Home சமையல் குறிப்புகள் மட்டன் சமோசா

மட்டன் சமோசா

19

downloadஆட்டுக்கறி என்றாலே குழம்பு, பிரியாணி என ஞாபகம் வரும். ஆனால் மட்டனில் சமோசா செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா – 350 கிராம்
பேக்கிங் பௌடர் – 2 தேக்கரண்டி
கொத்துகறி – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லிதழை – 1 கப்
புதினா இலை – 1 கப்
இஞ்சி – 1 அங்குலம்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
நெய் – 3 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
தக்காளி – பெரியது
கரம் மசாலா – தேக்கரண்டி
செய்முறை
* மைதா மாவில் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 2 மணி நேரம் கழித்து மறுபடியும் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* கொத்துக்கறியை கடாயில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லிதழை, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, கரம் மசாலா கொத்தமல்லிதழை, புதினா சேர்த்து கலந்து அதனுடன் கொத்து கறி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, உப்பு, தக்காளி கலவையை சேர்த்து கலக்கவும்.
* மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை கோன் வடிவமாக செய்து மட்டன் கலவையை வைத்து மூடவும்.
* அரைமணி நேரத்திற்கு பிறகு அதை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான மட்டன் சமோசா ரெடி.