Home பாலியல் புட்டத்தில் அரிக்கிறதா? அது மூல நோயா என கண்டறிவது எப்படி?

புட்டத்தில் அரிக்கிறதா? அது மூல நோயா என கண்டறிவது எப்படி?

45

3g0Dv4P1800x480_IMAGE54507034புட்டத்தில் வலிக்கிறதா? அதிகமாக அரிக்கிறதா? அமெரிக்காவின் தேசிய சுகாதார நிலையத்தின் ஆய்வின் படி, புட்டத்தில் அதிகமாக அரிப்பு / வலி இருக்கும் நபர்களில் 75% பேருக்கு மூல நோய் (Hemorrhoids) பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசனவாய் சுற்றி நரம்புகளில் வீக்கம், அரிப்பு, வலி போன்றவை இதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.

மூலநோய் காரணிகள்:

நீங்கள் மலம் கழிக்க அமரும் நிலை கூட இதற்கான காரணமாக இருக்கலாம் என அமெரிக்க வாயுத்தொல்லை நிபுணர் கூறியுள்ளார். ஆம், வெஸ்டர்ன் கழிவறைகளில் தவறான நிலைகளில் அமரும் போது, புட்டத்தில் இருக்கும் நரம்புகளில் தாக்கம் மற்றும் அழற்சி உண்டாகிறது.

முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் வெஸ்டர்ன் கழிவறைகள் உபயோகிக்கும் போது நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சீராக இரத்த ஓட்டம் செல்வதில்லை, வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

எப்படி அறிந்துக் கொள்வது?

உங்களுக்கு மூல நோய் (Hemorrhoids) தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை, ஆசனவாய் பகுதியில் ஏற்பட்டுள்ள கட்டிகள் வைத்து அறியலாம். மேலும், புட்டம் சற்று பெரிதானது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுவதை நீங்கள் காண முடியும்.

எப்படி சரி செய்வது?

மலச்சிக்கல் ஏற்படும் போதே நீங்கள் அதை பற்றி கவனிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி மலம் கழிப்பதில் கடினமாக இருந்தால் எதற்கும் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. மேலும், உங்கள் டயட்டில் நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.

தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். ராஸ்பெர்ரி, ஆப்பிள், காலே, பருப்பு, பீன்ஸ், மற்றும் நட்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், அதிக நேரம் கழிவறையில் அமர்வதை தவிர்க்க வேண்டும். அதாவது, சிலர் மொபைலை நொண்டிக் கொண்டு நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள், இதை தவிர்ப்பது நல்லது.

நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்கள். 30 நிமிடத்திற்கு ஒருமுறை சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் புட்டத்தில் உண்டாகும் அழுத்தம் குறையும். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் கூட மூல நோய் வரலாம்.

பெரும்பாலும், வெஸ்டர்ன் ஸ்டைல் கழிவறைகளை தவிர்த்து, இந்திய மாடல் கழிவறைகளை பயன்படுவது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது!