Home / இரகசியகேள்வி-பதில் / பெண்களுக்கும் செக்ஸ் குறைபாடுகள் உண்டா?அதிகபட்சம் எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட முடியும்?

பெண்களுக்கும் செக்ஸ் குறைபாடுகள் உண்டா?அதிகபட்சம் எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட முடியும்?

ஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும்?

நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில், 32 நிமிடங்களில் ஒருவர் ஆறு முறை எழுச்சி அடைந்ததே அதிகபட்சமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக, திருமணமான புதிதில் அல்லது இளையவர்கள் ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முறை உறவுகொள்ள முடியும்.

அதன்பிறகு தினமும் உறவு அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் உறவு என்பதே பெரும்பாலானவர்களின் நடைமுறையாக இருக்கிறது.

ஆண் உறுப்பின் முன்தோல் அகற்றப்பட்ட ஆணால் மட்டுமே அதிகநேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது உண்மையா?

மருத்துவ ரீதியாக ஆண் உறுப்பின் முன்தோல் அகற்றப்படுவதில் எந்த நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்தோலை அகற்றுவதால், கிருமிகள் தேங்குவது தவிர்க்கப்படுகிறது என்று சொல்வதும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சில பெண்களுக்கு முன்தோல் அகற்றப்பட்ட உறுப்பு அதிக கிளர்ச்சியைக் கொடுக்கலாம் என்பது தவிர, கூடுதல் நேர உறவுக்கு இது எந்த வகையிலும் உதவி செய்வதில்லை.

ஆண்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட முடியும்?

இது ஆண்கள் மனத்தில் இருக்கும் ஆசையைப் பொறுத்த விஷயமாகும்.

முதன்முதலில் ஆசையுடன் நெருங்குபவர்கள், பெண் உறுப்பைப் பார்த்தவுடனே விந்து கொட்டிவிடக்கூடும்.

சிலர் உறுப்பை உள்ளே நுழைக்கும் முயற்சியில் இருக்கும்போதே விந்து வெளியாகக்கூடும்.

சாதாரணமாக, உறவில் ஈடுபட்டு பத்து நிமிடங்கள் வரை தாக்குப்பிடிப்பது சரியான நேரம் என கணக்கிடப்படுகிறது.

இதற்கு மேலும் நீட்டிக்க விரும்புபவர்கள் மேலே சொல்லியிருக்கும் பல டெக்னிக்குகளைக் கையாண்டு, வெற்றிபெற முடியும்.

தற்போது இதற்குச் சில மருந்துகள் உபயோகப்படுகிறது.

வயாகரா போன்றவை நல்ல முறையில் எழுச்சி பெறவும், உறவை நீட்டிக்கவும் பயன்படுகிறது.

ஆனால், இதுபோன்ற மருந்துகளை மருத்துவரிடம் உடலைக் காட்டி சோதனை செய்து சாப்பிடுவதே சிறந்தது.

பெண்களுக்கும் செக்ஸ் குறைபாடுகள் உண்டா?

பொதுவாக, ஆண்மைக் குறைபாடைப்போல், பெண்மைக் குறைபாடும் ஏற்படுகிறது. ஆனால், பெண்கள் அதை வெளிப்படுத்துவதில்லை அல்லது பெரிதுபடுத்துவதில்லை.

பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுக் குறைபாடு, உச்சகட்ட உணர்வு இல்லாமல் இருத்தல், உச்சகட்டம் ஏற்படாமை, செயல்படாதத் தன்மை, செக்ஸ் அடிமை என்று பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டு.

ஆனால், பெரும்பாலும் ஆண்கள் சொல்படி பெண்கள் இயங்குவதாலும், அவர்களது செயல்பாடுகளுக்கு இசைந்துகொடுக்கும் பணி மட்டுமே செய்துவருவதாலும் இவை பெரிய சிக்கலாக எழுவதில்லை.

அதாவது, செக்ஸ் ஈடுபாடு இல்லாத பெண் என்றாலும், கால்களை அகல விரித்துக்கொண்டு பிறப்புறுப்பை மட்டும் காட்டினாலே, ஆண்களால் செக்ஸ் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

அதனால், பெண்களுக்கு ஏற்படும் Sexual Addiction, Sex Arousm Disorder, Dyspareunia போன்றவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், இந்த நிலை தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பெண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ எனப்படும் இன்பம் தரும் உறுப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன?

