Home சமையல் குறிப்புகள் மரவள்ளிக் கிழங்கு சேமியா மாவு தோசை

மரவள்ளிக் கிழங்கு சேமியா மாவு தோசை

22

தேவையான பொருட்கள் வருமாறு:-

மரவள்ளிக் கிழங்கு சேமியா மாவு- 5 கோப்பை,
அரிசி மாவு- 1 கோப்பை,
உளுந்தம் பருப்பு- 1 கோப்பை,
உப்பு- 2 தேக்கரண்டி,
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:-

* உளுந்தம் பருப்பை தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* சேமியா மாவையும், அரிசி மாவையும் தண்ணீரில் பக்குவமாக கரைத்து, உளுந்த மாவுடன் கலந்து புளிக்க வைக்க வேண்டும்.

* தோசைக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இருபுறமும் முறுகலாக வேக வைத்து எடுத்தால், சேமியா மாவு தோசை தயார் ஆகிவிடும்.

* மரவள்ளிக் கிழங்கு சேமியா மாவில் தோசை தயார் செய்யும் போது, அரிசி மாவுக்கு பதிலாக சோளம் அல்லது கேழ்வரகு மாவையும் பயன்படுத்தலாம். அவ்வாறு சோளம், கேழ்வரகு மாவை பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.