Home பெண்கள் பெண்குறி பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்

பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்

32

images-5-300x156-615x320வெள்ளைப்படுதல்
இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.

வகைகள்
Ø உடல் மாற்றங்களால் ஏற்படுவது – Physiological Leucorrhoea (உதாரணம் உடலுறவிற்க்கு முன்பு, மாதவிடாய்க்கு முன்பு, காம உணர்வுகள் ஏற்ப்படும் போது)
Ø நோயால் அல்லது நோய்த்தொற்றால் – Pathological Leucorrhoea ஏற்படுவது

வெள்ளைப் படுதல் அறிகுறிகள்
ü பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்
ü வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் சுரத்தல்.
ü முட்டை வெள்ளைக்கரு போலவோ, மோர் அல்லது தயிர் போன்று கட்டி கட்டி யாக கூட படலாம்.
ü சிலருக்கு தண்ணீர் போன்றோ, பால் போலவோ கூட இருக்கும்.
ü வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுதல்.
ü மிகுந்த எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்
ü வெள்ளைப் படுவதால் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாதல்.
ü இடுப்பு வலி, முதுகு வலி.
ü உடல் மெலிந்து போதல். இளைத்தல்.

நோய்க்கான காரணங்கள்
Ø பொதுவாக ஒரு சில பெண்களுக்கு வயதிற்க்கு வந்த நாள் முதலே வெள்ளைப் படுதல் இருக்கும்.
Ø சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.
Ø ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
Ø தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.
Ø சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
Ø அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.

எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளை படுதல் நோயைத் தவிர்க்க
ü உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ü பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ü உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
ü சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. சிறப்பு ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.