Home சூடான செய்திகள் 14 வயதிலேயே “பழுத்து” விடும் பிஞ்சுகள்

14 வயதிலேயே “பழுத்து” விடும் பிஞ்சுகள்

23

Love1செக்ஸ் கல்வியை எவ்வளவு சீக்கிரம் கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு சமுதாயத்திற்கு நல்லது போல. காரணம், இந்திய சிறார்கள், மிக மிக இளம் வயதிலேயே செக்ஸுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. பாதுகாப்பற்ற செக்ஸை பல சிறார்கள் மேற்கொள்வதால் செக்ஸ் தொடர்பான நோய்களும் இவர்களை அதிக அளவில் தாக்க ஆரம்பிப்பதாகவும் சர்வே முடிவு கூறுகிறது.நாடு முழுவதும் 20 நகரங்களில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15,000 சிறுவர் சிறுமிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர வைப்பதாக உள்ளன.சிறார்கள் முதல் செக்ஸ் தொடர்பை வைத்துக் கொள்ளும் சராசரி வயது ஆண்களுக்கு 13.72 ஆகவும், சிறுமிகளுக்கு 14 ஆகவும் உள்ளது. அதாவது இரு பாலினருமே சராசரியாக 14 வயதிலேயே செக்ஸ் தொடர்பை சந்திக்கும் நிலை உள்ளது.