ஆண்களைப்போல், பெண்களின் உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது.

ஆனாலும், அதிகபட்ச இன்பம் தரும் இடங்களாக உதடுகள், நாக்குகள், காது மடல், நெற்றி, மார்பகங்கள், காம்புகள், தொப்புள், தொடை, பிறப்புறுப்பு, கிளைட்டோரிஸ், ஆசனவாய், பெருவிரல் போன்ற இடங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், பெண் உறுப்பின் உள்பக்கத்தையே ‘ஜி ஸ்பாட்’ பகுதியாக மருத்துவம் சொல்கிறது.

பெண்கள் எந்த வயது வரையிலும் செக்ஸில் ஈடுபாடு வைத்துக்கொள்ள முடியும்?

வாழும் காலம் முழுவதும் பெண்கள் செக்ஸ் ஈடுபாடு காட்டமுடியும் என்றாலும், பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் காலத்தைக் கடந்த பிறகு பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவதில்லை.

அதற்கு முக்கியக் காரணம், உறவுக்குத் தயாராகச் சுரக்கும் திரவங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சுரப்பதில்லை.

அதனால், ஆண் உறுப்பு உள்ளே சென்று வரும் சமயத்தில் எரிச்சல், வலி உண்டாக வாய்ப்பு உண்டு.

இதை ஜெல்லி அல்லது எண்ணெய் போன்ற பொருள்களின் உதவியால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆண்களுக்கு வெளி விளையாட்டுகள் மூலம் இன்பம் தருவதுடன் தங்கள் ஆசைகளை அடக்கிக்கொள்கிறார்கள்.

ஆனால், பெண்களும் இறுதிக்காலம் வரையிலும் செக்ஸ் இன்பம் அனுபவிக்க இயலும் என்பதுதான் உண்மை.

வயது, மனம், ஆசை போன்றவற்றைப் புரிந்த ஆண் துணையாகக் கிடைத்தால், பெண் எந்த ஒரு வயதிலும் இன்பம் காண முடியும். பிறப்புறுப்பு தவிர, வயதானதும் மார்பகங்கள் தொங்கிப்போகும் நிலையில், அதை ஆண்களிடம் காட்டுவதற்கும் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதால், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செக்ஸ் இன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதில் இருந்து விடுபட்டு வருகிறார்கள்.

பெண்களுக்கு விந்து வெளியேறுமா??

பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் உள்ள சுரப்பியில் இருந்து விந்தணு சுரக்கப்படுகிறது.

இதில் குளுக்கோஸ் மற்றும் புரோஸ்டடிக் ஆசிட் போன்றவை கலந்திருப்பதுடன் அப்படியே ஆண்களின் விந்தணுவில் இருக்கும் உயிரணுவைத் தவிர அத்தனை பொருள்களும் காணப்படுகின்றன.

ஆண்களைப்போலவே பெண்களும் உச்சகட்ட இன்பம் அடையும் நேரத்தில் விந்தணுவை வெளிப்படுத்துகிறார்கள்.

பெண்களுக்குக் குழாய்போன்ற அமைப்பு இல்லாத காரணத்தால், விந்து வெளியே சீறிக்கொண்டு பாயாமல் பிறப்புறுப்பு சுவர்களில் வடிந்து வெளியேறுகிறது.

பிறப்புறுப்பு வழியாக விரல்களை நுழைத்து, பெண்ணின் கிளைட்டோரிஸ் இருக்கும் பகுதிக்கு மேலாகத் தொடும்போது பெண்களுக்கு விந்து சுரக்கும் பகுதியைக் கண்டறிய முடியும்.

இது, பெண்களுக்கு முக்கியமான ‘ஜி ஸ்பாட்’ ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் விரல் விட்டு இன்பம் தரும்போது, பெண்கள் உச்சகட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

நூற்றுக்கு சுமார் 30 சதவீதப் பெண்களே உச்சகட்ட இன்பத்தையும், விந்து பீய்ச்சுதலையும் உணர்ந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்பதாலே, பலர் இதை இன்னமும் நம்பாத நிலை நீடிக்கிறது.