Home சமையல் குறிப்புகள் ஸ்பைசி மிளகாய் பஜ்ஜி

ஸ்பைசி மிளகாய் பஜ்ஜி

29

news_04-02-2015_67mmmபஜ்ஜி மிளகாய் – 4
மேல் மாவிற்கு :
கடலைமாவு – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கைப்பிடி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
ஓமம் – அரை தேக்கரண்டி
உப்பு
சோடா உப்பு
ஸ்டஃபிங் செய்ய :
புளித்தண்ணீர் – 6 அல்லது 7 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
வெல்லம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
ஸ்டஃபிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக கலந்து வைக்கவும்
மிளகாயை குறுக்கில் கீறி வைக்கவும். உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.
மிளகாயின் உள்ளே கலந்து வைத்திருக்கும் பேஸ்ட்டை நன்கு தடவி விடவும்.
மேல் மாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
மிளகாயை பஜ்ஜி மிக்ஸில் தோய்த்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோய்த்து எடுத்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.
டபுள் ஃப்ரை செய்ய பஜ்ஜியை பத்து நிமிடம் ஆற வைத்து துண்டுகள் போடவும்.
அதை மீண்டும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இது இன்னும் சுவையாக இருக்கும்.
மாலை நேர ஸ்நாக்ஸிற்கு ஏற்ற ஸ்பைசியான மிளகாய் பஜ்ஜி ரெடி.