Home சூடான செய்திகள் விடுதிகளில் பெருகி வரும் மாணவ-மாணவியரின் உறவு

விடுதிகளில் பெருகி வரும் மாணவ-மாணவியரின் உறவு

18

மனிதர்களின் உடலமைப்பு என்பது பொதுவாக கண், காது, மூக்கு, வாய், தோல் என ஐவகை புற உறுப்புகளின் உணர்வின் மூலமாக மூளைக்கு அனுப்பப்படும் செய்திகளின் அடிப்படையில் இயங்கி வருவதாக உடற்கூறியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை ஐம்புலன்கள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றில் கண் நிர்வாகம் என்பது நமது இரண்டு கண்களால் இந்த உலகில் உள்ள நல்லதைப் பார்க்கும் நிர்வாகம். காது நிர்வாகம் என்பது நமது இரண்டு காதுகளால் இந்த உலகில் நிகழும் நல்லதைப் கேட்கும் நிர்வாகம்.

மூக்கு நிர்வாகம் என்பது நம்மை சுற்றி உள்ள நல்ல காற்றை சுவாசிக்கும் மற்றும் நறுமணத்தை நுகரும் நிர்வாகம். வாய் நிர்வாகம் என்பது நம்முடைய நாக்கின் சுவை மொட்டுக்கள் தொடர்பான நிர்வாகம்.

தோல் நிர்வாகம் என்பது ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு நிர்வாகம். இந்த தொடு உணர்வு மற்றும் கண் நிர்வாகத்தின் விளைவாக மூளைக்கு அனுப்பப்படும் செய்தியின் விளைவே.. ‘சிற்றின்பம்’ எனப்படும் உடல் சேர்க்கைக்கு ஒரு ஆணையோ, பெண்ணையோ தூண்டுகிறது.

ஆணோடு பெண்ணும், பெண்ணோடு ஆணும் இணையும் இயற்கை கலவிக்கு மாறுபட்ட வகையில் ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் என்ற முரண்பாடான கலவிக் கூடல்கள் சில நூறாண்டு காலமாகவே மேற்கத்திய நாடுகளில் அரங்கேறத் தொடங்கி விட்டன.

‘கே’ என்றும் ‘லெஸ்போ’ என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இவ்வகை ஆண்களும், பெண்களும் தயக்கமோ, கூச்சமோ படுவதில்லை. மாறாக. இன்றைய சமுதாயத்தின் நாகரிக அடயாளச் சின்னங்களாக இவர்கள், தங்களைத் தாங்களே கருதிக் கொண்டு புளகாங்கிதம் அடைகின்றனர்.

இவ்வகை முரண்பாட்டு கலவி இன்பத்தையும் கடந்த நிலையில் தனக்குத்தானே சுய இன்பம் அனுபவிக்கும் ஆண்களும், பெண்களும் தற்போது மிக அதிகமாக பெருகி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ-மாணவியரிடம் இதைப்போன்ற தீயப் பழக்கம் பெருகிக் கொண்டே வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.