Home சூடான செய்திகள் பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ மருத்துவ குளியல்

பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ மருத்துவ குளியல்

22

chaiyok என்பது கொரிய நாட்டு பாரம்பரிய நீராவிக் குளியல்.
பல நூற்றாண்டுகளாக அந்நா ட்டில் நின்று நிலவி வருகின்ற ஒரு மருத்துவகுளியல். அதுவு ம் பெண்களுக்கான குளியல். இன்னும் தெளிவாக சொன்னா ல் பெண்களில் பிறப்பு உறுப்புக்கான பிரத்தியேக குளி யல் சிகிச்சை இது.
பெண் உறுப்பு பிரதேசத்துக்கான இக்குளியல் சிகிச்சை உடலுக்கு ஆரோக்கியமானது, சுகாதாரமா னது, சிறப்பானது என்பது கொரி ய நாட்டவரின் நம்பிக்கை.
இக்குளியல் மன அழுத்தத்தை குறைக்கின்றதாம். தொற்றுக்க ளுக்குஎதிராக போராடும் சக் தியைக்கொடுக்கின்றதாம்.
விசேடமாக மாத விலக்குச் சக்கரச் செயல்பாட்டை ஒழு ங்காக்குகின்றதாம். இன்னும் பல மருத்துவ நன்மைகள் உண்டு என்று நம்பப்படுகின்றது.
ஆனால் நவீன மருத்துவ விஞ்ஞானம் இதை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுகின்றது. இக் குளியலை ஒரு சிகிச்சையாக ஏற் றுக்கொள்ள முடியாது என்கிறது. குறிப்பாக இக்குளியல்முறையால் மருத்துவ நன்மைகள் உண்டு என் பதற்கு ஆதாரம் கிடையாது என்று அடித்துக் கூறுகின்றது.
நீராவி ஒரு வேளை உள ரீதியான நன்மைகளை இப் பெண்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்றுசில சமூக விஞ் ஞானிகள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் கொரிய நாட்டுப் பெண்கள் மத்தியில் இன்றும் இச்சிகிச்சை முறை உயிரோடுதான் வழ்கின்றது.
குறிப்பாக மாத விலக்கு முடிந்த கையோடு கொரிய பெண்கள் இக்குளியல் சிகிச்சையை வீட் டில் வழமை யாக பெறுகின்றனர்.
கொதிக்கும் நீர் உள்ள பாத்திரம் கீழே வைக்கப்படும். அப்பாத்திரத்தில் இருந்து எழுகின்ற நீராவியை நேரடியாக உள் வாங்கக் கூடிய வகையில் நிர்வாணமா க தள பாடம் ஒன்றில் பெண் அமர்ந்து இருப்பார்.
பெண்ணின் உடல் முழுவதுக்கும் நீராவி உள்வாங்கப் படும். நீரில் மருத்துவ மூலிகைகள் கலக்கப் பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.