Home அந்தரங்கம் 8 வயது பெண் குழந்தை இருக்கும் போது, கணவனை பிரிந்து வாழும் பெண் இப்படி செய்வது...

8 வயது பெண் குழந்தை இருக்கும் போது, கணவனை பிரிந்து வாழும் பெண் இப்படி செய்வது சரியா? வாய்ப்பு கிடைத்தால் என்ன வேணாலும் நடக்கலாம்!

278

இரண்டாவது திருமணம் என்று சொன்ன உடனே, பலருக்கும் முகத்தில் ஒரு சுளிப்பு வரும். அவங்க என்ன ஊரில் இல்லாத தப்பா செஞ்சுட்டாங்க. முதலில் சரியான இணையை தேர்வு செய்ய முடியாமல் போய், அடுத்து தனக்கு விருப்பமான இன்னொரு துணையை சட்டப்படி தேர்வு செய்கின்றனர், அவ்வளவு தான். அதனை வைத்து ஒருவரின் குணத்தை முடிவு செய்வது எந்த வகையிலும் சரியாக படவில்லை. எங்க ஆபீசில் உடன் பணியாற்றும் பெண்ணுக்கு, 8 வயதில் குழந்தை இருக்கிறது. கணவர் ஒண்ணுக்குமே உதவாத ஆகாவளி.

வீட்டில் பெண் குழந்தையும், மனைவியும் இருகாங்க. பொறுப்பாக இருந்தால் தான் இருவரையும் கரை சேர்க்க முடியும் என்ற அக்கறை எல்லாம் கிடையாது. சூது,மது,மாது என, எதற்கெல்லாம் அடிமையாகக்கூடாதோ, அதற்கெல்லாம் டெய்லி கஸ்டமர் அவன். திருமணமாகி 8 வருடம் பொறுத்துவிட்டாள் அவளும், இனி மேல் குழந்தையை கரை சேர்க்க வேண்டும் என்றால், அவனைவிட்டு பிரிந்து வருவதே நல்லது என முடிவு செய்து, அதில் வெற்றியும் கண்டுவிட்டாள்.

marriage husband daughter

அதற்கு பிறகு நிறைய சிக்கலும் வர ஆரம்பித்துவிட்டது. புருஷன் இல்லாத வீட்டில் போற வரவன் எல்லாம் நுழைய பார்க்கிறான். சரியான நேரம் பார்த்து, மீனை கொத்தி தூக்கும் கொக்கு போல, பல கண்கள் அவளை பின்தொடர ஆரம்பித்துவிட்டது. ஆயிரம் தான் இருந்தாலும் வீட்டில் புருஷன் இருந்தால் அதற்கு மதிப்பு தனி. தனியாக வாழும் பெண் என்றால், அவள் பார்வையாலே சீண்ட வருபவனை எரிப்பவளாக இருக்க வேண்டும். கொஞ்சம் சாதுவாக போனாலும், நாசம் பண்ணிருவாங்க.

எல்லாம் பார்த்துவிட்டு, நாங்கள் எல்லாம் கொடுத்த ஆலோசனைப்படி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுதிருக்கிறாள். இதிலும் நிறைய யோசித்து காலடி எடுத்து வைக்க வேண்டும். குழந்தை இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது ஆண் குழந்தை இருந்தாலோ தைரியமாக இன்னொரு திருமணம் செய்யலாம். ஆனால் 8 வயதில் பெண் குழந்தை இருக்கும் போது, புதிதாக ஒரு ஆண் மீண்டும் வாழ்வில் நுழையப்போகிறான் என்றால், அவன் அந்த குழந்தையை, தன்னுடைய குழந்தை போல நினைக்கும் மனம் கொண்டவனாக இருக்க வேண்டும்.

இன்னும் 4 வருடம் போனால், குழந்தை பெரியவளாகிவிடுவாள் என்பதால், பல கோணங்களில் யோசிக்க வேண்டி இருக்கு. முடிந்த வரைக்கும் பெண் குழந்தையுடன், மனைவியை இழந்து வாழும் ஆணாக பார்த்து தேர்வு செய்யச்சொல்லி இருக்கிறோம். என்னதான் ஆயிரம் வீர வசனம் பேசினாலும், தனிமையில் ஒரு ஆணின் சுபாவம் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பிற்காலத்தில் சிக்கல் வராமல் இருக்க வேண்டும் என்றால், இந்த மாதிரியும் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.