Home பெண்கள் பெண்குறி உங்களோட ‘அந்த‘ இடத்துல வீசுற துர்நாற்றத்தை போக்க என்ன செய்யலாம்?

உங்களோட ‘அந்த‘ இடத்துல வீசுற துர்நாற்றத்தை போக்க என்ன செய்யலாம்?

31

நம்முடைய அந்தரங்கப் பகுதி தான் உடலிலேயே மிகவும் சென்சிடிவ்வான இடம். அந்த இடத்தை நாம் மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்காக நாம் நம்முடைய அந்தரங்கப் பகுதிகளில் சோப் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. ரசாயனங்கள் கலந்த பொருள்களோ வாசனை மிக்க திரவியங்களையோ பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருள்களைக் கொண்டு அந்த பகுதிகளைச் சுத்தம் செய்வது நல்லது.

இதுபோன்ற இயற்கை பொருள்கள் நமக்கு பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பதோடு, நோய்த் தொற்றுகளில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

எலுமிச்சையும் அதனுடைய இலைகளையும் பயன்படுத்தி நம்முடைய அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்யலாம்.

எலுமிச்சைப் பழம் மற்றும் இலைகளில் லெமோனின் என்னும் பொருள் பெண்களின் அந்தமரங்க உறுப்புக்களைத் தாக்கும் தொற்றுக் கிருமிகளின் தாக்கத்தைக் கறைக்கும். அந்தரங்கப் பகுதியின் ph அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1

எலுமிச்சை இலை – 10 முதல் 15

செய்முறை

எலுமிச்சை இலைகளை நன்கு கழுவிக் கொண்டு அதை நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையில் ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.

அந்த இலையில் உள்ள சாறு முழுவதும் நீருக்குள் இறங்கிய பின் அந்த நீர் நல்ல பச்சையாக மாறும். அந்த சமயத்தில் எலுமிச்சை சாறைப் பிழிந்து விட்டு இறக்கிவிடுங்கள்.

அந்த நீர் நன்கு ஆறியபின், காலை, மாலை இருவேளையும் அதை அந்தரங்கப் பகுதியில் ஊற்றிக் கழுவிய பின், சாதாரண நல்ல தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

எலுமிச்சை தண்ணீரை சூடாக இருக்கும் போது அந்தரங்கப் பகுதியில் ஊற்றக்கூடாது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதனால் ஆறியபின் அதைப் பயன்படுத்துவது நல்லது.

Previous articlePublic sex பஞ்சாயத்தை கூட்டி ஊருக்கு நடுவே முதலிரவு நடத்தும் மக்கள் – அதுவும் நம்ம இந்தியாவுல தான்…
Next articleஆண்(குறி)கள் பற்றி A-Z பேசும், 100 ஆண்களை நிர்வாணமாக படம் எடுத்த பெண்!