என் யூகம் தவறாக இருந்தால், மன்னிக்கவும். உன் பொருந்தாத திருமணம், குடும்பத்தை நடத்த போதிய வருமானமின்மை, வீட்டுக்குள் என்ன நடக்கிறதென்பதை ஊன்றி கவனிக்காத வயதான கணவர், ஆடம்பர வாழ்க்கையில் மோகம், தவறான பெண்களின் ஸ்நேகம்… இப்படி பல காரணங்கள் நீ வழி தவற. மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்ற பெண்கள், தங்கள் குழந்தைகளை வெளியில் மகன், மகள் என சொல்ல கூசுகின்றனர். தம்பி அல்லது தங்கை என அறிவிக்கின்றனர். நீயும், உன் அக்கா மகன் சிறுவனாய் இருந்த போது, அப்படி அறிவித்திருக்க வாய்ப்புண்டு.
இப்போது உன் கணவருக்கு 61 வயது. நகராட்சியில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஓய்வூதியம் சொற்பமாய்தான் கிடைக்கும்.

உன் மகன் பிளஸ் 2வை மூன்று வருடங்களாக படித்து வருகிறான். அவனுக்கு 19 வயது. அவனுடைய பத்து வயது வரை அவனை நீ மோசமாக நடத்தி வந்திருக்கிறாய். உன் கெட்ட நடத்தை அவன் மனதை வெகுவாய் பாதித்து விட்டது. அவனுடைய குறைகளை பெரிதுபடுத்தி பெரிதுபடுத்தி பேசி, அவனை மேலும் தீயவனாக்குகிறாய். உன் அக்கா பெற்ற மகனை, உன் மகன் என்று வாய் நிறைய கூறுகிறாய். ஆனால், அவனை, அவனது சிறுவயதில் நீ நடத்தியவிதம் உன்னை, அவன் மனதில் மாற்றாந்தாயாக பச்சை குத்திவிட்டது. பிறக்கும் போதே இறந்து போன அம்மா. தாத்தா வயதில் அப்பா. இளமையின் வேகத்திற்கு பலியான சித்தி – இத்தனை பின்னடைவுகளை 19 வயது விடலை இளைஞன் ஜீரணிப்பானா?
உன் குடும்பத்திற்கு தம்பியும், தம்பி மனைவியும் பொருளாதார உதவிகள் செய்து வருவது பெரும் ஆறுதல்.
உன் தம்பியை விட்டு, அவனுக்கு இப்படி அறிவுரை கூறச்சொல்… “வயதான கிழவனை உன் சித்தி விரும்பி மணந்து கொள்ளவில்லை. திருமணமும், கைக்குழந்தை பராமரிப்பும் உன் சித்தி மீது திணிக்கப்பட்டவை. பிறக்கும்போதே தாயை பறித்துக் கொண்ட கடவுளை நிந்திக்காதே. உன் சித்திக்கும் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் உன் நிலை கூடுதல் அவலங்கள் நிறைந்ததாய் மாறியிருக்கும்… “கூடா நட்புக்கும், தீய பழக்கவழக்கங் களுக்கும் சித்தியின் நடத்தையை பலிகடா ஆக்காதே. உன் சித்தி நடத்தை சரியில்லாதவளாக இருந்திருக்கலாம்; ஆனால், அவள் தற்சமயம் சிறந்த தாய். தாயின் நடத்தையை பழிப்பது மல்லாக்கப்படுத்துக் கொண்டு எச்சில் துப்புதவற்கு சமம்; அதைச் செய்யாதே! உன் சித்தி தவறு செய்திருந்தால் தண்டிக்கும் பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடு. பெற்றோரை சபிப்பதை விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேறப் பார். பெற்றோருடன் இருந்து படிப்பது சிரமமாக இருந்தால், எங்கள் குடும்பத்துடன் இருந்து படி அல்லது விடுதியில் தங்கி படி. உன் ஆடைகளை நீயே துவைத்து போடு. தவறான நண்பர்களை விட்டு நீங்கு!’ இப்படி கூறினாலாவது ஓரளவு பலன் கிடைக்கும். பிளஸ் 2 முடித்த பின் அவனின் குணாதிசயத்துக்கு ஏற்ற தொழிற்கல்வியை, விடுதியில் சேர்ந்து பயில ஏற்பாடு செய். நீ தவறானவள் அல்ல. வழி தவறிய ஆடு. மந்தைக்கு திரும்பி விட்டாய். உன் கணவனுக்கு நீ செய்துவரும் பணிவிடைகளே உன் தவறுகளுக்கான பிராயசித்தம். உன் தம்பியின் ஆலோசனை, உன் மகனை நல்வழிபடுத்த வில்லையென்றால் அவனை விட்டு விலகி நில். பட்டு திருந்தட்டும்.