Home சூடான செய்திகள் மனைவி உங்களை வெறுத்தால் இப்படிப் பண்ணுங்கள்

மனைவி உங்களை வெறுத்தால் இப்படிப் பண்ணுங்கள்

24

images (1)திருமணம் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக பூக்கவுள்ள பந்தத்தின் அஸ்திவாரமாகும். வாழ்க்கை என்னும் வண்டியை ஒன்றாக பூட்டிய இரண்டு மாடுகளாக கணவனும் மனைவியும் இழுத்து செல்வார்கள். அதில் ஒன்று மக்கர் செய்தாலும் சரி வண்டி நின்று விடும். ஆகவே, கணவன் மனைவியின் தாம்பத்ய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓட வேண்டுமானால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
உங்கள் திருமண வாழ்க்கையில் உங்கள் மனைவி உங்களை வெறுத்தால், உங்கள் வாழ்க்கையே துன்பம் நிறைந்ததாக மாறிவிடும். தன் மனைவி தன்னிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாத சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவனும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சந்திக்கவே செய்வார்கள். உங்கள் மனைவி உங்களை வெறுப்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களிடம் அவர் காதல் உணர்வோடு இல்லையா? அது போதாதா, அவர் உங்கள் மீது சந்தோஷத்துடன் இல்லை என்பதை தெரிந்து கொள்ள? ஆனாலும் நீங்கள் அதை அப்படியே விட்டு விட முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
நீங்கள் அவரை அளவுக்கு அதிகமாக நேசித்து வந்தால், அவரின் வெறுப்பை போக்க கண்டிப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய முன் வருவீர்கள். அன்பார்ந்த ஒரு கணவனாக, உங்கள் மனைவியின் இதயத்தை நீங்கள் வெல்ல வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளது. அப்படி உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அந்த வெறுப்பை அப்படியே விட்டு விடாமால், அதனை போக்க நீங்கள் சில முயற்சிகளையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும்.
உறவை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றுங்கள் உங்கள் மனைவி உங்களை வெறுத்தால் என்னவாகும்? திருமணம் என்னும் அழகிய பந்தம் சீர்குலைய தொடங்கும். அதனால் உங்கள் மனைவியின் இதயத்தை வெல்ல வாழ்க்கையில் சுவாரசியத்தை கொண்டு வாருங்கள்.