Home சூடான செய்திகள் முத்தமிடும் போது கண்களை மூடிக்கொள்பவரா நீங்கள்? இத படிங்க..!

முத்தமிடும் போது கண்களை மூடிக்கொள்பவரா நீங்கள்? இத படிங்க..!

21

முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன.

ஆபாசம் கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில. மேலும் வயது வந்த ஆடவர் முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன.

பாசம் மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. பாசம் காட்டுதல் மன் அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது

உணர்வுகள் எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும். அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான உறவு முறைமுத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்

பிரெஞ்ச் முத்தம் இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்

முத்தமிடும் இடம் ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார்கள். பெண்ணின் உச்சிப்பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி ஆகிய எட்டு இடங்கள் தான் அவை. இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்லமாட்டேன்.

கண்களை மூடுதல் பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூடாக பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது போல படத்தில் நடிக்கும் போது கூட கண்களை தானாக மூடிக் கொள்வார்கள். இது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் செயல்பாடு இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

உணர்ச்சி நிலை மேலும், பார்வை மற்றும் தொட்டு உணர்தல் குறித்த ஆய்வுகள், தொட்டு உணர்ந்து உணர்வை அனுபவிக்கும் போது நமது மூளை அதனை காட்சியாக, மன பிம்பமாக உருவகம் செய்ய தூண்டுகிறதாம். அதனாலும் கூட முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிடும் போது ஜோடிகளின் மத்தியில் உண்டாகும் காட்சி திறனை வைத்து தான் கண்கள் மூடுவது கண்டறியப்படுகிறது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது அந்தந்த ஜோடி மற்றும் அவர்களது உணர்ச்சி நிலை மற்றும் அளவு குறித்து மாறுப்படும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உணர்வு முத்தமிட்டுக் கொள்ளும் போது அந்த ஜோடிகளின் தொடுவுணர்வு எந்தளவிற்கு மேலோங்குகிறது என்பதை வைத்து தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தொடு உணர்வில் சிறிதளவு தாக்கம் ஏற்படினும் அதை சார்ந்து முத்தமிடுவதிலும் மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக இறுக்கமான முறையில் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென துணை தொடுதலை விடுத்துவிட்டால், முத்தமிடும் உணர்வில் இருந்து நீங்கள் வெளிவந்துவிடுவீர்கள்.

முத்தமிடும் நேரம் உணர்வு நிலை அல்லது இறுக்கம் அதிகரித்தாலோ, தீண்டுதல் வீரியம் அடைந்தாலோ முத்தமிடும் நேரம் அல்லது அளவு நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதை வைத்து அவர்கள் காட்சிப்படுத்தும் அளவையும் கூட கணக்கிட முடியுமாம். முத்தமிடும் போது மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்வமான எந்த ஒரு செயல்பாடாக இருப்பினும் மூளை காட்சி வடிவில் பிம்பத்தை உண்டாக்கி பார்க்கவே முனையும். இது உடலுறவில் ஈடுபடும் போது, கட்டியணைக்கும் போதென உணர்ச்சி ரீதியான எல்லா செயல்பாடுகளின் போதும் உண்டாகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் மெல்பேர்ன் ஆராய்ச்சியார்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.