Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பை பற்றி மக்கள் பேச அஞ்சும் 9 விஷயங்கள்..!

பிறப்புறுப்பை பற்றி மக்கள் பேச அஞ்சும் 9 விஷயங்கள்..!

46

மக்கள் தொகையில், நம் நாடு இரண்டாவது இடத்தில் இருந்தும், பலவித தொழில்நுட்பங்கள் இருந்தும், பலத்த படிப்பறிவு இருந்தும், நாம் நம்மைப் பற்றியே அறியாமல் இருக்கிறோம். நம்முடைய உடல் பாகங்களைப் பற்றி அறிவதும், பேசுவதும் கேவலம் என்று நினைக்கிறோம். உண்மையைச் சொல்லப்போனால், நாம் நம்மை பற்றி முழுதும் அறியாமல் இருப்பதே கேவலம்.

வாருங்கள் பெண்களே! நம் உடலின் முக்கிய பாகம் பற்றி, நம்மை ஆணா? பெண்ணா? என்று பாகம் பிரிக்கும் பாகம் குறித்து அறியலாம்.., இப்பதிப்பில்.

1. கன்னித்திரை..!

பெண்களின் கற்புத் தன்மையை குறிக்கும் ஒரு விஷயம், பெண்களின் பிறப்புக்கு அருகிலுள்ள கன்னித்திரை. பிறவியிலேயே சில பெண்கள் கன்னித்திரை இல்லாமல் பிறக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் உடலுறவு கொள்ளும் பொது, இந்த கன்னித்திரை கிழிக்கப்பட்டு, உங்கள் கன்னித்தன்மை பறிபோகும்; இது கிழிக்கப்படும் சமயங்களில், சில நேரம் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

2. பிறப்புறுப்பின் அளவு மாறுபடும்..!

நீங்கள் உடலுறவு கொள்ளும் போது, உங்களின் பிறப்புறுப்பின் அளவு மாறும். அதாவது, உங்கள் பிறப்புறுப்பு அளவில் சிறியதாக இருந்திருக்கும்; அதுவே, நீங்கள் உடலுறவு கொண்ட பின், முன்பிருந்த அளவினை விட இருமடங்கு பெரிதாகும்.

3. நரம்புகளின் முடிவு..!

பெண்களின் பிறப்புறுப்பில், 8000 நரம்புகள், நரம்புப் பாதைகள் முடிவடைகின்றன. இது ஆண்களின் பிறப்புறுப்பில் முடியும் நரம்புகளின் எணிக்கையை விட அதிகம்; அதாவது ஆண்களின் பிறப்புறுப்பில் 4000 நரம்புகள் முடிவடைகின்றன. இதனாலேயே ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமான உணர்ச்சியும், பெண்கள் அதிக உணர்ச்சிவசப் படுபவர்களாக உள்ளனர்.

4. மணம்..!

நீங்கள் உண்ணும் உணவே, உங்கள் பிறப்புறுப்பின் மணத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் அன்னாசி பழம் உட்கொண்டால், உங்கள் பிறப்புறுப்பு திரவம் மற்றும் மணம், அதன் தன்மை கொண்டு விளங்கும்.

5. பிறப்புறுப்பின் சுத்தம்..!

இன்றைய நாட்களில், பிறப்புறுப்பை சுத்தம் செய்ய என்று பலவித பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன; ஆனால், உண்மையில் இப்பொருட்கள் அனைத்தும் நன்மையை விட அதிக தீமையையே உண்டாக்குகின்றன. குளிக்கும் போது, உபயோகப்படுத்தும் சோப்பு மற்றும் நீரே, உங்கள் பிறப்புறுப்பை சுத்தப்படுத்த போதுமானது.

6. தளர்தல்..!

நீங்கள் உடலுறவு கொள்வதால், உங்கள் பிறப்புறுப்பு/பிறப்புறுப்பு தசைகள் தளர்ந்துவிடும் என்பது உண்மையல்ல. குழந்தை பிறப்பு மற்றும் வயதாக்குதல் போன்ற காரணங்களால், உங்கள் பிறப்புறுப்பும் அதன் தசைகளும் தளர்ந்து போகலாம்.

7. பிறப்புறுப்பின் பற்றும் செயல்..

இயல்பாகவே, உடலுறவு நிகழும் போது, பெண்களின் பிறப்புறுப்பு ஆண்களின் பற்றிக் கொள்ளும்; இதன் காரணமாகவே, உடலுறவில் பெண்ணிற்குள் நுழைந்த ஆண் பிறப்புறுப்பு தானாக வெளிவர இயலாதவாறு, பெண்ணின் பிறப்புறுப்பு பற்றிக் கொள்ளும்.

8. பொருட்கள் மாட்டிக் கொள்ளும்..!

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், ஏதேனும் சில பொருட்கள் பெண்களின் பிறப்புறுப்பின் உள்நுழைந்துவிட்டால், அவை மாட்டிக் கொள்ளும். மற்றவரின் உதவி கொண்டோ அல்லது மருத்துவ உபகரணங்களின் உதவி கொண்டோ மட்டுமே பொருட்களை வெளியேற்ற இயலும்.

9. பிறப்புறுப்பின் ஈரம்..

நீங்கள் பிறப்புக்கட்டுப்பாட்டு மருந்துகளை உட்கொண்டால், பிறப்புறுப்பில் அதிக ஈரம் ஏற்படும்; மாதவிடாய் நாட்கள் மற்றும் மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் மேலெழும்பும் போது, உங்கள் பிறப்புறுப்பில் ஈரம் ஏற்படும். பிறப்புறுப்பின் இந்த ஈரத்தன்மை சாதாரணமாக இருந்தால் மட்டுமே, உடலுறவு கொள்ளும் போது அதிக வலி ஏற்படாமல் இருக்கும்.