Home சமையல் குறிப்புகள் பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது?

பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது?

33

57a5a9be-f54e-45c0-a0f7-188cd97d3f5d_S_secvpf (1)சாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஆலிவ் ஆயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல.

ஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய எண்ணெய்களை வீசிவிட வேண்டும். ஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியன பொரிப்பதற்கு ஏற்றது. ஒரு முறை உபயோகித்ததை மீண்டும் பொரிப்பதற்கு உபயோகித்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இல்லை.