Home இரகசியகேள்வி-பதில் பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது

பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது

66

குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?”

பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவரின் படிப்பு, உத்யோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் திருப்தியடைந்த பின்னரே திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனால், மணமான இந்த எட்டு மாதங்களில் அவருக்கும் எனக்கும் கேரக்டர், ரசனை அனைத்துமே நேர்மாறானதாக இருப்பதாக உணர்கிறேன். குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?” பதில் : “பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் மட்டுமல்ல, காதல் திருமணங்களிலும் மணமான சில வருடங்களுக்கு கணவன் – மனைவி இருவரின் எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம் ஏமாற்றம் அடைவது இயல்புதான். இதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டால், சமூகத்தின் பொதுத்தன்மையில் உங்களது தனிப்பட்ட குடைச்சலாக நீங்கள் பதற்றப்படுவது சற்றே மட்டுப்படும். இப்பிரச்னையைப் பொறுத்தவரை, சொல்வதற்கு எளிதானதும் நடைமுறையில் சற்றுக் கடினமானதுமான தீர்வுஸ அட்ஜஸ்ட் செய்து போவதுதான். விட்டுக் கொடுக்கும்போது இழப்பதைவிட பெறுவதே அதிகமாக இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முயலுங்கள். காலக்கெடுவை நெருக்காது, உங்களவரை புரிந்து கொள்வதையும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களை அறிவதையும் ஒரு புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தோடு மேற்கொண்டு பாருங்கள். அதேபோல, ‘உங்கள் கணவரின் ஆர்வங்கள், ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காண முயலுங்கள். அவரது எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிய முற்படும்போது, தானாக அவரும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைவார். இது ஒரு ரேடியோ ட்யூன் செய்யப்படுவதுபோல இல்லறத்தில் இயல்பாக மலரும். எல்லாவற்றையும்விட, நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது முழுமையாகக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களின் இந்த எல்லா முயற்சிகளும் பலன் தரத் தவறினால், குடும்ப நல ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் உங்கள் எதிர்பார்ப்புகளை, சங்கடங்களை எல்லாம் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு பக்குவத்துடன் அடையாளம் காட்டலாம். ‘எல்லா விஷயங்கள்லயும் அவரும் நானும் நேரெதிர்’ என்று கவலைப்படும் பெண்கள், இறுதியாக இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ‘ஐடியல் பார்ட்னர்கள்’ சினிமாவில், சீரியலில் மட்டுமே அமைவார்கள். நடைமுறையில், ஒருமித்த ரசனை உள்ள தம்பதியரைவிட வெவ்வேறு தளங்களில் ரசனை உள்ளவர்களின் தாம்பத்யமே வெகுகாலத்துக்கு சுவாரஸ்யமளிக்கும். ஆம்ஸ ஒருமித்த ரசனைகள் நாள்போக்கில் புதுமையின்றி போரடித்துப் போகலாம். எனவே, புலம்பலை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் புரிதலை துரிதமாக்குவதன் மூலம் உங்களை செம்மையான வாழ்க்கைத் துணையாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்!”

உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?

‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் கரு உண்டாகவில்லை. என் உறவினர் ஒருவர் ‘உடலின் அதிக சூடு காரணமாக விந்தணுக்கள் இறக்கக்கூடும். சூட்டை அதிகரிக்கிற புளியே உணவில் சேர்க்கக் கூடாது’ என்கிறார். என் வீட்டிலோ புளியோதரை, புளிக்குழம்பு போன்றவற்றை அடிக்கடி செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. மாதவிலக்கான நாளில் இருந்து சரியாக 14\வது நாள் உறவு கொண்டும் பலன் இல்லை. என் கேள்விகள் இதுதான்… 1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா? 2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை? 3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’ பதில் : ‘‘உங்கள் வயது என்னவென்று நீங்கள் குறிப்பிடவில்லை. 24 வயதுக்குள்தான் என்றால் நீங்கள் தாராளமாக இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கலாம். மற்றவர்கள், ஸ்பெர்ம் அனலைசஸ் அதாவது விந்தணு, முட்டை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 30-ஐ நெருங்கியவர்களாகவோ, 30-க்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். சாப்பாட்டில் புளி அதிகம் சேர்ப்பதால் எல்லாம் தாம்பத்ய உறவிலோ, விந்தணுக்கள் உற்பத்தியிலோ எந்த பாதிப்பும் இருக்காது. கவலை வேண்டாம். ஆண்களுக்கு, உடம்பில் சூடு அதிகமானால் விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மைதான். தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் அருகில் பணிபுரிகிறவர்களுக்கு உடம்பில் நேரடியாக சூடுபடுவதால், விந்தணுக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு, ரத்த நாளங்களில் ஏற்படுகிற சில மாற்றங்களால் உடம்புக்குள் சூடு அதிகரித்து, அதனாலும் விந்தணுக்கள் குறையலாம். மற்றபடி, பொதுவாக, திருமணம் முடிந்து 5 அல்லது 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவ சிகிச்சை எடுக்கிறவர்கள் மட்டுமே, மருத்துவரின் அறிவுரைப்படி, நாட்களை கணக்கிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது என்கிறீர்கள். தாம்பத்ய உறவிலும் பிரச்னை இல்லை என்பதால், கருத்தரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பதில் தப்பே இல்லை!

எனக்கு 21 வயதாகிறது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. பாவாடை கட்டும் இடத்திலும் மற்றும் வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலும் மிகவும் அரிப்பு எடுக்கிறது. அந்த இடமும் மிகவும் கறுப்பாக உள்ளது. ஐந்தரை வருடங்களாக இந்தப் பிரச்னை இருக்கிறது. அரிப்பு எடுக்கும் இடம் புண் போல் ஆகி, மருந்து போட்டவுடன் காய்ந்து போகிறது. நான்கைந்து நாட்களில் மறுபடியும் இதே அவஸ்தை! கிரீம், மாத்திரை, மருந்து, ஆயுர்வேதம் என அனைத்தும் உபயோகப்படுத்தினேன். ஒன்றும் சரியாகவில்லை (மருத்துவரிடமும் காண்பித்தேன். ஆனால், தோல் டாக்டர் இல்லை!). நான் வசிக்கும் இடம் கிராமப்பகுதி. தயவுசெய்து எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடைபெற வழி சொல்வீர்களா?’’ பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் சருமம் கறுப்பு நிறமாக மாறப் பொதுவான காரணங்கள் மூன்று: ஒன்று | உராய்வு. பாவாடையை மிகவும் இறுக்கமாகக் கட்டுவதால், அந்த இடத்தில் அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு, அதனால் கறுப்பு நிறமாக மாறுவதுடன் அரிப்பும் ஏற்படும். இரண்டு | படர்தாமரை போன்ற நுண்ணுயிர் தொற்று. காற்றுப் புகாத மற்றும் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும் இடங்களில் இது ஏற்படும். மூன்று | வியர்வை. அதிகப்படியான வியர்வையினால் கிருமிகள் உருவாகி, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றி, பின் அந்த இடத்தையே கறுப்பாக மாற்றிவிடும். இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும். அது, எது என்று கண்டு பிடித்து, அதை நிவர்த்தி செய்யுங்கள். மேலும், இந்த மூன்றில் உங்கள் பிரச்னைக்கு எது காரணமாக அமைந்தாலும், அதற்கு ‘Lobate-GM’ என்ற கிரீமை, ஒரு நல்ல தோல் மருத்துவரைக் கலந்தாலோசித்தபின், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து காலை வேளையிலும், இரவிலும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதோடு, அரிப்பும் அடங்கி, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கறுப்பு நிறமும் மறைந்துவிடும்!