Home பெண்கள் தாய்மை நலம் பாலூட்டும் போது தாய்மார்கள் கோபப்படாதீர்கள்!

பாலூட்டும் போது தாய்மார்கள் கோபப்படாதீர்கள்!

22

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கோபப்படக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்தும்.

எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும்.

அதே போல் அவசர அவசரமாகவும் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கோபமோ, தேவையற்ற எந்த சிந்தனையும் மனதில் இருக்க கூடாது.

கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன.

தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.