Home பெண்கள் அழகு குறிப்பு புன்னகைக் கோடுகளை மறைக்க சிகிச்சை இருக்கு!

புன்னகைக் கோடுகளை மறைக்க சிகிச்சை இருக்கு!

24

வாய்விட்டு மகிழ்ச்சியாக சிரிக்கும் போது உதடுகளோடு கண்களும் சிரிக்கும் அப்போது கண்களின் ஓரத்திலும் உதடுகளின் ஓரத்திலும் அனைவருக்கும் ஒரு கோடு ஏற்படும். இக்கோடுகள் உள்ளவர்கள் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இவை வெறும் சிரிப்புக் கோடுகள் அல்ல இவை collagen என்ற புரதமும் hyaluronic என்ற அமிலமும் இழக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இந்த கோடுகள் ஏற்படுவதால் முகத்தில் முதுமை கூடி வயதினை அதிகரித்துக் காட்டும்.
பெரும்பாலும் 40-80 வயதிற்கிடையில் மனிதர்கள் இயற்கையான hyaluronic அமிலத்தினை இழக்கின்றனராம். முதலில் கொழுப்பை இழக்கும் இடமாகக் கண்கள்தான் உள்ளன. இதனுடன், சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளும் தொடர்புபட்டுள்ளன. இதனாலும் இச்சுருக்கங்கள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிரிப்புகளின் மூலம் ஏற்படும் சுருக்கத்தினை போக்க Botox என்ற மருந்து தசைநார்களை மரத்துப்போகச் செய்துவிடும். ஊசிகள் முகத்தினை ஓர் உறைந்த நிலைக்கு மாற்றிவிடும். இதற்கு மாறாக hyaluronic அமிலத்தினால் உருவாக்கப்பட்ட நிரப்பிகளை உட்செலுத்தினால் அது தோலை உப்ப வைத்துக்கொண்டிருக்கும். இதன் விலையும் Botox மருந்தின் விலையும் ஒன்றுதானாம். 300 பவுன்ட்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிகிச்சை முறை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் ஹரோட்ஸ்சில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த WrinkleMD என்ற வலியற்ற ஊசியற்ற கருவியானது 130 பவுண்ட்களே பெறுமதியானதாகும். இது hyaluronic அமிலங்கொண்ட மூலக்கூறுகளைப் புதிய தொழிநுட்ப முறையினால் தோலுக்குள் ஆழமாகச் செலுத்துகின்றது.
இதனை 35-65 இற்குமிடைப்பட்ட பெண்கள் ஒரு மாதமாகப் பயன்படுத்தினார் என்றும் வலியற்றதாக இருந்ததாகவும் தோலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். வாரந்தோறும் இந்த சிலிக்கன் அமைப்புச் சரிபார்க்கப்பட்டதாகவும் இவ்வாறு 4 வாரங்கள் முடிந்தபின்னர் அதை எடுத்தபோது அவர்களது 41.7வீதச் சுருக்கம் குறைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஊசியின் வலிகளின்றி அமிலத்தினைத் தோலிற்குள் செலுத்துவதானது தோலிற்கும் நல்லதாகும். கிருமித்தொற்றினையும் இது இல்லாமற்செய்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.
இதனைப் பலதரப்பட்ட பெண்களில் செய்தபோதும் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள் கிடைத்திருந்தன. எனினும் இவை எவ்வளவு காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்குமென்பதும் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முகத்தின் இளமையை தக்கவைக்க இந்த சிகிச்சை முறையினை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயங்காமல் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.