Home சூடான செய்திகள் வயது கூடிய பெண்கள் மீது ஆண்களுக்கு மோகம் ஏற்பட காரணம் என்ன?

வயது கூடிய பெண்கள் மீது ஆண்களுக்கு மோகம் ஏற்பட காரணம் என்ன?

52

இந்த தலைமுறையில் தான் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது. 2000-த்தின் தொடக்கத்தின் வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஐந்தாறு வயது வித்தியாசம் உள்ள பெண்ணை தான் ஜாதகம் பார்க்க கூட ஒப்புக்கொள்வார்கள். ஆனால், இன்றைய தினம் அது தலைக் கீழாக மாறி இருக்கிறது

மேற்கத்திய கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் என நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் ஆண்கள் வயது மூத்த பெண்களையோ, பெண்கள் வயது குறைந்த ஆண்களையோ விரும்புவது, திருமணம் செய்துக் கொள்ள நினைப்பது போன்றவற்றுக்கு காரணமாக இருக்கிறது

அழகு பதின் வயதுகளில் இருந்து இருபதுகளின் ஆரம்பத்தின் வரை ஆண்களுக்கு அவர்களை விட வயது மூத்த பெண்கள் மீது ஆசை அல்லது மோகம் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது இந்த அழகு தான். ஆனால், முதிர்ச்சி ஏற்படும் போது இந்த ஆசை ஆண்கள் மத்தியில் குறைய ஆரம்பித்து விடுகிறது

முதிர்ச்சி எந்த ஒரு செயல் மற்றும் விஷயங்களையும் முதிர்ச்சியான பார்வையோடு பார்க்கும் திறன் அவர்களுக்கு இருக்கிறது என்ற எண்ணம். இன்றைய ஓட்டப்பந்தய வாழ்க்கை முறையில், மனைவி எதற்கெடுத்தாலும் தன்னிடம் வந்து கேள்விக் கேட்டுக் கொண்டு நிற்க கூடாது என்ற ஆண்களின் எண்ணம் இதற்கான மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

பேசும் விதம் எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுப்பிடிப்பது, ஏதேனும் கூறினால் அதிலிருந்து வேறொரு விஷயத்திற்கு அந்த பேச்சை மாற்றி எடுத்துக் கொண்டு போவது என நச்சரிப்புகள் இல்லாமல், தெளிவான பேச்சு, எதையும் புரிந்துக்கொள்ளும் மனோபாவம் வயது அதிகமான பெண்ணிடம் இருக்கிறது என்று ஆண்கள் கருதுகிறார்கள்.

அக்கறையான செயல்பாடு பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இதிலும், முதிர்ச்சியான பெண்ணிடம் புரிதலோடு கலந்த அக்கறை இருப்பது, தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சி அடையவும் செய்கிறது என்று ஆண்கள் கருதுகிறார்கள்.

தலைமை வகிப்பது முந்தைய தலைமுறையினர் போல, வீட்டிலும், நாட்டிலும் இரண்டு இடத்திலும் ஆண்கள் தான் தலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த தலைமுறை ஆண்களிடம் இல்லை. மேலும் அதை ஒரு தலைவலி என்று கருதுகிறார்கள். வேலை, வேலை என்று ஓடுவது மத்தியில் வீட்டையும் முழுவதாய் ஆண்களால் கவனிக்க முடிவதில்லை என்பது தான் உண்மை. எனவே, முதிர்ச்சியான பெண்கள் வீட்டை நல்லப்படியாக பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.

தவறுகளை ஏற்றுக் கொள்வார்கள் தவறுகள் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ அனைவரும் தவறுகள் செய்வதுண்டு. இதை முதிர்ச்சியுடைய பெண்கள் ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் கொண்டிருப்பார்கள்.

அகம்பாவம் ஈகோ எனும் அகம்பாவம் இவர்கள் மத்தியில் கொஞ்சம் குறைவாக இருக்கும். நீயா, நானா என்ற எண்ணம் பெரிதாய் இருக்காது என்ற கருத்தும் கூட ஆண்கள் தன்னை விட வயது அதிகமான பெண் மீது ஆண்களுக்கு மோகம் ஏற்பட ஓர் காரணமாக இருக்கிறது.

அனுபவ அறிவு வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த அனுபவ அறிவு அவர்களிடம் இருக்கும்.

மனம் திறந்து பேசுதல் உடல் ரீதியாகவும் சரி, மனம் ரீதியாகவும் சரி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் முதிர்ச்சியான பெண்களிடம் மனம் திறந்து பேச முடியும்.