Home சமையல் குறிப்புகள் வறுத்த பெக்கான் கோழிக்கறி துண்டுகள்

வறுத்த பெக்கான் கோழிக்கறி துண்டுகள்

43

இதை தயாரிப்பது ஒன்றும் மிகவும் கஷ்டமானது ஒன்றும் இல்லை, இதை உங்களின் குழந்தைகளுக்கு ஒரு சைட் டிஷ்ஷாகவோ அல்லது எப்போதும் சாப்பிடும் உணவிற்கு பதிலாகவோ கொடுக்கலாம். எனினும், நீங்கள் அவர்களின் சுகாதாரத்தினை மனதில் கொண்டு சிறந்த முறையிலும், சுத்தமாகவும் கோழியை தயார் செய்ய வேண்டும். எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த கோழி பர்கர்கள் குழ்ந்தைகளுக்கும் என்றும் நல்லதில்லை. ஒரு சிறிய முயற்சி மற்றும் குறைந்த நேரம் போதும், நீங்கள் வீட்டிலேயே அற்புதமாகவும், ஆரோக்கியமானதாகவும் பல வகையான கோழி பதார்த்தங்கள் மற்றும் சூப்களை செய்ய முடியும் இதனால். உங்கள் குழந்தைகள் சந்தோஷ படுவதோடு, அதே நேரத்தில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.
குழந்தைகளுக்கான 5 விதமான கோழிக்கறி சமையல்:
முயற்சி செய்து பாருங்களேன் உங்கள் குழந்தைகளுக்கு இந்த 5 விதமான் கோழிக்கறி சமையலை

நாவில் நீர் ஊற வைக்கும் இந்த கோழி டிஷ்ஷை செய்ய, உங்களுக்கு தேவையானவை:
16 நன்கு தூளாக நொறுக்கிய சால்டின் க்ராக்கர் (இது ஒரு வகை உணவு)
சிவப்பு மிளகு
நன்கு அரைத்த பெக்கான்
மிளகு
உப்பு
குக்கிங் ஸ்பிரே
1 முட்டையின் வெள்ளை கரு
1.5 பவுண்டுகள் கோழி துண்டுகள்
மாவு அரை கப்
எப்படி தயார் செய்வது:
425 டிகிரியில் நுண்ணலை அடுப்பை சூடுபடுத்திக் கொள்ளவும்.
அடுத்து, நன்கு தூளாக நொறுக்கிய சால்டின் க்ராக்கர், உப்பு, மிளகு மற்றும் பெக்கான் இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.
முட்டையுன் வெள்ளைக் கருவை நன்கு நுரை போன்று வரும் வரை அடித்து கலக்கி கொள்ளவும்.
ஒரு கம்பி ரேக்கில் குக்கிங் ஸ்பிரேவை பயன்படுத்தவும்.
கோழி துண்டுகளை மாவில் பிரட்டி எடுத்து, பின்னர் முட்டையின் வெள்ளை கரு மற்றும் சால்டின் கலவையில் முழுவதுமாக பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
குக்கிங் ஸ்பிரேவை இந்த சிக்கன் துண்டுகளின் மீது முழுவதும் தடவிய பிறகு, கோழி துண்டுகளை, கம்பி ரேக் மீது தொங்க விடவும். இதை 425 ஊ யில் 20 நிமிடங்கள் வரை நுண்ணலை அடுப்பில் கோழி துண்டுகளை சுட்டு எடுக்கவும்.