தேவையான பொருட்கள்:
மாட்டிறைச்சி அரைக்கிலோ
பெரிய வெங்காயம் 3 (நறுக்கியது)
தக்காளி 2 சிறிதாய் நறுக்கியது
இஞ்சி 1 டீ ஸ்பூன் அரைத்தது,
பூண்டு 1 தேக்கரண்டி,
மஞ்சள் ஒரு தேக்கரண்டி
முழு ஜீரகம் அரை தேக்கரண்டி
ஜீரகம் மற்றும் பெருஞ்ஜீரகம் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் 5
கருவாப்பட்டை 3 பட்டை
கிராம்பு 3
கருவேப்பிலை தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் தாளிக்க
கறிமசாலா பொடி 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 அல்லது 2 மேசைக்கரண்டி (சுவைக்கு ஏற்ப)
உப்பு தேவையான அளவு
தயார் செய்யும் முறை:
முதலில் இறச்சியை நன்றாக சுத்தம் செய்து சின்னச்சின்னதாய் நறுக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய், கருவாப்பட்டை, கிராம்பு இவற்றை போடவும்.
இது வதங்கியதும் கொஞ்சம் முழு ஜீரகம் போட்டு அது பொரிந்ததும் கறிவேப்பிலை போடவும்.
இவற்றுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை விட வேண்டும்.
இவை வதங்கியதும், நறுக்கிய தக்காளி மற்றும் தேவைக்கேற்ப மஞ்சள் மற்றும் உப்பை சேர்க்க வேண்டும்.
இவை பொரிந்து மஞ்சள் வாசனை போனதும் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு வேகவிடவும்.
பின்பு கறிமசாலா பொடி, தனியா பொடி, ஜீரகம் தூள் மற்றும் பெருஞ்ஜீரகம் தூள் இவற்றை போடவும்.
இதன் பச்சை வாசனை போனதும், ஊற வைத்த இறைச்சியை போட்டு இறைச்சி வேகும் வரைக்கும் இடையிடையே கிளறி வேக வைக்கவும்.
அடியில் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
இவற்றை நன்றாக வேக வைத்தால் மாட்டிறைச்சி கறி தயார்.