Home சமையல் குறிப்புகள் பொ‌ரி‌‌ச்ச ‌மீ‌ன்

பொ‌ரி‌‌ச்ச ‌மீ‌ன்

33

தேவையான பொருட்கள்
2-300x225-300x225
ஊறவைக்க தேவையான மசாலா கலவை செய்ய:
மீன் – 2 முழு மீன் (நான் உபயோகிப்பது அயிரை மீன்)
மிளகு தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு
மஞ்சள் – 1/4 மேசைக்கரண்டி
மசாலாக்கு தேவையானவை:
சின்ன வெங்காயம் – 20
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
வெந்தய பொடி -1/8 தேக்கரண்டி
பாதி தக்காளியை விழுதாக்கிக் கொள்ள‌வும்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு நறுக்கியது- 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மீனின் இரண்டு பக்கமும் உள்ள செதில்களை வெட்டிக் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். உப்பு, மிளகு, மஞ்சள் தூளுடன், மேலே கூறியுள்ள ஊற வைக்கும் கலவையை கொண்டு மீனை அந்த கலவையில், 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும், அதிக நேரம் ஊற வைத்தாலும் நல்லது.
இஞ்சி பூண்டு விழுதுடன், அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு வெடிக்கும் வரை தாளித்த பின், சின்ன‌ வெங்காயம் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை சமைத்து இதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக தக்காளி விழுதை சேர்த்து நன்கு விழுது போல வரும் வரை சமைக்கவும்.
ஒரு கடாயில் மீனை 30 வினாடிகள் வரை இரண்டு புறமும் எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். இப்போது ஊறவைக்க தேவையான மசாலா கலவையை மீன் முழுவதும் தடவி 30 நிமிடங்கள் 170 டிகிரி சென்டிகிரேட்டில், ஒரு நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ் ஓவனில்) வேகவைக்கவும்.