Home சூடான செய்திகள் பொருத்தமற்ற பிரா அணிவதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள்!

பொருத்தமற்ற பிரா அணிவதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள்!

25

pink-bra-on-white-730x400உங்களுக்கு தெரியுமா உலகில் 80 சதவீத பெண்கள் தங்களுக்கு பொருத்தமற்ற பிராவை தான் அணிகின்றனர். இதில் என்ன தவறு என கேட்கிறீர்களா? இதன் பின்னணியில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு இதுதான் காரணமென்றே தெரியாமல் இருப்பது தான் அதிர்ச்சிக்குரியது. பெண்களுக்கு சில நேரங்களில் அவர்களுக்கு ஏன் முதுகு வலி, தலை வலி ஏற்படுகின்றது என தெரியவில்லை என புலம்புவார்கள். ஏன் உங்கள் வீட்டில் கூட இந்த பொலம்பல்கள் எதிரோலிதிருக்காலாம். இதற்கு காரணம் பெண்கள் அணியும் பொருத்தமற்ற பிராவாக கூட இருக்கலாம் என்பது தான் உண்மை.

நீங்கள் உங்களுக்கு பொருத்தமற்ற பிராவை தான் அணிந்துள்ளீர் என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது? பிராவை விட்டு மார்பகங்கள் வெளியே வருவது, பிராவின் ஸ்ராப் சருமத்தை இறுக்கியவாறு இருப்பது போன்றவை அதற்கான அறிகுறிகளாகும். சரி, இனி பொருத்தமற்ற பிரா அணிவதன் மூலம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

மூச்சு விடுவதில் சிரமம்.

உங்களது பிரா இறுக்கமாகவோ அல்லது உங்களது மார்பக எலும்போடு சரியாக பொருந்தாமல் இருந்தாலோ நீங்கள் மூச்சுவிட சிரமப்படுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் உங்களுக்கு பொருத்தமற்ற பிராவை அணிந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாம். மற்றும் இந்த பிரச்சனையால் உங்களுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

அஜீரண கோளாறு.

நீங்கள் உங்களுக்கு பொருத்தமற்ற இறுக்கமான பிராவை அணிவந்தனால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. ஏனெனில் இது உங்களது ஜீரண செயல்பாட்டை தடைப்பட செய்கிறது.

முதுகு வலி.

நீங்கள் பிராவை இறுக்கமாக அணிவதனால் முதுகு வலி ஏற்பட அநேக வாய்ப்புகள் உள்ளன. மற்றும் இது தொடர்ந்து இருந்தால் பின் நாட்களில் தோள்பட்டை வலியும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அசிங்கமான தோற்றம் .

உங்களுக்கு பொருத்தமற்ற பிராவை அணிவதால் உங்களது தோற்றம் அலங்கோலமாக காட்சி அளிக்கும். இதனால் பெண்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உராய்வுகள்.

உங்களுக்கு பொருத்தமற்ற இறுக்கமான பிராவினை அணிவதனால், உடலில் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் சுழற்சி சீர் இழக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி உங்களது உடல் அங்கங்களில் சிராய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

மார்பக வலி.

இறுக்கமாக பிரா அணிவதனால் உங்களது மார்பகங்களில் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகின்றது

மார்பக புற்றுநோய்.

முன்பு கூறியதை போலவே பெண்கள் பிராவை இருக்காமாக அணிவதனால் மார்பகங்களில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக மார்பக பகுதிகளில் நச்சுகள் அதிகரித்து புற்றுநோய் உருவாக வாய்ப்புகள் இருப்பதாய் மருத்துவ நிபுணர்கள் அறிவுரைகின்றனர்.

தலை வலி.

பெண்கள் இறுக்கமான பிரா அணிவதனால், உடலில் ஆக்ஸிஜனின் சுழற்சி சரியாக ஏற்படாமல் தடைப்படுகிறது, இது தலைவலி ஏற்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் பொருத்தமற்ற பிரா அணிவதனால் இத்தனை நாட்களாய் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என அறியாமலேயே இருந்திருப்பீர்கள். எனவே, இதில் இருந்து எல்லாம் விடுபட பெண்கள் சரியான, பொருத்தமான பிராவை அணிவது அவசியம் ஆகும்.